- Advertisement -
இந்திய கிரிக்கெட்

தனது விக்கெட்டை எடுத்த இளம் வீரருக்கு விராட் கோலி கொடுத்த அன்பு பரிசு – விவரம் இதோ

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், நட்சத்திர வீரருமான விராட் கோலி ஏற்கனவே டேஸ்ட் மற்றும் டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுள்ள வேளையில் தொடர்ந்து ஒருநாள் போட்டிகளில் மட்டுமே விளையாடி வருகிறார். எதிர்வரும் 2027 ஒருநாள் உலககோப்பை தொடர் வரை விளையாட விரும்பும் விராட் கோலி தற்போது இந்திய அணியின் நிர்வாகத்தின் கோரிக்கை காரணமாக உள்ளூர் தொடரிலும் பங்கேற்று விளையாடி வருகிறார்.

தனது விக்கெட்டை எடுத்த வீரருக்கு அன்பு பரிசு வழங்கிய விராட் கோலி :

அந்த வகையில் நியூசிலாந்து அணிக்கு எதிராக நடைபெற இருக்கும் ஒருநாள் தொடருக்கு முன்னதாக இருக்கும் இடைவெளியில் தற்போது இந்தியாவில் நடைபெற்று வரும் பிரபல உள்ளூர் தொடரான விஜய் ஹசாரே தொடரில் அவர் ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி அணியில் பங்கேற்று விளையாடி வருகிறார்.

- Advertisement -

அந்த வகையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் நடைபெற்ற விஜய் ஹசாரே தொடரின் ஒரு முக்கிய போட்டியில் குஜராத் அணிக்கு எதிராக விளையாடியிருந்த போது 77 ரன்கள் சேர்த்திருந்த நிலையில் ஆட்டமிழந்து வெளியேறியிருந்தார். இந்த தொடரின் முதல் போட்டியில் சதம் அடித்த அவர் இரண்டாவது போட்டியிலும் சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

அவ்வேளையில் 77 ரன்கள் எடுத்திருந்த போது இளம் வீரர் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அப்படி அவர் ஆட்டம் இழந்து வெளியேறியதும் அந்த போட்டிக்கு பின்னர் குஜராத் அணியை சேர்ந்த இளம் சுழற்பந்து வீச்சாளரான விஷால் ஜெய்ஸ்வால் என்பவரை அவர் அழைத்து தனது விக்கெட்டை எடுத்தற்காக பாராட்டி இருந்தார். மேலும் இளம் வீரரான அவர் இன்னும் கிரிக்கெட் போட்டியில் சிறந்து விளங்க வேண்டும் என்பதற்காக ஒரு சிறப்பு பரிசு ஒன்றிணையும் வழங்கி அவரை நெகிழ்ச்சி அடைய வைத்துள்ளார்.

- Advertisement -

அந்த வகையில் விராட் கோலி போட்டி முடிந்த பின்னர் டெல்லி அணியின் ஓய்வறைக்கு குஜராத் அணியின் சுழற்பந்து வீச்சாளரான விஷால் ஜெய்ஸ்வால் என்பவரை அழைத்து அவரிடம் புகைப்படம் எடுத்துக்கொண்டதோடு மட்டுமின்றி எந்த பந்தில் தான் ஆட்டமிழந்தாரோ அந்த பந்தினை வாங்கி அதில் கையெழுத்திட்டு அந்த இளம் வீரருக்கு பரிசாக வழங்கியுள்ளார்.

இதையும் படிங்க : யாஷஸ்வி ஜெய்ஸ்வாலுக்கு அந்த வாய்ப்பு கிடைக்காதது ரொம்ப தப்பு – திலீப் வெங்சர்க்கார்

அந்த புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்த விஷால் ஜெய்ஸ்வால் : என்னுடைய கிரிக்கெட் வாழ்வில் தொலைக்காட்சியில் பார்த்த சூப்பர் ஸ்டார் ஒருவருடன் களத்தில் இறங்கி விளையாடியதும், அவரை வீழ்த்தியதையும் மறக்கவே முடியாது என தனது கருத்தினை பகிர்ந்துள்ளார்.

- Advertisement -