தோல்விக்கு இந்தியாவின் சுத்தத்தை சாக்கு சொன்ன இங்கிலாந்து அவமானப் பட்டுட்டாங்க.. ஆகாஷ் சோப்ரா விமர்சனம்

- Advertisement -

இங்கிலாந்து கிரிக்கெட் அணிக்கு எதிராக இந்தியா தங்களது சொந்த மண்ணில் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இந்தத் தொடரின் முதல் போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்ற இந்தியா ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றது. அடுத்ததாக நடைபெற்ற இரண்டாவது போட்டியிலும் 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி 2 – 0* என்ற கணக்கில் ஆரம்பத்திலேயே முன்னிலையை அதிகரித்துள்ளது.

முன்னதாக அந்தத் தொடரின் முதல் போட்டி கொல்கத்தாவில் நடைபெற்றது. கொல்கத்தா வட மாநிலத்தில் இருக்கிறது என்பதால் அங்கு தற்போதைய குளிர்காலத்தில் வழக்கத்திற்கு மாறாக அதிக பனிமூட்டம் இருந்தது. ஆனால் அந்த பனி புகையை போல் இருந்ததால் முதல் போட்டியில் தம்முடைய விக்கெட்டை இழந்ததாக இங்கிலாந்து வீரர் ஹரி ப்ரூக் தெரிவித்தார்.

- Advertisement -

இங்கிலாந்தின் சாக்கு:

ஏனெனில் தெளிவாக பந்தை பார்க்க முடியாததால் வருண் சக்கரவர்த்தியை தம்மால் சிறப்பாக எதிர்கொள்ள முடியவில்லை என்று அவர் கூறினார். எனவே சென்னையில் காற்று தெளிவாக சுத்தமாக இருக்கும் என்று நம்புவதாக அவர் தெரிவித்தார். அந்த நிலையில் சென்னையில் நடைபெற்ற இரண்டாவது போட்டியில் பெரிய அளவில் பனியில்லாததால் காட்சிகளும் பந்தும் தெளிவாகத் தெரிந்தது.

ஆனால் அப்படி இருந்தும் மீண்டும் வருண் சக்கரவர்த்தி 13 ரன்களில் ப்ரூக்கை கிளீன் போல்டாக்கி தெறிக்க விட்டார். இந்நிலையில் சிறப்பாக விளையாடுவதை விட்டுவிட்டு இந்தியாவில் இருக்கும் காற்றின் சுத்தத்தை பற்றி பேசிய இங்கிலாந்து அணியினர் சென்னையில் அவமானமாக உணர வேண்டும் என்று முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா விமர்சித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

சென்னையில் அவமானம்:

“காற்றின் தரத்தை ஒரு சாக்காக தெரிவித்த இங்கிலாந்து அணியினர் அவமானமாக உணர வேண்டும். பனியின் காரணமாக பந்தை நன்றாக பார்க்க முடியவில்லை என்று கடந்த போட்டியில் ஹரி ப்ரூக் தெரிவித்தார். ஆனால் இம்முறை பந்து நன்றாக தெளிவாக தெரிந்தது. அப்போதும் அவரைத் தாண்டி பந்து ஸ்டம்பில்ஸ் சென்று அடித்தது”

இதையும் படிங்க: 178 ரன்ஸ் 6 விக்கெட்ஸ்.. பாகிஸ்தானை சொந்த மண்ணில் தெறிக்க விடும்.. வரலாற்று வெற்றி பெறுமா?

“அந்த ஷார்ட் பந்தை நீங்கள் உங்களுடைய காலுக்கு முன்பாக விளையாடினார்கள். அது உங்களுடைய ஸ்டம்பை அடித்தது. உண்மையில் அந்தப் பந்தை உங்களால் வருண் சக்கரவர்த்தியின் கைகளில் இருந்தே படிக்க முடியவில்லை” என்று கூறினார். இது போக ரவி சாஸ்திரி மற்றும் சுனில் கவாஸ்கர் ஆகிய முன்னாள் இந்திய வீரர்களும் நேரலை வர்ணனையில் ஹரி ப்ரூக்கை கலாய்க்கும் வகையில் பேசி இங்கிலாந்துக்கு பதிலடி கொடுத்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement