20 ரன்கள் வரை கம்மியா அடிச்சும் நாங்க சி.எஸ்.கே வை ஜெயிக்க இதுதான் காரணம் – ரியான் பராக் பேட்டி

Parag
- Advertisement -

இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு பதினெட்டாவது ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 11-ஆவது லீக் போட்டியானது நேற்று கௌகாத்தி மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சிஎஸ்கே அணியும், ரியான் பராக் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின. அதன்படி நடைபெற்ற இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற சிஎஸ்கே அணியானது முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.

சி.எஸ்.கே அணியை நாங்க வீழ்த்த இதுவே காரணம் : ரியான் பராக்

அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 182 ரன்கள் குவித்தது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சார்பாக அதிகபட்சமாக நிதீஷ் ராணா 81 ரன்களையும், ரியான் பராக் 37 ரன்களையும் குவித்தனர்.

- Advertisement -

பின்னர் 183 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய சென்னை அணியானது ராஜஸ்தான் அணியின் சிறப்பான பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 176 ரன்களை மட்டுமே குவித்தது. இதன் காரணமாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்நிலையில் இந்த போட்டி முடிந்து தாங்கள் பெற்ற வெற்றி குறித்து பேசிய ராஜஸ்தான் அணியின் கேப்டன் ரியான் பராக் கூறுகையில் : உண்மையிலேயே இந்த வெற்றி மகிழ்ச்சி அளிக்கிறது. கடந்த இரண்டு போட்டிகளில் அடைந்த தோல்விக்கு பின்னர் தற்போது மீண்டு வந்ததில் மகிழ்ச்சி. இந்த போட்டியில் நாங்கள் 20 ரன்கள் வரை குறைவாக குவித்து விட்டோம்.

- Advertisement -

மிடில் ஓவர்களின் போது நாங்கள் சிறப்பாக விளையாடி கொண்டிருந்த வேளையில் அடுத்தடுத்து இரண்டு விக்கெட்டுகளை இழக்க இறுதிக்கட்டத்தில் மேலும் விக்கெட்டுகள் சரிந்தன. இதன் காரணமாக நாங்கள் 20 ரன்கள் வரை குறைவாக அடித்து விட்டோம் என்று நினைக்கிறேன்.

இதையும் படிங்க : சிஎஸ்கே அணியை நொறுக்குவற்கான அந்த திட்டத்தை டிராவிட் தான் கொடுத்தாரு.. ஆட்டநாயகன் ராணா பேட்டி

ஆனாலும் பந்துவீச்சின் போது எங்கள் பந்துவீச்சாளர்கள் மிகச் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தியதால் இந்த இலக்கினை வைத்து அவர்களை சுருட்ட முடிந்தது. அதேபோன்று இந்த போட்டியில் நாங்கள் பீல்டிங்கில் சிறப்பாக செயல்பட்டதால் அந்த 20 ரன்கள் குறையும் போக்கி எங்களால் வெற்றி பெற முடிந்தது என ரியான் பராக் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement