இதெல்லாம் ஒரு கொண்டாட்டமா? உற்சாக பானத்தை ஷூவில் ஊற்றி குடித்த ஆஸ்திரேலிய வீரர்கள்

Wade
- Advertisement -

ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்ற டி20 உலக கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் நேற்று 8 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி பெற்று முதன்முறையாக டி20 சாம்பியன் பட்டத்தினை வென்றுள்ளது. 173 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய ஆஸ்திரேலிய அணியானது 18.5 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 173 ரன்கள் குவித்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்த மிட்செல் மார்ஷ் 77 ரன்கள் அடித்து அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார். இந்நிலையில் போட்டி முடிந்ததுமே ஆஸ்திரேலிய வீரர்கள் இந்த வெற்றியை மைதானத்தில் வைத்து கோலாகலமாக கொண்டாடினர்.

- Advertisement -

மேலும் மைதானத்திலேயே உற்சாக பானங்களை ஒருவரின் மீது ஒருவர் பீய்ச்சி அடித்துக்கொண்டனர். அதன்பிறகு தனித்தனியே அனைவரும் கோப்பையுடன் புகைப்படத்தை எடுத்துக்கொண்டனர். பின்னர் அந்தக் கொண்டாட்டத்தை வீரர்களின் ஓய்வு அறையிலும் தொடர்ந்தனர்.

இப்படி ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையில் இந்த வெற்றிக் கொண்டாட்டத்தில் ஈடுபட டிரெஸ்ஸிங் ரூமில் இருந்த ஆஸ்திரேலிய விக்கெட் கீப்பர் மேத்யூ வேட் தனது ஷூவை கழற்றி அதில் உற்சாக பானத்தை ஊற்றி குடித்தார். அதன் பின்பு அவரைப் பார்த்த மார்க்கஸ் ஸ்டாய்னிஸ் அவரது ஷூவை வாங்கி அதில் உற்சாக பானத்தை ஊற்றி அவரும் குடிக்கிறார். இது தொடர்பான வீடியோ தற்போது ஐசிசியின் ட்விட்டர் பக்கத்தில் வெளியாகியுள்ளது.

- Advertisement -

இதையும் படிங்க : ஐ.பி.எல் தொடரில் சொதப்பி இருந்தாலும் உ.கோ தொடரில் வார்னர் விளையாட காரணம் இதுதான் – ஆரோன் பின்ச்

ஏற்கனவே இதுபோன்ற விதவிதமான கொண்டாட்டங்கள் கிரிக்கெட்டில் இருந்தாலும் இது தேவைதானா ? என்று ரசிகர்கள் கேள்வி எழுபபி வருகின்றனர். மேலும் இதுபோன்று ஒரு வெற்றி கொண்டாட்டத்தை இதுவரை பார்த்ததில்லை என்றும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement