ரஷீத் கானையும் மிஞ்சி டி20 போட்டிகளில் வரலாற்று சாதனையை நிகழ்த்திய வனிந்து ஹசரங்கா – விவரம் இதோ

Hasaranga
- Advertisement -

இலங்கை கிரிக்கெட் அணியை சேர்ந்த முன்னணி சுழற்பந்து வீச்சாளரான வனிந்து ஹசரங்கா கடந்த 2017-ஆம் ஆண்டு இலங்கை அணிக்காக சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அறிமுகமாகி இதுவரை நான்கு டெஸ்ட் போட்டிகள், 61 ஒருநாள் போட்டிகள் மற்றும் 79 டி20 போட்டிகளில் அந்த அணிக்காக விளையாடி உள்ளார். அது தவிர்த்து ஐபிஎல் தொடரிலும் 26 போட்டிகளில் விளையாடியுள்ளார்.

வரலாற்று சாதனையை நிகழ்த்திய வனிந்து ஹசரங்கா :

தற்போது இலங்கை அணியின் நம்பர் 1 சுழற்பந்து வீச்சாளராக இருக்கும் வனிந்து ஹசரங்கா இலங்கை அணிக்காக சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடுவதை தாண்டி உலகெங்கிலும் நடைபெற்று வரும் முக்கிய டி20 லீக் தொடர்களில் பங்கேற்று விளையாடி வருகிறார்.

- Advertisement -

அந்த வகையில் தற்போது அவர் இன்டர்நேஷனல் லீக் டி20 தொடரில் விளையாடி வரும் வேளையில் மாபெரும் சாதனை ஒன்றினை நிகழ்த்தி அசத்தியுள்ளார். அந்த வகையில் அவர் செய்த அந்த வரலாற்று சாதனை யாதெனில் :

டெசர்ட் வைபர்ஸ் அணிக்காக இன்டர்நேஷனல் லீக் டி20 தொடரில் விளையாடி வரும் அவர் ஷார்ஜா வாரியர்ஸ் அணிக்கு எதிராக மூன்று விக்கெட்டுகளை எடுத்ததன் மூலம் டி20 கிரிக்கெட்டில் 300 விக்கெட்டுகளை அதிவேகமாக வீழ்த்திய பந்துவீச்சாளர் என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

- Advertisement -

சர்வதேச கிரிக்கெட், பிரான்ச்சைஸி, ஐ.பி.எல் என அனைத்து வகையான டி20 கிரிக்கெட்டையும் சேர்த்து 209 போட்டிகளில் விளையாடி 300 விக்கெட்டுகளை அவர் கைப்பற்றியுள்ளார். இதற்கு முன்னதாக ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளரான ஆண்ட்ரே டை 211 போட்டியில் விளையாடி 300 விக்கெட்டுகளை எடுத்ததே சாதனையாக இருந்தது. அதனை தகர்த்து தற்போது ஹசரங்கா முதலிடம் பிடித்துள்ளார்.

இதையும் படிங்க : புகை மூட்டமும் இல்ல.. பனி மூட்டமும் இல்ல.. இங்கிலாந்து வீரரின் தவறை சுட்டிக்காட்டிய – ரவிச்சந்திரன் அஷ்வின்

அதுமட்டும் இன்றி உலகின் தலைசிறந்த ஸ்பின்னராக பார்க்கப்படும் ரஷீத் கான் தனது 213-வது போட்டியில் தான் 300 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். தற்போது அவரையும் கடந்துள்ள ஹசரங்கா அதிவேகமாக 300 டி20 விக்கெட்டுகளை வீழ்த்திய சுழற்பந்து வீச்சாளர் என்ற சாதனையையும் நிகழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement