யார் விளையாடனாலும் சரி. இவருக்கு இந்திய அணியில் வாய்ப்பு கொடுத்தே ஆகனும் – சப்போர்ட் செய்த லக்ஷ்மனன்

Laxman
Advertisement

இந்திய அணி தற்போது நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியை முடித்துவிட்டு அடுத்ததாக 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து அணிக்கு எதிராக விளையாட தயாராக உள்ளது. இந்நிலையில் இந்த ஜூலை மாதம் இலங்கை அணிக்கு எதிரான தொடரில் இளம் வீரர்களைக் கொண்ட மற்றொரு இந்திய அணி அங்கு சென்று விளையாடும் என பிசிசிஐ சார்பில் ஏற்கனவே தெரிவிக்கப்பட்டது.

Sl

அதனை தொடர்ந்து தற்போது இலங்கை தொடருக்கான இந்திய அணி தயாராகி வரும் வேளையில் இந்த இலங்கை தொடரில் எந்தெந்த வீரர்கள் பிளேயிங் லெவனில் இடம் பெறுவார்கள் என்பது குறித்த எதிர்பார்ப்பு தற்போது ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரரான விவிஎஸ் லட்சுமணன் இலங்கை தொடரில் இந்திய அணியின் இளம் வீரரான சூரியகுமார் யாதவிற்கு அனைத்து போட்டிகளிலுமே வாய்ப்பு கொடுக்க வேண்டும் என தனது கருத்தினைத் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

இதுகுறித்து அவர் கூறுகையில் : இந்த இலங்கை தொடரானது இளம் வீரர்களுக்கு சிறந்த வாய்ப்பாக அமைய போகிறது. என்னை பொருத்தவரை சூர்யகுமார் யாதவ் அனைத்து போட்டிகளிலும் விளையாட விரும்புகிறேன். ஏனென்றால் என்னைப் பொறுத்தவரை எதிர்வரும் டி20 உலக கோப்பையில் இடம் பெற தகுதியான வீரர் என்று நான் அவரை கூறுவேன். சர்வதேச கிரிக்கெட்டில் ரன்களை எடுக்கும் நம்பிக்கையை அவர் பெற்றால் அவரால் இன்னும் சிறப்பாக விளையாட முடியும்.

sky 1

ஏற்கனவே தங்களுக்கு கொடுக்கப்பட்ட வாய்ப்பை சூர்யகுமார் யாதவ் மற்றும் இஷான் கிஷன் ஆகியோர் சிறப்பாக பயன்படுத்தியுள்ளனர். அதிலும் குறிப்பாக சூர்யகுமார் யாதவ் 3வது வீரராக களமிறங்கி விளையாடிய விதத்தை நினைத்து நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். என்னை பொறுத்தவரை அவரது அறிமுகமும் சரி இதுவரை அவர் மும்பை அணிக்காக விளையாடிய விதமும் சரி நிச்சயம் இந்தியா டி20 அணியில் அவர் உலக கோப்பை தொடரில் விளையாட வேண்டும் என்பதே எனது விருப்பம் என லட்சுமணன் தெரிவித்துள்ளார்.

sky 2

லட்சுமணன் கூறியது போலவே தனது பேட்டிங்கில் அசாத்தியமான திறமை கொண்டவர் மட்டுமின்றி பல்வேறு வகையான ஷாட்களையும் கைவசம் வைத்திருக்கும் சூர்யகுமார் யாதவ் அணியில் இடம் பெற வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement