ஜடேஜா வேணாம். இனிமே எல்லாத்தையும் இவர் பாத்துப்பாரு – வி.வி.எஸ் லஷ்மணன் அதிரடி

Laxman
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரானது தற்போது இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் முதல் நான்கு போட்டிகள் முடிவடைந்த நிலையில் இந்திய அணி 2 க்கு 1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்த தொடரின் 4வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்சில் சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தாலும் இரண்டாவது இன்னிங்ஸின் போது மீண்டும் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.

IND

- Advertisement -

இந்த 4 ஆவது போட்டியில் இங்கிலாந்து அணியை 157 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அசத்தலான வெற்றியைப் பெற்றது. இந்த வெற்றிக்கு முக்கிய காரணமாக இந்திய அணியில் வேகப்பந்து வீச்சாளரான ஷர்துல் தாகூர் பார்க்கப்படுகிறார். ஏனெனில் இந்த போட்டியில் இரண்டு இன்னிங்சிலும் விரைவாக அரை சதம் அடித்த அவர் பவுலிங்கிலும் சிறப்பாக செயல்பட்டார். அதனால் அவருக்கான பாராட்டுகள் குவிந்து வருகின்றது .

இந்நிலையில் தற்போது இந்திய அணியின் முன்னாள் வீரரான வி.வி.எஸ் லட்சுமணன் இந்திய அணியில் ஷர்துல் தாகூரின் இடம் குறித்து பேசுகையில் கூறியதாவது : ரவீந்திர ஜடேஜா டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிகமான ஓவர்களை வீசுவது கிடையாது. அதற்கான தேவையும் அவருக்கு ஏற்படவில்லை. இதன் காரணமாக அவர் அடுத்த போட்டியில் இருக்க வேண்டாம் என நான் கருதுகிறேன்.

Thakur 4

ஷர்துல் தாகூர் பேட்டிங் மற்றும் பௌலிங் என இரண்டும் சிறப்பாக செயல்படுவதால் அவரை 5வது டெஸ்ட் போட்டியில் ஆல்-ரவுண்டராக பயன்படுத்தலாம். அவரை நாம் ஆல்-ரவுண்டராக பயன்படுத்துவதன் மூலம் இன்னொரு பேட்ஸ்மேனை அணியில் அதிகமாக சேர்க்க முடியும். இதன் காரணமாக இந்திய அணியின் பலம் அதிகரிக்கும் என்று அவர் கருத்து தெரிவித்துள்ளார்.

thakur 1

இந்திய நிர்வாகமும் அவரை திட்டமிட்டபடி செயல்படுத்தி வருகிகிறது. அவரும் தனக்கு கொடுக்கப்பட்ட வாய்ப்புகளை சிறப்பாக செயல்படுத்தி வருவதால் லஷ்மணன் கூறியது போலவே ஷர்துல் தாகூரை ஆல்-ரவுண்டராக பயன்படுத்தினால் நிச்சயம் அணிக்கு நன்மையாகவே இருக்கும் என கிரிக்கெட் நிபுணர்களும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement