IPL 2023 : அஷ்வின், படிக்கல் இல்ல – தோல்விக்கு தெரிஞ்சே செஞ்ச அந்த தப்பு தான் காரணம் – சாம்சன் கேப்டன்ஷிப்பை விமர்சிக்கும் சேவாக்

Virender Sehwag Sanju Samson
- Advertisement -

விறுவிறுப்பான துவக்கத்தை பெற்றுள்ள ஐபிஎல் 2023 டி20 கிரிக்கெட் தொடரில் ஏப்ரல் 5ஆம் தேதியன்று நடைபெற்ற 8வது லீக் போட்டியில் ராஜஸ்தானை வெறும் 5 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்த பஞ்சாப் தங்களுடைய முதல் 2 போட்டிகளில் அடுத்தடுத்த வெற்றிகளை பெற்று அசத்தியுள்ளது. கௌகாத்தியில் நடைபெற்ற அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் 20 ஓவர்களில் 197/4 ரன்கள் எடுத்தது அதிகபட்சமாக கேப்டன் ஷிகர் தவான் 86* (56) ரன்களும் ப்ரப்சிம்ரன் சிங் 60* (34) ரன்களும் எடுக்க ராஜஸ்தான் சார்பில் அதிகபட்சமாக ஜேசன் ஹோல்டர் 2 விக்கெட்களை எடுத்தார்.

PBKS vs RR

- Advertisement -

அதை துரத்திய ராஜஸ்தானுக்கு சம்பந்தமின்றி ரவிச்சந்திரன் அஸ்வின் தொடக்க வீரராக களமிறங்கி டக் அவுட்டானது தோல்விக்கு முக்கிய காரணமானது. ஏனெனில் கடந்த போட்டியில் 6 ஓவரில் 84 ரன்கள் குவித்து பட்லர் – ஜெய்ஸ்வால் ஜோடி சாதனை படைத்திருந்தது. ஆனால் இப்போட்டியில் பிரிந்த அந்த ஜோடியில் ஜெய்ஸ்வால் 11 ரன்களில் அவுட்டாக 3வது இடத்தில் களமிறங்கிய பட்லர் 19 ரன்களில் ஆட்டமிழந்தார். அதனால் ஏற்பட்ட சரிவை சரி செய்ய போராடிய கேப்டன் சஞ்சு சாம்சன் அதிரடியாக விளையாடி 42 ரன்கள் குவித்து முக்கிய நேரத்தில் ஆட்டமிழக்க அடுத்து வந்த ரியான் பராக் அதிரடியாக விளையாட முயற்சித்து 20 (12) ரன்களில் அவுட்டானார்.

சேவாக் அதிருப்தி:
ஆனால் அந்த நேரத்தில் தடவலாக செயல்பட்ட தேவதூத் படிக்கல் கடைசி வரை அதிரடியை துவங்காமல் 21 (26) ரன்களில் அவுட்டானது தோல்விக்கு மற்றுமொரு காரணமாக அமைந்தது. ஏனெனில் அதனால் ஏற்பட்ட அழுத்தத்தில் கடைசியில் சிம்ரோன் ஹெட்மையர் 36 (18) ரன்களும் துருவ் ஜுரேல் 32* (15) ரன்கள் எடுத்து போராடியும் 20 ஓவர்களில் 192/7 ரன்கள் மட்டுமே எடுத்த ராஜஸ்தான் பரிதாபமாக தோற்றது. முன்னதாக இந்த தோல்விக்கு அஸ்வின் தொடக்க வீரராக களமிறங்கியது முக்கிய காரணம் என்று விமர்சனங்கள் எழுந்த நிலையில் கேட்ச் பிடிக்கும் போது பட்லர் கைகளில் காயத்தை சந்தித்ததால் அந்த முடிவெடுக்கப்பட்டதாக சஞ்சு சாம்சன் போட்டியில் முடிவில் தெரிவித்தார்.

Ashwin Hetmayer

மேலும் கடைசி நேரத்தில் அதிரடியை காட்டாமல் தடவலாக செயல்பட்ட தேவதூத் படித்தல் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்ததாக ரசிகர்கள் விளாசி வருகிறார்கள். இந்நிலையில் 200க்கும் ஸ்ட்ரைக் ரேட்டில் விளையாடக்கூடிய சிம்ரோன் ஹெட்மயருக்கு முன்பாக தொடர்ந்து 4 சீசன்களாக சொதப்பி வரும் அனுபவமற்ற ரியான் பராக்கை களமிறக்கிய சஞ்சு சாம்சன் – குமார் சங்ககாரா ஆகியோரது முடிவு தான் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்ததாக முன்னாள் வீரர் வீரேந்திர சேவாக் விமர்சித்துள்ளார்.

- Advertisement -

குறிப்பாக ஹெட்மயருக்கு செட்டிலாகி அதிரடி காட்ட போதிய நேரம் கிடைக்கவில்லை என்று தெரிவிக்கும் அவர் இது பற்றி க்ரிக்பஸ் இணையத்தில் பேசியது பின்வருமாறு. “பேட்டிங் செய்வதற்கு போதிய பந்துகள் ஹெட்மயருக்கு கிடைக்கவில்லை. அதனால் அவரிடம் 200 ஸ்டிரைக் ரேட் இருந்து என்ன பயன்? ஒருவேளை இடது கை பேட்ஸ்மேனான அவர் 4 அல்லது 5வது இடத்தில் படிக்கல் அல்லது ரியன் பராக் ஆகியோருக்கு முன்பாக களமிறங்கியிருந்தால் பேட்டிங் செய்ய அதிக பந்துகள் கிடைத்திருக்கும். ஏனெனில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக அவர் 4வது இடத்தில் விளையாடுகிறார்”

Sehwag

“இதற்கு முன் இந்தியாவில் சதமடித்துள்ள அவர் இங்குள்ள சூழ்நிலைகளை நன்கு புரிந்தவராகவும் இருக்கிறார். மேலும் ராஜஸ்தானுக்கு கடந்த வருடம் அவர் வெற்றிகளில் முக்கிய பங்காற்றியுள்ளார். அதற்கு முந்தைய வருடத்திலும் டெல்லி ஃபைனல் செல்வதற்கு அவர் முக்கிய பங்காற்றினார். எனவே அவர் முன்கூட்டியே களமிறங்கியிருக்க வேண்டும். ஆபத்தான வீரரான அவர் சில போட்டிகளில் ஆரம்பத்திலேயே அவுட்டாகி இருக்கிறார் என்பதை ஏற்றுக் கொள்கிறேன்”

இதையும் படிங்க:IPL 2023 : விராட் கோலியை விட அதிவேகமாக இரட்டை சாதனை படைத்த ஷிகர் தவான் – ஆனாலும் பாராட்டுக்கள் தான் இல்ல

“ஆனால் பேட்டிங் வரிசையில் கீழே இறங்கினால் மட்டும் அவுட்டாக மாட்டார் என்பதற்கு என்ன நிச்சயம்? எனவே அவர் முன்கூட்டியே களமிறங்கியிருந்தால் ஒரு ஓவர் முன்னதாகவே ராஜஸ்தானை வெற்றி பெற வைத்திருப்பார். அந்த வகையில் இந்த இடத்தில் சஞ்சு சாம்சன் மற்றும் பயிற்சியாளர் குமார் சங்கக்காரா ஆகியோர் தவறு செய்துள்ளார்கள் என்று நினைக்கிறேன்” என கூறினார்.

Advertisement