இந்திய அணியில் விராட் கோலியின் நம்பர் 3 இடத்தை யாரால் நிரப்ப முடியும் – சுனில் கவாஸ்கர் பளீர்

gavaskar
- Advertisement -

இந்திய அணியின் மூன்று விதமான பார்மேட்டிற்க்கும் கேப்டனாக இருந்த விராட் கோலி கடந்த இரண்டு ஆண்டுகளாகவே சதம் அடிக்காமல் இருந்து வந்ததால் அவரது கேப்டன்சி அவரது பேட்டிங்கை பாதிக்கிறது என்றும் அந்த அழுத்தத்தினால் தான் விராட் கோலி ரன்களை குவிக்க முடியவில்லை என்ற விமர்சனங்கள் தொடர்ந்த வேளையில் விராட் கோலி தற்போது மூன்று வகையான கிரிக்கெட்டில் இருந்தும் கேப்டன் பதவியை துறந்து தற்போது முழுநேர பேட்ஸ்மேனாக அணியில் விளையாடி வருகிறார்.

Kohli

- Advertisement -

கடந்த இரண்டு ஆண்டுகளாகவே சதம் அடிக்காமல் இருந்து வந்தாலும் தொடர்ச்சியாக ரன் குவிப்பில் ஈடுபட்டு வரும் விராட் கோலி மீண்டும் தனது பழைய பார்மிற்கு திரும்புவதற்காக தற்போது சரியான திசையில் சென்று கொண்டிருக்கிறார். தற்போது இலங்கை அணிக்கு எதிரான 20 தொடரில் இருந்து ஓய்வு எடுத்துக்கொண்ட அவர் மீண்டும் டெஸ்ட் அணியில் இணைய இருக்கிறார். இந்நிலையில் விராட் கோலிக்கு பதிலாக இந்த இலங்கை டி20 தொடரில் மூன்றாவது வீரராக ஷ்ரேயாஸ் ஐயர் களமிறங்கினார்.

அப்படி 3 ஆவது வீரராக விளையாடிய அவர் மூன்று போட்டிகளிலுமே ஆட்டமிழக்காமல் 57*, 74*, 73* என 204 ரன்கள் அடித்து தொடர் நாயகன் விருதை வென்றார். இந்த தொடரில் அவர் கிட்டத்தட்ட 174 ஸ்டிரைக் ரேட்டில் அசத்தலான அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி மூன்று போட்டிகளிலுமே அரைசதம் கடந்து இருந்ததால் விராத் கோலியின் சாதனை ஒன்றையும் முறியடித்திருந்தார். இந்த சிறப்பான ஆட்டம் காரணமாக டி20 கிரிக்கெட்டில் விராத் கோலியின் இடத்திற்கு சரியான மாற்று வீரர் இவர் தான் அவரை 3-வது இடத்தில் களம் இறக்க வேண்டும் என்று பல்வேறு கருத்துக்கள் இணையத்தில் உலா வருகின்றன.

Iyer-2

இந்நிலையில் இந்திய அணியின் மூன்றாவது இடத்தில் யார் இறங்க வேண்டும் என்பது குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரரான சுனில் கவாஸ்கர் மனம் திறந்த பேட்டி ஒன்றை அளித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் : இந்திய அணிக்கு தற்போது இருக்கும் பிரச்சினையே அனைவரும் சிறப்பாக விளையாடி வருவது தான். நிறைய வீரர்கள் சிறப்பாக விளையாடுவதால் எந்தெந்த வீரர்களை அணியில் தேர்வு செய்வது என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது.

- Advertisement -

ஆனால் விராட் கோலியின் இடத்தை என்னை பொறுத்தவரை யாராலும் மாற்றவே முடியாது. ஏனெனில் விராட் கோலி தான் இந்திய அணிக்கு தொடர்ச்சியாக 3-வது வீரராக விளையாட வேண்டும். இப்போது கேள்வி என்னவென்றால் 4-வது மற்றும் 5-வது இடத்தில் விளையாடும் வீரர்கள் யார்? யார்? என்பதுதான். அதன்படி ஷ்ரேயாஸ் ஐயர் நான்காவது இடத்திலும், சூரியகுமார் யாதவ் ஐந்தாவது இடத்திலும் விளையாடினால் நன்றாக இருக்கும் என்று சுனில் கவாஸ்கர் கூறியுள்ளார்.

இதையும் படிங்க : ஐபிஎல் 2022 : கே.எல் ராகுலின் நெருங்கிய நண்பரையே கேப்டனாக அறிவித்த பஞ்சாப் கிங்ஸ் அணி – அதிகாரபூர்வ அறிவிப்பு

மேலும் தொடர்ந்து பேசிய அவர் : இந்திய அணியில் தற்போது ஏகப்பட்ட வீரர்கள் சிறப்பான பணியை செய்து வருகின்றனர். அந்த வகையில் பேட்டிங் தெரிந்த சில பந்துவீச்சாளர்களை அணியில் சேர்க்கலாம். மேலும் கூடுதலாக 2 அதிவே பந்துவீச்சாளர்களையும் அணியில் தொடர்ந்து விளையாட வைக்க வேண்டும் என சுனில் கவாஸ்கர் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement