நாளைய போட்டியில் இந்திய அணி இந்த ஒரு மாற்றத்தை செய்தே ஆக வேண்டும் – வி.வி.எஸ் லக்ஷ்மனன்

Laxman
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ஆனது தற்போது இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி எளிதாக வெற்றி பெற வாய்ப்பு இருந்தும் மழை காரணமாக போட்டி டிராவில் முடிவடைந்தது. இதன் காரணமாக அடுத்து வரவிருக்கும் போட்டிகளில் இந்திய அணி வெற்றிக்காக முனைப்பு காட்டும் தெரிகிறது.

Kohli

- Advertisement -

இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி நாளை லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற இருக்கிறது. இந்த போட்டிக்கான இந்திய அணியில் மாற்றங்கள் ஏதும் இருக்காது என்று கூறப்பட்ட நிலையில் தற்போது வேகப்பந்து வீச்சாளரான ஷர்துல் தாகூர் காயம் காரணமாக நாளைய போட்டியில் விளையாட மாட்டார் என்று தெரிகின்றது.

இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரரான விவிஎஸ் லக்ஷ்மன் இரண்டாவது போட்டியில் நிச்சயம் தமிழக வீரரான சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் இடம் பெற வேண்டும் என்று தனது கருத்தினைத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் : இந்திய அணியில் நிச்சயம் அஸ்வின் இடம்பெற வேண்டும். ஏனெனில் அவர் நிச்சயம் அவரது பந்து வீச்சில் இந்திய அணிக்கு மிகப்பெரிய அளவில் கை கொடுப்பார்.

Ashwin

வெளிநாட்டு மைதானங்களில் பவுலிங்கில் நிறைய திறன் உடைய அஸ்வின் நிச்சயம் பேட்ஸ்மேன்களுக்கு ஒரு அச்சுறுத்தலாக இருப்பார் என்றும் குறிப்பிட்ட அளவிற்கு பேட்டிங்கிலும் கை கொடுப்பார் என லட்சுமணன் கூறியுள்ளார். இதன்காரணமாக அவர் நிச்சயம் இந்திய அணியில் விளையாட வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். காயம் காரணமாக ஷர்துல் தாகூர் விளையாடாமல் போனால் அவருக்கு பதிலாக அஷ்வின் இடம்பெறுவார் என்று தெரிகிறது.

Ashwin

அதேவேளையில் இங்கிலாந்து அணியில் ஸ்டூவர்ட் பிராட் காயம் காரணமாக நாளைய போட்டியில் விளையாடமாட்டார் என்றும் அவருக்கு பதில் மொயின் அலி விளையாடுவார் என்றும் தெரிகிறது. இந்திய அணியில் ஒரே ஒரு மாற்றம் இருந்தாலும், இங்கிலாந்து அணியில் இரண்டு மூன்று மாற்றங்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

Advertisement