ஐ.பி.எல் தொடரில் சொதப்பி இருந்தாலும் உ.கோ தொடரில் வார்னர் விளையாட காரணம் இதுதான் – ஆரோன் பின்ச்

Finch-1
- Advertisement -

ஐக்கிய அரபு அமீரகத்தில் அன்மையில் நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் அணிக்காக விளையாடிய டேவிட் வார்னர் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் தொடரின் பாதியிலேயே கேப்டன் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டார். அதுமட்டுமின்றி இறுதியில் சில போட்டிகளில் அவர் அணியில் சேர்க்கப்படாமல் வெளியிலும் அமர வைக்கப்பட்டார். இந்நிலையில் அதே ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று முடிந்த இந்த டி20 உலக கோப்பை தொடரில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெறுவதற்கு முக்கிய காரணமாக வார்னர் திகழ்ந்தார்.

warner 1

- Advertisement -

இந்த தொடரில் 289 ரன்கள் குவித்த அவர் தொடர் நாயகனாகவு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இந்த டி20 உலக கோப்பை தொடரில் ஆஸ்திரேலிய அணியின் வெற்றிக்கு முக்கிய பக்கபலமாக வார்னர் இருந்தார் என்று கூறுவதில் எந்தவித தயக்கமும் இல்லை அந்த அளவிற்கு தனது சிறப்பான பேட்டிங் மூலம் ஆஸ்திரேலிய அணியை அவர் கொண்டு சென்றார்.

சன்ரைஸ் அணியில் எதிர்பார்த்த அளவிற்கு பேட்டிங் செய்ய செய்யாத வார்னர் மீது பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன. ஆனாலும் நடப்பு உலக கோப்பை தொடரின் துவக்க ஆட்டக்காரராக அவரே இறங்குவார் என்று கேப்டன் பின்ச் கூறியிருந்தார். இந்நிலையில் இந்த தொடரில் வார்னரின் பிரமாதமான ஆட்டம் குறித்து பேட்டி ஒன்றை அளித்துள்ள பின்ச் கூறுகையில் :

warner

தொடர் நாயகனாக டேவிட் வார்னர் வருவார் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. ஆனால் நான் சில மாதங்களுக்கு முன்பு அணியின் பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கரை அழைத்து வார்னர் பற்றி கவலைப்பட எதுவுமில்லை, நீங்கள் கவலைப்பட வேண்டாம். அவர் நிச்சயம் இந்த தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி தொடர் நாயகனாக இருப்பார் என்று சொன்னேன்.

- Advertisement -

இதையும் படிங்க : இந்த பைனல் மேட்ச்ல நாங்க எங்க பெஸ்ட்ட தான் கொடுத்தோம். ஆனாலும் – தோல்வி குறித்து பேசிய வில்லியம்சன்

டேவிட் வார்னர் அவ்வளவுதான், இனி அவரால் சிறப்பாக விளையாட முடியாது, அவரது கட்டம் முடிந்துவிட்டது என்றெல்லாம் விமர்சகர்கள் எழுதி இருந்தார்கள். ஆனால் அதைப்பற்றி நான் கவலைப்படவில்லை நிச்சயம் எல்லா நேரத்திலும் சிறப்பாக விளையாடும் பேட்ஸ்மேன்களில் வார்னரும் ஒருவர் அவர் ஒரு போராளி என்று பின்ச் பேசியது குறிப்பிடத்தக்கது.

Advertisement