அன்று 500 ரூபாய்க்கு ஹோட்டலில் வெயிட்டர் வேலை…இன்று ஐபிஎல் லில் 85 லட்சத்துக்கு ஏலம்போன வீரர்- யார் தெரியுமா ?

kulnath
- Advertisement -

இந்த ஐபிஎல் சீசனில் பெங்களூரு அணிக்காக விளையாடிவருபவர் வேகப்பந்துவீச்சாளரான குல்வந்த் கேஜ்ரோலியா. இவர் இந்த ஐபிஎல் சீசனில் ரூபாய் 85கோடி ரூபாய்க்கு ஏலத்திற்கு எடுக்கப்பட்டுள்ளார்.25வயதேயான இளம் வீரரான குல்வந்த் கேஜ்ரோலியா ராஜஸ்தான் மாநிலம், ஜுன்ஜுனு என்கிற சிறிய கிராமத்தில் சாதாரண குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர்.

kulvandh

- Advertisement -

சிறுவயது முதலே கிரிக்கெட்டில் ஆர்வமுள்ள குல்வந்த் கேஜ்ரோலியா வறுமையின் காரணமாக மளிகைக் கடை மற்றும் ஹோட்டலில் கிளீனராகவும், சர்வராகவும் பணியாற்றியுள்ளார்.கடந்த 2016ம் ஆண்டு கோவாவிலிருந்து டெல்லி சென்ற குல்வந்த் கேஜ்ரோலியா அசோக் விஹார் பகுதியில் நண்பர்கள் சிலருடன் தங்கி ஒரு ஹோட்டலில் பணியாற்றியுள்ளார்.

இவர் ஹோட்டலில் பணியாற்றிக்கொண்டே காலை நேரத்தில் கிரிக்கெட்டில் பந்துவீச்சுப் பயிற்சியும் எடுத்துள்ளார்.இவரது அபாரமான பந்துவீச்சு திறனை பார்த்த சிலர் தங்களது அணிக்கு விளையாட ஒருநாளைக்கு 500 ரூபாய் தந்துள்ளனர். இவரும் ரூ.500 பெற்றுக்கொண்டு பல அணிகளுக்கு பந்துவீச்சாளராக விளையாடியுள்ளார்.

kulvanth

பின்னர் படிப்படியாக உயர்ந்து தனது திறமையால் டெல்லி அணிக்காக விளையாட தொடங்கினார். 2017ம் ஆண்டு ரஞ்சிக்கோப்பையில் சிறப்பாக விளையாடிய கேஜ்ரோலியா அந்தாண்டு டெல்லி அணி ரஞ்சிக்கோப்பையை வெல்ல முக்கிய காரணமாக விளங்கினார்.கடினமான உழைப்பாலும் திறமையாலும் முன்னேறிய கேஜ்ரோலியா பத்திரிகையாளர்களை சந்தித்து பேசியதாவது “கோவாவிலிருந்த நான் எனது குடும்பத்தினரிடம் அகமதாபாத் செல்வதாக பொய் சொல்லிவிட்டு டெல்லி சென்றேன்.

- Advertisement -

எனது திறமையால் 2017-ம் ஆண்டு ரஞ்சிக் கோப்பையில் டெல்லி அணியில் விளையாட எனக்கு இடம் கிடைத்தது. பின்னர் சிறப்பாக விளையாடியதால் என்னை கடந்த ஆண்டு ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 10 லட்ச ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்தார்கள். ஆனால் அந்த தொடரில் ஒருபோட்டியில் கூட எனக்கு விளையாட வாய்ப்பு கிடைக்கவில்லை.

ஆனால் இந்த ஐபிஎல் சீசனில் 85இலட்ச ரூபாய்க்கு பெங்களூரு அணி என் மீது நம்பிக்கை வைத்து ஏலத்தில் எடுத்தது.விராட் கோலி, டீவில்லியர்ஸ் போன்ற முக்கிய வீரர்களுடன் விளையாடுவதில் பெருமையாக உள்ளது” என்றார்.

Advertisement