யார் என்ன சொன்னாலும் அது பத்தி யோசிக்காதீங்க. இந்த வருஷம் ஐ.பி.எல் தொடரில் நிச்சயம் இது இருக்கும் – வி.வி.எஸ் லஷ்மணன் பேட்டி

Laxman-1
- Advertisement -

பல்வேறு இன்னல்களை கடந்து ஐபிஎல் தொடரின் 13 வது சீசன் பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே வரும் செப்டம்பர் 19-ஆம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் துவங்குகிறது என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அனைத்து அணிகளும் தற்போது ஐக்கிய அரபு அமீரகத்திற்கு சென்று அடைந்துவிட்டன. மேலும் சில நாட்கள் தனிமைப்படுத்தலுக்கு பிறகு இந்த தொடருக்கான பயிற்சிகளும் ஆரம்பமாக உள்ளன.

Dubai

- Advertisement -

உலகம் முழுவதும் பரவி வரும் கொடிய கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக இந்த ஐபிஎல் தொடர்ருக்கான கடும் கட்டுப்பாடுகள் மற்றும் நெறிமுறைகள் ஆகியவை வீரர்களும், நிர்வாகிகளும் கடைபிடிக்க வேண்டும் என்று அனைத்து ஐபிஎல் அணிகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளன. தொடரில் பங்கேற்கும் 8 அணிகளும் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு சென்று அடைந்து விட்டன. அணி வீரர்கள் தங்கள் ஓட்டல்களிலும், ரிசார்ட்களிலும் ஆறு நாட்கள் தனிமைப் படுத்திக் கொண்டு பிறகு ஆகஸ்ட் 28-ஆம் தேதி முதல் பயிற்சிகளில் ஈடுபடுவார்கள் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற இருக்கும் இந்த ஐபிஎல் தொடர் குறித்து இந்திய அணியின் முன்னாள் பேட்ஸ்மேனும், தற்போதைய சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் வழிகாட்டியான வி.வி.எஸ் லட்சுமணன் ரசிகர்கள் இன்றி நடைபெறும் இந்தத்தொடர் குறித்து பேட்டி ஒன்றினை அளித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அந்த செய்தியை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.

SRH

மைதானத்தில் ரசிகர்கள் இல்லாத போதிலும் வழக்கம் போலவே ஐபிஎல் போட்டிகள் ரசிகர்களுக்கு கூடுதல் உற்சாகத்தையும், கொண்டாட்டத்தையும் அளிக்கும் என்று தான் நம்புவதாக அவர் கூறி உள்ளார். மேலும் இதன் மூலம் ஐ.பி.எல் சக்தியோ அல்லது சுவாரசியமோ சற்றும் குறையாது என்றும் அவர் கூறியுள்ளார். மேலும் ஐ.பி.எல் போட்டிகளின் தரம் குறையும் என்று யாரும் நினைக்க வேண்டாம் என்று அவர் தெரிவித்துள்ளார்.

SRH

மேலும் யூ.ஏ.இ நாட்டில் மைதானங்கள் மாறுபட்டு இருக்கும் என்றாலும் அதை நிவர்த்தி செய்யும் வகையில் அதன் ஊழியர்கள் மெனக்கெட்டு பிட்சை பராமரித்து வருவதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மேலும் சன் ரைசர்ஸ் அணியின் மிடில் ஆர்டர் வீரர்களை பலப்படுத்தும் வகையில் தேர்ந்தெடுத்து உள்ளதாகவும், அணியில் துடிப்பான இளம் வீரர்களும், அனுபவமிக்க மூத்த வீரர்களும் இருப்பதால் சன்ரைசர்ஸ் சிறப்பாக விளையாடும் என்றும் அவர் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement