இறந்த தனது தந்தையின் இறுதி சடங்கினை வீடியோ கால் மூலம் கண்ட ரஞ்சி வீரர் – அடுத்தடுத்து ஏற்பட்ட சோகம்

vishnu solanki
- Advertisement -

இந்தியாவில் நடைபெற்றுவரும் உள்ளூர் கிரிக்கெட் தொடரான ரஞ்சி கோப்பையில் இதுவரை ஒவ்வொரு அணிகளும் தலா 2 லீக் சுற்றுப் போட்டிகளில் விளையாடி முடித்துள்ளன. இதில் எலைட் குரூப் பி பிரிவில் இடம் வகிக்கும் பரோடா கிரிக்கெட் அணி தனது 2வது போட்டியில் சண்டிகருக்கு அணிக்கு எதிராக விளையாடியது. கட்டாக் நகரில் நடைபெற்று வந்த இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சண்டிகர் பரோடாவின் அதிரடியான பந்து வீச்சை தாக்குபிடிக்க முடியாமல் 168 ரன்களுக்கு சுருண்டது.

ranji

- Advertisement -

அதை தொடர்ந்து பேட்டிங் தொடங்கிய பரோடா அணி தனது முதல் இன்னிங்ஸ்சில் 517 ரன்கள் என்ற மிகப் பெரிய ஸ்கோரை பதிவு செய்தது. அதைத் தொடர்ந்து பேட்டிங் செய்த சண்டிகர் தனது 2வது இன்னிங்ஸில் 473/7 ரன்கள் எடுத்திருந்தபோது ஆட்டம் முடிவுக்கு வந்ததால் இறுதியில் இந்த போட்டி டிரா ஆனது.

குழந்தையை இழந்த விஸ்ணு சோலங்கி:
முன்னதாக இந்தப் போட்டி துவங்குவதற்கு முன்பாக பரோடா அணியைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் விஷ்ணு சோலங்கி இப்போட்டியில் பங்கேற்பதற்காக புவனேஸ்வர் நகரில் தங்கி இருந்தார். அந்த நேரத்தில் தமக்கு பெண் குழந்தை பிறந்த செய்தியைக் கேட்ட அவர் மகிழ்ச்சியாக இருந்த நிலையில் அடுத்த ஒரு சில நிமிடங்களிலேயே அந்த செல்லக் குழந்தை இறந்துவிட்டதாக பேரதிர்ச்சி மிக்க செய்தியைக் கேட்டு மனம் உடைந்து போனார். தமக்குப் பிறந்த குழந்தையை உயிருடன் பார்க்கும் பாக்கியத்தை இழந்த அவர் உடனடியாக தனது சொந்த ஊரான வதோதராவிற்கு சென்று குழந்தையின் இறுதி சடங்கில் பங்கேற்றார்.

அதன்பின் அந்த சோகமான சூழ்நிலையில் தனது குடும்பத்தினருடன் இருக்காமல் தனது மாநிலத்திற்காக ரஞ்சி கோப்பையில் விளையாடும் தைரியமான முடிவை எடுத்த அவர் மீண்டும் கட்டாக் நகருக்கு வந்து சண்டிகர் அணிக்கு எதிரான ரஞ்சி போட்டியில் பங்கேற்றார். தனக்கு ஏற்பட்ட அந்த மாபெரும் சோகத்தை மனதுக்குள் பூட்டி வைத்துவிட்டு அதைப்பற்றி பெரிதாக பொருட்படுத்தாமல் பரோடா அணிக்காக பேட்டிங் செய்த அவர் 165 பந்துகளை சந்தித்து 12 பவுண்டரிகள் உட்பட சதமடித்து 104 ரன்கள் குவித்தார்.

- Advertisement -

வாழ்வின் மோசமான சூழ்நிலையிலும் தனது மாநில கிரிக்கெட் மீது உள்ள பற்று காரணமாக குடும்பத்தினருடன் இல்லாமல் களத்தில் விளையாடிய அவரை பல கிரிக்கெட் வீரர்களும் ரசிகர்களும் மனதார பாராட்டியதுடன் ஆறுதலையும் தெரிவித்து வந்தார்ர்கள். அப்படிப்பட்ட அந்த வேளையில் சண்டிகர் அணிக்கு எதிராக நடைபெற்று வந்த போட்டியின் 4வது நாளில் பரோடா அணிக்காக பீல்டிங் செய்து கொண்டிருந்த அவர் ஒரு பவுண்டரியை பிரமாதமாக தடுத்து நிறுத்தி சிறப்பாக விளையாடிக் கொண்டிருந்தார்.

Vishnu Solanki

தந்தையை இழந்து சோகம்:
இந்நிலயில் இந்த 4 ஆவது நாள் ஆட்டத்தின் போது திடீரென்று அவரை பரோடா அணியின் மேனேஜர் தர்மேந்திரா ஆரோதே உடைமாற்றும் அறைக்கு வருமாறு அழைத்தார். எதற்காக அவர் உடை மாற்றும் அறைக்கு செல்கிறார் என சக அணி வீரர்கள் திகைப்பில் பார்க்க உடைமாற்றும் அறைக்கு சென்ற விஷ்ணு சோலங்கிக்கு ஒரு மாபெரும் பேரதிர்ச்சியான செய்தி காத்திருந்தது. ஆம் தனது பேரன்புமிக்க தந்தை இறந்து விட்டார் என்ற செய்தியைத்தான் பரோடா அணியின் மேனேஜர் விஷ்ணு சோலங்கியிடம் தெரிவித்தார்.

- Advertisement -

கடந்த வாரம் தனது செல்ல மகளை இழந்து வாடிய வேளையில் இப்படி ஒரு செய்தி மீண்டும் கேட்ட அவர் அதிர்ச்சியில் உறைந்தார். இதில் ஒரு கொடுமை என்னவென்றால் கிரிக்கெட் போட்டியில் பங்கேற்று வந்த அவர் திடீரென்று அவரின் தந்தையின் இறுதிச்சடங்கிற்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. அதன் காரணமாக அவரின் இறுதிச் சடங்கை கட்டாக் மைதானத்தின் உடைமாற்றும் அறையில் இருந்து வீடியோ கால் வாயிலாக மட்டுமே பார்க்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. இதுபற்றி பரோடா அணியின் கேப்டன் கேதார் தேவ்தார் கூறியது பின்வருமாறு :

Solanki

வீடியோ கால்:
“அவரின் தந்தை இறந்துவிட்டார் என்ற செய்தி எங்களுக்கு போட்டி முடிந்த பின்புதான் தெரிய வந்தது. அவரின் இறுதிச் சடங்கை உடைமாற்றும் அறையில் ஒரு ஓரத்தில் உட்கார்ந்து கொண்டு வீடியோ கால் வாயிலாக விஷ்ணு பார்த்தார். அவருக்கு இது ஒரு மிக மிக கடினமான தருணமாகும். இருப்பினும் இந்த தருணத்தை அவர் கையாண்டது சிறப்பானது. அவரின் தந்தை கடந்த சில மாதங்களாகவே மோசமான உடல்நிலை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அந்த வேளையில் திடீரென அவர் இறந்துவிட்டதால் விஷ்ணு அங்கு செல்ல நினைத்தால் கூட அவரால் செல்ல முடியாது. இருப்பினும் அந்த மோசமான தருணத்திலும் அவர் சிறப்பாக விளையாடிதற்காக தலை வணங்குகிறேன்” என கூறினார்.

- Advertisement -

இந்த மோசமான தருணத்தில் உடனடியாக அவரை வீட்டுக்கு அனுப்பி வைக்க பரோடா கிரிக்கெட் வாரியம் முடிவெடுத்து அதுபற்றி அவரிடம் தெரிவித்தது. ஆனால் ஏற்கனவே தமது தந்தை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்ததன் காரணமாக நீண்ட நேரம் வைத்திருக்க முடியாது என்பதால் அவரை நேரில் சென்று பார்ப்பதற்கு தேவையான நேரம் கிடைக்காது என்பதால் அணியுடனே இருப்பதாக விஷ்ணு சோலங்கி தெரிவித்தார். இறுதியில் அவரின் மூத்த சகோதரர் தனது தந்தைக்கு செய்த கடைசி சடங்குகளை அவர் வீடியோ கால் வாயிலாக பார்த்தார்.

இதையும் படிங்க : இந்திய அணியில் விராட் கோலியின் நம்பர் 3 இடத்தை யாரால் நிரப்ப முடியும் – சுனில் கவாஸ்கர் பளீர்

மொத்தத்தில் ஒரு கிரிக்கெட் வீரருக்கு இப்படி அடுத்தடுத்து ஏற்பட்ட மாபெரும் சோகத்தை பற்றி அறிந்த கிரிக்கெட் ரசிகர்கள் வேதனைக்கு உள்ளாகியுள்ளனர். இருப்பினும் இவ்வளவு மோசமான நேரத்திலும் தனது மாநிலத்தின் மீதும் கிரிக்கெட் மீதும் உள்ள பற்று காரணமாக தொடர்ந்து கிரிக்கெட் விளையாடி வரும் விஷ்ணு சோலங்கிக்கு அனைவரும் பாராட்டுகளையும் ஆறுதலையும் தெரிவித்து வருகிறார்கள்.

Advertisement