சமீபத்தில் நான் பாத்த மேட்ச்லயே இதுதான் பெஸ்ட். ஆஹா ஒஹோன்னு பாராட்டிய – விரேந்தர் சேவாக் (வைரலாகும் பதிவு)

Sehwag
- Advertisement -

இந்திய அணியின் முன்னாள் அதிரடி துவக்க வீரரான வீரேந்திர சேவாக் அவ்வப்போது நடைபெறும் கிரிக்கெட் போட்டிகள் குறித்த தனது கருத்துக்களை சமூக வலைகள் மூலமாக பகிர்வது வழக்கம். அந்த வகையில் அவர் பதிவிடும் டிவிட்டர் பதிவுகளுக்கு ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பும் கிடைக்கும். இந்நிலையில் தற்போது அவர் வெளியிட்டுள்ள ஒரு டிவிட்டர் பதிவானது தற்போது இணையத்தில் அதிக அளவு பகிரப்பட்டு வருகிறது.

அந்த வகையில் இங்கிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியானது அங்கு 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இவ்விரு அணிகளுக்கும் இடையே கடந்த 16-ஆம் தேதி பர்மிங்ஹாமில் துவங்கிய முதலாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி இரண்டு விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

- Advertisement -

இந்த போட்டியில் முதலில் விளையாடிய இங்கிலாந்து அணி தங்களது முதல் இன்னிங்சில் 393 ரன்களை குவிக்க அதனை தொடர்ந்து விளையாடிய ஆஸ்திரேலிய அணியானது 386 ரன்கள் குவித்தது. இதன் காரணமாக ஏழு ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்சை விளையாடிய இங்கிலாந்து அணி 223 ரன்களை குறித்தது.

பின்னர் 281 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கு ஆஸ்திரேலிய அணிக்கு நிர்ணயிக்கப்பட்டது. அதனை மிகச் சிறப்பாக எதிர்கொண்டு விளையாடிய ஆஸ்திரேலியா அணியானது எட்டு விக்கெட்டை இழந்து 282 ரன்கள் குவித்து இரண்டு விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றிருந்தது.

- Advertisement -

படு சுவாரசியமாக நடைபெற்ற இந்த போட்டி ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவு வரவேற்பை பெற்றுள்ளது. அதோடு இந்த போட்டி குறித்து ஒரு கருத்தினை பதிவிட்டுள்ள விரேந்திர சேவாக் குறிப்பிடுகையில் : என்ன ஒரு அற்புதமான டெஸ்ட் போட்டி. சமீப காலத்தில் நான் பார்த்த மிகச்சிறந்த டெஸ்ட் போட்டி இதுதான்.

இதையும் படிங்க : 1999இல் தடுமாறிய லக்ஷ்மன் ஜாம்பவானா வர காரணமே சச்சின் கொடுத்த அந்த ஃபயர் தான் – பின்னணியை பகிர்ந்த முன்னாள் வீரர்

இங்கிலாந்து அணி முதல் நாளிலேயே தைரியமாக டிக்ளேர் செய்ததும், கவாஜா இரண்டு இன்னிங்ஸ்களில் அற்புதமாக விளையாடியதும், பேட் கம்மின்ஸ் போட்டியை முடித்துக் கொடுத்ததும், லயன் அழுத்தமான சூழலில் சிறப்பான பார்ட்னர்ஷிப் அமைத்தது என இந்த போட்டி நீண்ட நாட்களுக்கு எனக்கு ஞாபகத்தில் இருக்கும் என இந்த ஆஷஸ் தொடரின் முதல் போட்டியை அவர் பாராட்டி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement