இந்திய அணியின் அடுத்த சூப்பர் ஸ்டார் இவர்தான்.. இவரை 3 பார்மேட்டிலும் விளையாட வைங்க – அம்பத்தி ராயுடு கருத்து

Rayudu-and-Tilak
- Advertisement -

இங்கிலாந்து அணிக்கெதிராக நடைபெற்று வரும் ஐந்து போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் விளையாடியுள்ள இந்திய அணியானது அசத்தலான செயல்பாட்டை வெளிப்படுத்தி இரண்டு போட்டியிலும் வெற்றி பெற்று இந்த தொடரின் தற்போதைய நிலையிலேயே இரண்டுக்கு பூஜ்யம் (2-0) என்ற கணக்கில் வலுவான முன்னிலையை பெற்றுள்ளது.

இந்திய அணிக்கு கிடைத்த அடுத்த சூப்பர் ஸ்டார் :

இந்த தொடரின் இரண்டாவது டி20 போட்டியானது சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று முடிந்த வேளையில் 166 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்ட வேளையில் முன்னனி பேட்ஸ்மேன்கள் பலரும் பேட்டிங் செய்ய தடுமாறினர்.

- Advertisement -

ஆனால் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய திலக் வர்மா 72 ரன்கள் அடித்து ஆட்டமிழக்காமல் இந்திய அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார். அவரது இந்த சிறப்பான செயல்பாடு பலரது பத்தியும் பாராட்டினை பெற்று வருகிறது.

இந்நிலையில் இந்திய அணிக்கு கிடைத்த அடுத்த சூப்பர் ஸ்டார் திலக் வர்மா தான் என்றும் அவரை மூன்று வகையான இந்திய அணியிலும் விளையாட வைக்க வேண்டும் என்று இந்திய அணியின் முன்னாள் வீரரான அம்பத்தி ராயுடு ஆதரவு தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர் கூறுகையில் : திலக் வர்மாவை நான் சிறிய வயதிலிருந்து பார்த்து வருகிறேன். அவர் அப்போதிலிருந்து மிகச் சிறப்பாக விளையாடி வருகிறார்.

- Advertisement -

தற்போது இந்திய அணிக்காகவும் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். சூரியகுமார் யாதவ் கேப்டனான பிறகு அவருக்கு இன்னும் உத்வேகம் அதிகரித்துள்ளது. சூரியகுமார் யாதவின் நம்பிக்கையை காப்பாற்றும் விதமாக திலக் வர்மா அற்புதமான பேட்டியை வெளிப்படுத்தி வருகிறார்.

இதையும் படிங்க : தோல்விக்கு இந்தியாவின் சுத்தத்தை சாக்கு சொன்ன இங்கிலாந்து அவமானப் பட்டுட்டாங்க.. ஆகாஷ் சோப்ரா விமர்சனம்

இந்திய அணிக்கு தற்போது கிடைத்துள்ள சூப்பர் ஸ்டார் திலக் வர்மா தான் அவரை ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளிலும் சேர்க்க வேண்டும். அவரிடம் அந்த அளவிற்கு மிகச் சிறப்பான திறமை உள்ளது. மூன்று வகையான இந்திய அணியிலும் அவரால் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்த முடியும் என அம்பத்தி ராயுடு கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement