இந்திய – ஆஸ்திரேலிய தொடரில் முழுத்தொடரையும் வெல்லப்போகும் அணி இதுதான் – வி.வி.எஸ் லட்சுமணன் கணிப்பு

Laxman-1
- Advertisement -

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடரை முடித்த கையோடு இந்திய வீரர்கள் ஆஸ்திரேலியா நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் போட்டிகள், 3 டி20 போட்டிகள் மற்றும் நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட மிக நீண்ட தொடரில் விளையாட உள்ளனர். அதற்காக ஆஸ்திரேலியா சென்றடைந்த வீரர்கள் 14 நாட்கள் தனிமைப் படுத்திக் கொண்டு வருகிற 27-ஆம் தேதி சிட்னியில் நடைபெறும் முதலாவது ஒருநாள் போட்டியில் பங்கேற்க இருக்கிறார்கள்.

INDvsAUS

- Advertisement -

இந்நிலையில் தற்போது இந்த தொடர் குறித்து பல்வேறு கிரிக்கெட் விமர்சகர்களும், முன்னாள் வீரர்களும் தங்களது கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில் தற்போது இந்திய அணியின் முன்னாள் வீரரான விவிஎஸ் லட்சுமணன் இத்தொடரில் யார் வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றுவார்கள் என்பது குறித்து தனது கருத்தினை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில் : என்னைப் பொறுத்தவரை மூன்று விதமான தொடர்களையும் கைப்பற்ற இந்திய அணிக்கு அருமையான வாய்ப்பு இருக்கிறது. மிகச்சரியான திட்டமிடல் மற்றும் அணித்தேர்வு இருந்தால் நிச்சயம் நமது அணியால் மூன்று விதமான கோப்பையையும் கைப்பற்ற முடியும்.

தற்போது உள்ள இந்திய அணியை பார்க்கும்போது வலிமை வாய்ந்த அணியாக தான் இருக்கிறது. மூன்று விதமான போட்டிகளிலும் மிகச்சிறந்த அணியைத் தேர்வு செய்திருக்கிறார்கள். ஆஸ்திரேலிய அணியை வீழ்த்த இந்த அணியை போதும். வேறு ஒரு புதிய அணி தேவை இல்லை. இந்த அணியை வைத்து அவர்களை வெற்றி பெற முடியும்.

Ind

இந்த தொடரில் இந்திய அணி வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி கோப்பையை நிச்சயம் கைப்பற்றுவார்கள் என லட்சுமணன் நம்பிக்கை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான ஒருநாள் தொடர் வரும் 27 ஆம் தேதி சிட்னி நகரில் துவங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement