இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் தற்போது இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதலாவது டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் அண்மையில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் இங்கிலாந்து அணி 277 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை அபாரமாக வீழ்த்தியது. அதுமட்டுமின்றி இத்தொடரில் 1-0 என்ற கணக்கில் இங்கிலாந்து அணி முன்னிலையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் அடுத்த இரண்டாவது டெஸ்ட் போட்டி நாளை சேப்பாக்கம் மைதானத்தில் துவங்க உள்ளது. இந்நிலையில் நாளைய போட்டியில் இந்திய அணி இங்கிலாந்து அணியை வீழ்த்துவது குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரரான லட்சுமணன் தனது யோசனையை தெரிவித்துள்ளார். அதன்படி இந்திய அணியின் வீரரான ரோகித் சர்மா மற்றும் ரஹானே ஆகியோர் நாளைய போட்டியில் சிறப்பாக செயல்பட வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் :
இந்திய அணியின் முன்னணி வீரர்களான ரஹானே மற்றும் ரோகித் ஆகியோர் இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர்களை எதிர்கொள்ள தயார் படுத்திக்கொள்ள வேண்டும். ரோகித் சர்மா எதிர்பார்த்த அளவிற்கு சிறப்பாக செயல்படவில்லை. ஒரு பேட்ஸ்மேன் பந்து வீச்சை எவ்வாறு சமாளிக்க வேண்டும் என்பதை நன்றாகத் தெரிந்து வைத்திருக்க வேண்டும். மேலும் அவர் பந்தை கவனமாக கையாள வேண்டும். அது மட்டுமின்றி இந்திய அணியின் மிடில் ஆர்டர் ரஹானேவை பெருமளவு நம்பி உள்ளதால் அவரும் தனது பொறுமை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஆக வேண்டும்.
இவர்கள் இருவரும் சற்று கவனத்துடன் விளையாடினால் அதே இந்திய அணியால் இங்கிலாந்து அணியை வீழ்த்த முடியும். மேலும் இந்த பாலை அடிக்க வேண்டுமோ அதை மட்டுமே அடிக்க முயற்சி செய்ய வேண்டும். மற்றபடி வேறு எதையும் முயற்சி செய்ய வேண்டாம் மற்ற பந்துகளை விடுவதே சிறந்தது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். குறிப்பாக ஆர்ச்சர் போன்ற அதிவேகமான பந்துவீச்சாளர்கள் அதிக பவுன்சர்களை வீச கூடியவர்கள். அவர்கள் மிக கவனமாக கையாள வேண்டும் என லட்சுமணன் கூறியுள்ளார்.
அவர் கூறியபடி ரஹானே மற்றும் ரோஹித் ஆகியோர் எதிர்பார்த்த அளவு முதல் போட்டியில் சிறப்பாக செயல்படவில்லை. ரோஹித் முதல் போட்டியில் இரு இன்னிங்சிலும் சேர்த்து 18 ரன்களையும், ரஹானே 1 ரன்னை மட்டுமே அடித்தனர். இவர்களின் இந்த மோசமான செயல்பாடு காரணமாகவே இந்திய அணி 277 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்திடம் மண்ணைக் கவ்வியது குறிப்பிடத்தக்கது.