சிஎஸ்கே அணியை நொறுக்குவற்கான அந்த திட்டத்தை டிராவிட் தான் கொடுத்தாரு.. ஆட்டநாயகன் ராணா பேட்டி

Nitish rana
- Advertisement -

ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் மார்ச் 30ஆம் தேதி கௌகாத்தியில் நடைபெற்ற 11வது போட்டியில் சென்னையை 6 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்த ராஜஸ்தான் தங்களது முதல் வெற்றியை பெற்றது. அந்தப் போட்டியில் முதலில் விளையாடிய ராஜஸ்தான் 183 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. அதிகபட்சமாக பவர் பிளே ஓவர்களில் சென்னையை அடித்து நொறுக்கிய நித்திஷ் ராணா 81 (35) எடுத்தார்.

சென்னைக்கு அதிகபட்சமாக நூர் அகமது, கலீல் அகமது, பதிரனா தலா 2 விக்கெட்டுகளை சாய்த்தனர். அடுத்ததாக விளையாடிய சென்னைக்கு ரச்சின் ரவீந்திரா 0, ராகுல் திரிபாதி 23, சிவம் துபே 18, விஜய் சங்கர் 9 ரன்னில் அவுட்டாகி ஏமாற்றத்தைக் கொடுத்தனர். அதிகபட்சமாக 63 ரன்கள் எடுத்து போராடிய கேப்டன் ருதுராஜ் முக்கிய நேரத்தில் விக்கெட்டை இழந்தார்.

- Advertisement -

நொறுக்கிய ராணா:

கடைசியில் ஜடேஜா 22*, தோனி 16, ஓவர்டன் 11* ரன்கள் எடுத்து ஃபினிஷிங் செய்யத் தவறியதால் 20 ஓவரில் ரன்களை மட்டுமே எடுத்த சென்னை தங்களது 2வது தோல்வியை பதிவு செய்தது. ராஜஸ்தானுக்கு அதிகபட்சமாக ஹஸரங்கா 4 விக்கெட்டுகளை சாய்த்தார். இந்த வெற்றிக்கு முக்கிய பங்காற்றிய நிதீஷ் ராணா ஆட்டநாயகன் விருதை வென்றார்.

இந்நிலையில் இந்தப்போட்டியில் மூன்றாவது இடத்தில் களமிறங்கி சென்னையை வெளுத்து வாங்கும் திட்டத்தை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் கொடுத்ததாக நித்திஷ் ராணா தெரிவித்துள்ளார். அதை வைத்து சென்னையை விளாசியது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “நான் புதிய பந்தை அதிகமாக பயன்படுத்திக் கொள்ள விரும்பினேன். பவர் பிளே முக்கியம்”

- Advertisement -

டிராவிட்டுடன் திட்டம்:

“ஏனெனில் பந்து பழையதாகும் போது நின்று சுழன்று வரும். நான் பிட்ச் அல்லது பவுலரைப் பார்த்து விளையாடாமல் ஃபீல்டிங்கை பார்த்து விளையாடினேன். பவுலர்களின் வேகத்தைப் பயன்படுத்தி அடித்தேன். கடந்தப் போட்டிகளில் பந்தை நான் கடினமாக அடித்ததாக உணர்ந்தேன். எனவே அதை ஆராய்ந்து இந்தப் போட்டியில் மாற்றம் செய்தேன்”

இதையும் படிங்க: அந்த 2 முன்னாள் வீரர்களை மிஸ் பன்றோம்.. 180 கூட சேசிங் பண்ண முடியாம சிஎஸ்கே தோற்க இதான் காரணம்.. ருதுராஜ்

“3வது இடத்தில் பேட்டிங் செய்தது திட்டங்களின் ஒரு பகுதியாகும். அதை எங்களுடையப் பயிற்சியாளர்கள் பரிந்துரை செய்தனர். அணிக்காக நான் எந்த இடத்திலும் விளையாடத் தயாராக இருக்கிறேன். உடைமாற்றும் அறையில் அது பற்றி நான் ராகுல் டிராவிட் மற்றும் விக்ரம் ரத்தோர் ஆகியோரிடம் பேசினேன். அப்போது இன்று 3வது இடத்தில் விளையாடப் போகிறேன் என்பதை முடிவு செய்தோம்” என்று கூறினார்.

Advertisement