WTC Final : ஆஸி’யை சாய்த்து கோப்பையை வெல்லக்கூடிய தனது இந்திய 11 பேர் அணியை – வெளியிட்ட ரவி சாஸ்திரி

Ravi-Shastri
- Advertisement -

உலக டெஸ்ட் கிரிக்கெட்டில் 2வது சாம்பியனை தீர்மானிக்கும் 2023 ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் மாபெரும் இறுதிப் போட்டி வரும் ஜூன் 7 – 11 வரை இங்கிலாந்தின் லண்டன் நகரில் இருக்கும் புகழ்பெற்ற ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது. அதில் 2021 முதல் நடைபெற்று வந்த லீக் சுற்றின் முடிவில் புள்ளி பட்டியலில் முதலிரண்டு இடங்களை பிடித்த ஆஸ்திரேலியாவும் இந்தியாவும் கோப்பைக்காக பலப்பரீட்சை நடத்த உள்ளன. அதிலும் குறிப்பாக கடந்த ஃபைனலில் விராட் கோலி தலைமையில் நியூசிலாந்திடம் சொதப்பி கோப்பையை கோட்டை விட்ட இந்தியா இம்முறை ரோகித் சர்மா தலைமையில் எப்படியாவது வென்று 2013க்குப்பின் ஐசிசி தொடர்களில் சந்தித்து வரும் தோல்விக்கு முற்றுப்புள்ளி வைக்கப் போராட உள்ளது.

IND vs AUS

- Advertisement -

பொதுவாக சுழலுக்கு சாதகமான இந்திய மைதானங்களில் விளையாடிய இந்திய அணியினர் ஸ்விங் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான இங்கிலாந்து மண்ணில் தடுமாறுவது வழக்கமாகும். எனவே அதை சமாளித்து வெற்றி வாகை சூடுவதற்கு முன்கூட்டியே தயாராவதும் சிறந்த 11 பேர் அணியில் தேர்வு செய்வதும் அவசியமாகும். அப்படிப்பட்ட நிலையில் காயமடைந்த பும்ரா, ரிஷப் பண்ட், கேஎல் ராகுல் ஆகியோருக்கு பதிலாக விளையாடப் போவது யார் என்று எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் ஏற்பட்டுள்ளது.

சாஸ்திரியின் லெவன்:
இந்நிலையில் ஃபைனலில் ஆஸ்திரேலியாவை சாய்த்து கோப்பையை வெல்லும் திறமை கொண்ட தம்முடைய 11 பேர் அணியை முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி வெளியிட்டுள்ளார். அதில் 15 மாதங்கள் கழித்து கம்பேக் கொடுத்த ரகானேவை தேர்வு செய்துள்ள அவர் விக்கெட் கீப்பராக கேஎஸ் பரத்துக்கு ஆதரவு கொடுத்துள்ளார். இருப்பினும் வேகத்துக்கு சாதகமான இங்கிலாந்து மண்ணில் கடந்த ஃபைனலில் ஜடேஜா – அஸ்வின் ஆகிய 2 ஸ்பின்னர்களை தேர்வு செய்தது தோல்வியை கொடுத்த நிலையில் மீண்டும் அதே கலவையை தேர்ந்தெடுக்கும் அவர் இது பற்றி சமீபத்திய பேட்டியில் பேசியது பின்வருமாறு.

“அனைத்து அடிப்படைகளையும் கவர் செய்துள்ள உங்களிடம் வேலையை செய்யும் குதிரைகளும் இருக்கின்றன. ஆனால் உங்களுடைய வேகப்பந்து வீச்சு கூட்டணியில் இருப்பவர்கள் சற்று வயதானவர்கள் என்றும் ஃபார்மில் இருப்பார்களா என்றும் நீங்கள் கருதினால் 2வது ஸ்பின்னரை நோக்கி செல்லலாம். ஏனெனில் நமது அணியில் ஜடேஜாவை போலவே அஸ்வினும் தரமானவர். ஒருவேளை பிட்ச் காய்ந்து கடினமாக இருந்தால் நிச்சயமாக 2 ஸ்பின்னர்களை தேர்வு செய்யலாம்”

- Advertisement -

“இவை அனைத்தும் இங்கிலாந்தின் அடிக்கடி மாறக்கூடிய வானிலையை பொறுத்ததாகும். தற்போதைக்கு நல்ல வெயில் இருக்கும் இங்கிலாந்தின் வானிலை ஜூன் மாதம் திடீரென மாறும் என்பதை நீங்கள் அறிவீர்கள். எனவே 2 ஸ்பின்னர்கள் 2 வேகப்பந்து வீச்சாளர்கள் மற்றும் ஒரு ஆல் ரவுண்டருடன் இந்தியா களமிறங்க வாய்ப்புள்ளது. அப்படியானால் 5 பேட்ஸ்மேன் மற்றும் 1 விக்கெட் கீப்பர் என 6 பேட்ஸ்மேன் இருப்பார்கள். எனவே வானிலை ஓவல் மைதானத்தில் சாதாரணமாக இருந்தால் இதுதான் என்னுடைய அணியாகும்”

Shastri

“தற்சமத்தில் டி20 கிரிக்கெட்டில் ரகானே டைமிங் செய்யும் விதம் அபாரமாக இருக்கிறது. குறிப்பாக அவர் எதிர்கொண்ட பந்துக்கும் ஸ்ட்ரைக் ரேட்டுக்கும் நல்ல கலவை இருக்கிறது. உள்ளூர் கிரிக்கெட்டில் போராடிய அவர் இந்த டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல் இந்தியாவில் விளையாடுவதற்கு சரியானவர். எனவே இறுதியான 11 பேர் அணியை நீங்கள் உன்னிப்பாக பார்க்க வேண்டும்” என்று கூறினார்

- Advertisement -

அந்த வகையில் ரவி சாஸ்திரி தேர்வு செய்துள்ள 11 பேர் இந்திய அணி இதோ: ரோஹித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில், செடேஸ்வர் புஜாரா, விராட் கோலி, அஜிங்கிய ரகானே, ரவீந்திர ஜடேஜா, கேஎஸ் பரத் (கீப்பர்), ரவிச்சந்திரன் அஸ்வின், ஷார்துல் தாகூர், முகமது ஷமி, முகமது சிராஜ்.

இதையும் படிங்க:வீடியோ : இந்த பயணம் தோனி போனதால கிடைச்சுது, டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல் பற்றி – அஸ்வின், ரோஹித் கருத்து

ஆனால் பட் கமின்ஸ், ஹேசல்வுட், மிட்சேல் ஸ்டார்க் ஆகியோருடன் கேமரூன் கிரீன் 4வது வேகப்பந்து வீச்சாளராகவும் ஒரு ஸ்பின்னர் நேதன் லயனுடன் ஆஸ்திரேலியா களமிறங்கும் என்று தெரிவிக்கும் அவர் இந்திய அணியில் மட்டும் 2 ஸ்பின்னர்களை தேர்ந்தெடுத்துள்ளது ஏமாற்றமடைய வைக்கிறது. ஏனெனில் அந்த கலவையுடன் கடந்த ஃபைனலில் களமிறங்கி இந்தியா தோல்வியை சந்தித்த நிலையில் இங்கிலாந்து மண்ணில் 4 வேகப்பந்து வீச்சாளர்கள் 1 ஸ்பின்னருடன் விளையாடுவதே வெற்றிக்கான வழியாகும்.

Advertisement