இந்திய டி20 அணியில் கடைசி வரை இவருக்கு வாய்ப்பு கிடைக்காது – அதிர்ச்சி தகவல் கொடுத்த லக்ஷ்மனண்

- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் இன்று அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற இருக்கிறது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதல் போட்டி இன்று இரவு ஏழு மணிக்கு துவங்குகிறது. இந்த போட்டிக்கான எதிர்பார்ப்பு கடந்த சில நாட்களாக அதிகரித்து வரும் நிலையில் இந்த தொடரில் சிறப்பாக செயல்படும் வீரர்கள் எதிர்வரும் டி20 உலகக்கோப்பை தொடரில் இடம்பெறுவார்கள் என்பதால் ரசிகர்கள் மத்தியில் இந்த தொடர் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

INDvsENG

- Advertisement -

இந்த டி20 தொடருக்கான அணியில் புதுமுக வீரர்கள் சூர்யகுமார் யாதவ், ராகுல் திவாதியா மற்றும் இஷான் கிஷான் ஆகியோர் இடம்பிடித்துள்ளனர். இவர்களில் யாருக்கு இந்த தொடரில் வாய்ப்பு கிடைக்கும் என்பது குறித்து இன்னும் தெளிவான தகவல்கள் வெளியாகவில்லை. இந்நிலையில் தற்போது இந்த தொடருக்கு முன் பத்திரிக்கை ஒன்றுக்கு பேட்டியளித்துள்ள இந்திய அணியின் முன்னாள் வீரரான வி.வி.எஸ் லட்சுமணன் இளம் வீரர்களுக்கு இந்த தொடரில் வாய்ப்பு கிடைக்காது என்று திட்டவட்டமாகத் தனது கருத்தினை வெளிப்படுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில் : இந்திய அணியின் நடுவரிசை பலத்துடன் திகழ்கிறது. நான்காவது வரிசையில் மட்டுமே தற்போது அணியில் குழப்பம் நீடிக்கிறது. அந்த இடத்தை ஸ்ரேயாஸ் அய்யர் தக்கவைத்துக்கொள்ள அதிக வாய்ப்பு உள்ளது. மற்ற இடங்களுக்கு போட்டி இருக்காது என்று கூறியுள்ளார். மேலும் தொடர்ந்து பேசிய அவர் 2020 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திற்கு பின் டி20 அணியில் இடம்பெறாமல் இருக்கும் ரிஷப் பண்ட் மட்டும் நிச்சயம் இந்த தொடரில் களமிறங்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

sky

ஏனெனில் பல காலமாக இந்திய அணியில் இடம்பெறாமல் இருந்து வருகிறார். அதுமட்டுமின்றி தற்போது அவர் நல்ல பார்மில் உள்ளதால் ஐந்தாவது வரிசையில் அவர் விளையாடவும், ஆறாவது வரிசையில் ஹார்திக் பாண்டியா பொருத்தமாக இருப்பார் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் சூர்யகுமார் யாதவ், ராகுல் திவாதியா, இஷான் கிஷான் ஆகிய புதுமுக வீரர்களுக்கு இந்த தொடரில் வாய்ப்பு கிடைப்பது சிரமம்தான் என்றும் தொடர்ந்து அவர்கள் பெஞ்சிலேயே தான் அமர வேண்டும் என்ற கருத்தையும் அவர் குறிப்பிட்டுள்ளது தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement