இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஜாஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து கிரிக்கெட் அணியானது தற்போது இந்திய அணிக்கு எதிராக நடைபெற்று வரும் ஐந்து போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதல் இரண்டு ஆட்டங்கள் முடிவடைந்த நிலையில் இந்திய அணியானது இரண்டுக்கு பூஜ்யம் (2-0) என்ற கணக்கில் முன்னிலை வகிக்கின்றது.
நீங்க செய்யும் தப்பு இதுதான் புரூக் :
அதனை தொடர்ந்து நாளை இவ்விரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது டி20 போட்டி நடைபெற இருக்கிறது. நாளைய போட்டியிலும் தோல்வியை சந்தித்தால் இந்திய அணியிடம் இங்கிலாந்து தொடரை இழக்கும் இதன் காரணமாக தற்போது இங்கிலாந்து அணியின் வீரர்கள் தீவிர பயிற்சினை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த தொடரில் இங்கிலாந்து அணியின் மோசமான பேட்டிங்கே அவர்களது தோல்விக்கு மிக முக்கியமான காரணமாக பார்க்கப்படுகிறது. அதிலும் குறிப்பாக அந்த அணியின் நட்சத்திர வீரராக பார்க்கப்படும் ஹாரி புரூக் வருண் சக்கரவர்த்திக்கு எதிராக தொடர்ந்து இரண்டு போட்டியில் ஆட்டமிழந்தது அவரது பலவீனத்தை வெளிக்காட்டியது.
இருந்தாலும் ஹாரி புரூக் கொல்கத்தா மைதானத்தில் புகை மூட்டமாக இருந்ததால் பந்தை பார்க்க முடியவில்லை என்று கூறி இருந்தார். அதேபோன்று சென்னையில் நடைபெற்ற போட்டியிலும் அவர் பந்தை கணிக்காமல் ஆட்டமிழந்தார். இதனால் அவரது இந்த கருத்திற்கு பலரும் கிண்டலான கருத்துக்கள் மூலம் பதிலடி கொடுத்து வருகின்றனர். அந்த வகையில் தமிழக வீரராக அஷ்வின் கூறுகையில் :
சென்னையில் எந்த புகை மூட்டமும் இல்லை, பனிமூட்டமும் இல்லை. வருண் சக்கரவர்த்தியின் பந்துவீச்சை அடித்து ஆடுவது உண்மையிலேயே அவருக்கு சிரமமாக இருந்தது. நான் புரூக்கிற்கு ஒரு விஷயத்தை மட்டும் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். வருண் சக்கரவர்த்தியால் லெக் ஸ்பின் வீச முடியாது அவர் வீசுவது கூக்ளி. அவர் வீசும் பந்தை நீங்கள் கைகளில் இருந்து எப்படி வருகிறது என்பதை பார்க்கவில்லை.
இதையும் படிங்க : இந்திய அணியின் அடுத்த சூப்பர் ஸ்டார் இவர்தான்.. இவரை 3 பார்மேட்டிலும் விளையாட வைங்க – அம்பத்தி ராயுடு கருத்து
அதேபோன்று அவர் பந்தை உங்களால் கணிக்க முடியவில்லை. ஸ்டம்பை மறைத்துக்கொண்டு நின்று பெரிய ஷாட் ஆட முயல்கின்றீர்கள். அதனால் தான் ஆட்டமிழந்தீர்கள். வருண் சக்கரவர்த்தி போன்ற ஒரு சுழற்பந்துவீச்சாளரை எதிர்த்து ஆடும் போது சரியான இடத்தில் நின்று பந்தையும் முறையாக பார்க்க வேண்டும் என அஸ்வின் கூறியது குறிப்பிடத்தக்கது.



