பதிரானா பத்தி உங்களுக்கு எந்த கவலையும் வேணாம். நான் இருக்கேன் – பதிரானாவின் சகோதரிக்கு தோனி அளித்த வாக்குறுதி

Pathirana
- Advertisement -

இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு 16-ஆவது ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரானது தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்த தொடரின் பிளே ஆப் சுற்று போட்டிகள் தற்போது நடைபெற்று வரும் வேளையில் சி.எஸ்.கே அணி ஏற்கனவே நடைபெற்று முடிந்த முதலாவது குவாலிபயர் போட்டியில் குஜராத் அணியை வீழ்த்தி முதல் அணியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறி அசத்தியது.

அதனைத்தொடர்ந்து இன்று நடைபெறவிருக்கும் இரண்டாவது குவாலிபயர் போட்டியில் மும்பை மற்றும் குஜராத் அணிகள் மோதவிருக்கின்றன. இந்த போட்டியில் வெற்றிபெறும் அணி இறுதிப்போட்டியில் சி.எஸ்.கே அணிக்கு எதிராக விளையாடும் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

கடந்த ஆண்டு நடைபெற்ற ஐ.பி.எல் தொடரில் பிளே ஆப் சுற்றுக்கு கூட தகுதிபெறாமல் வெளியேறிய சி.எஸ்.கே அணியானது இம்முறை பலமான கம்பேக் கொடுத்து இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. இப்படி சென்னை அணி கொடுத்த கம்பேக்குக்கு முக்கிய காரணமாக இளம் வேகப்பந்து வீச்சாளரான மதீஷா பதிரானாவும் ஒரு காரணம் என்றால் அது மிகையல்ல.

ஏனெனில் பந்துவீச்சில் பலமிழந்து காணப்பட்ட சி.எஸ்.கே அணியில் பதிரானா இணைந்ததுக்கு பிறகு பந்துவீச்சில் அசத்தி வருகிறது. இந்த சீசனில் 11 போட்டிகளில் சி.எஸ்.கே அணிக்காக விளையாடியுள்ள பதிரானா இதுவரை 17 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அதோடு டெத் ஓவர்களில் அசத்தலாக பந்துவீசி சென்னை அணியின் வெற்றிகளையும் உறுதி செய்து வருகிறார்.

- Advertisement -

இந்நிலையில் இந்த நடப்பு ஐ.பி.எல் தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னதாக பதிரானாவின் குடும்பத்தினர் தோனியை நேரில் சந்தித்துள்ளனர். அதன்பிறகு தோனியுடன் இருக்கும் புகைப்படங்களையும் பதிரானாவின் சகோதரி தனது சமூக வலைதளபக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

இதையும் படிங்க : WTC Final : ஆஸி’யை சாய்த்து கோப்பையை வெல்லக்கூடிய தனது இந்திய 11 பேர் அணியை – வெளியிட்ட ரவி சாஸ்திரி

அதில் அவர் குறிப்பிட்டதாவது : தற்போது பதிரானா பாதுகாப்பான இடத்தில் இருக்கிறார். மேலும் தோனியே : பதிரானா பத்தி நீங்கள் எந்த கவலையும் பட வேண்டாம். அவர் எப்பொழுதுமே என்கூடவே தான் இருக்கிறார் என கூறியதாக தனது மகிழ்ச்சியை பகிர்ந்துள்ளார். இதுபோன்ற ஒரு சந்திப்பை கனவிலும் யோசித்ததில்லை என்று பதிரானவின் சகோதரி இந்த பதிவினை பகிர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement