சின்ன வயசுல இவரை பார்த்தேன். இப்போ இந்தியாவுக்கு ஆடுறாரு – நெகிழ்ந்த வி.வி.எஸ் லக்ஷ்மனன்

Laxman
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் நடைபெற்று முடிந்தது. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் 151 ரன்கள் வித்தியாசத்தில் வரலாற்று வெற்றியை பதிவு செய்த இந்திய அணி தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இந்நிலையில் இந்த போட்டியில் கபில்தேவ்-க்கு பிறகு லார்ட்ஸ் மைதானத்தில் 8 விக்கெட்டுகளை வீழ்த்திய வீரராக இந்திய அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் சாதனை படைத்துள்ளார்.

siraj

- Advertisement -

முதல் இன்னிங்சில் 4 விக்கெட்டுகளை வீழ்த்திய அவர் இரண்டாவது இன்னிங்சிலும் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இறுதிநாளில் 60 ஓவர்களில் இங்கிலாந்து அணியை வீழ்த்த வேண்டும் என்ற நிலைமையில் இருந்த போது தனது சிறப்பான பந்துவீச்சை இங்கிலாந்து அணிக்கு எதிராக வெளிப்படுத்திய முகமத் சிராஜ் ஆரம்பத்தில் இரண்டு விக்கெட்டுகளையும், இறுதி நேரத்தில் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.

இதன்மூலம் அவர் இந்திய அணியின் அடுத்த நம்பிக்கை நட்சத்திரமாக மாறி உள்ளார். இந்நிலையில் முகமது சிராஜை சிறுவயதிலேயே பார்த்து உள்ள இந்திய அணியின் முன்னாள் வீரரான வி.வி.எஸ் லட்சுமணன் அவருடன் இருக்கும் புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

அதில் அப்துல் அசீமின் இல்லத்திற்கு நான் சென்ற போது முதன் முதலாக சிராஜை பார்த்தேன். தற்போது கடின உழைப்பின் மூலம் அவர் சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடி வருவது எனக்கு பெருமையாக உள்ளது.

ஒரு வீரரின் கடின உழைப்பு மற்றும் மன உறுதி மூலம் வாழ்வில் எதை வேண்டுமானாலும் சாதிக்கலாம் என்பதற்கு சிராஜ் ஒரு உதாரணம். நீங்கள் இன்னும் பல சாதனைகள் புரிய வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த ட்விட்டர் பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement