- Advertisement -
ஐ.பி.எல்

விராட் கோலிக்கு இதை செஞ்சோம்ன்னா 2007 மாதிரி.. இந்தியா 2024 டி20 உ.கோ தோற்கும்.. எச்சரித்த சேவாக்

ஆரம்பத்தில் டி20 உலகக் கோப்பை 2024 தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணியில் விராட் கோலியை கழற்றி விட தேர்வுக்குழு முடிவெடுத்ததாக செய்திகள் வெளிவந்தன. ஏனெனில் உலகக்கோப்பை நடைபெற உள்ள வெஸ்ட் இண்டீஸ் ஆடுகளங்கள் கொஞ்சம் ஸ்லோவாக இருக்கும். மறுபுறம் டி20 கிரிக்கெட்டில் பெரிய ரன்களை குவிக்கும் விராட் கோலி கொஞ்சம் குறைவான ஸ்ட்ரைக் ரேட்டில் விளையாடும் ஸ்டைலை கொண்டவர்.

எனவே அவரை கழற்றி விட்டு இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிக்க முடிவெடுக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்தன. ஆனால் உலகின் அனைத்து மைதானங்களிலும் அசத்தக்கூடிய திறமையை கொண்ட விராட் கோலி இந்தியா டி20 உலகக் கோப்பையை வெல்வதற்கு அவசியம் என்று சில முன்னாள் வீரர்கள் தெரிவித்தனர்.

- Advertisement -

சேவாக் கருத்து:
அதில் ஒரு படி மேலே சென்ற சௌரவ் கங்குலி கேப்டன் ரோகித் சர்மாவுடன் விராட் கோலி ஓப்பனிங்கில் களமிறங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். அத்துடன் ஸ்ரீகாந்த் போன்ற மேலும் சில முன்னாள் வீரர்களும் விராட் கோலி ஓப்பனிங்கில் களமிறங்க வேண்டும் என்று தெரிவித்திருந்தனர். இந்நிலையில் விராட் கோலியை அவருடைய இயற்கையான இடமான 3வது இடத்திலேயே விளையாட விட வேண்டும் என்று வீரேந்திர சேவாக் கேட்டுக் கொண்டுள்ளார்.

ஒருவேளை அதை மாற்றினால் 2007 உலகக் கோப்பையில் சச்சினை 4வது இடத்தில் களமிறக்கியதைப் போன்ற குளறுபடி ஏற்படும் என்று சேவாக் தெரிவித்துள்ளார். எனவே அது இந்திய அணிக்கு தோல்வியை கூட கொடுக்கலாம் என்று எச்சரிக்கும் சேவாக் இது பற்றி கிரிக்பஸ் இணையத்தில் பேசியது பின்ருமாறு. “நான் இந்திய அணியில் இருந்தால் விராட் கோலியை ஓப்பனிங்கில் அனுப்ப மாட்டேன்”

- Advertisement -

“அவரை நான் 3வது இடத்தில் விளையாட வைப்பேன். ரோகித் சர்மா மற்றும் ஜெய்ஸ்வால் ஆகியோர் ஓபனிங்கில் விளையாட வேண்டும். எப்போதும் மிடில் ஓவர்கள் உங்களுக்கு பிரச்சனையை கொடுக்கும். ஆரம்பத்திலேயே விக்கெட் விழுந்தால் நாம் பவர் பிளேவில் நிதானமாக விளையாட வேண்டும் என்பது விராட் கோலிக்கு தெரியும். அதே போல தாமதமாக விக்கெட்டுகள் விழுந்தாலும் நீங்கள் தொடர்ந்து வேகமாக விளையாடுங்கள் என்று அவரிடம் கேப்டன் மற்றும் பயிற்சியாளர் சொல்லலாம்”

இதையும் படிங்க: ஐபிஎல் 2025 ஏலத்தில் தமிழக வீரர் அஸ்வினை எந்த அணியும் வாங்கக் மாட்டாங்க.. சேவாக் அதிரடி விமர்சனம்

“அதை செய்யக்கூடிய திறன் விராட் கோலியிடம் உள்ளது. 2007 உலகக் கோப்பையில் சச்சின் தன்னுடைய ஓப்பனிங் இடத்தை விட்டு 4வது இடத்தில் விளையாடினார். மிடில் ஆர்டரில் விளையாடுவதற்கு விருப்பமில்லை என்றாலும் அணிக்காக சச்சின் அதை செய்தார். எனவே ஏற்கனவே உங்களிடம் 2 நல்ல துவக்க வீரர்கள் இருக்கும் போது விராட் கோலி 3வது இடத்தில் விளையாடலாம். துவக்க வீரர்கள் கொடுக்கும் நல்ல துவக்கத்தை விராட் கோலியால் தொடர்ந்து எடுத்துச் செல்ல முடியும். அதற்காக விராட் கோலி கவலைப்படுவார் என்று நான் நினைக்கவில்லை” என கூறினார்.

- Advertisement -