1999இல் தடுமாறிய லக்ஷ்மன் ஜாம்பவானா வர காரணமே சச்சின் கொடுத்த அந்த ஃபயர் தான் – பின்னணியை பகிர்ந்த முன்னாள் வீரர்

VVS Laxman
- Advertisement -

இந்திய கிரிக்கெட்டில் சச்சின் டெண்டுல்கர், சௌரவ் கங்குலி, ராகுல் டிராவிட், வீரேந்திர சேவாக் போன்ற 90களில் அசத்திய பேட்ஸ்மேன்கள் ஜாம்பவான்களாக போற்றப்படும் நிலையில் விவிஎஸ் லக்ஷ்மன் அண்டர் ரேட்டட் ஜாம்பவானாக திகழ்கிறார் என்றே சொல்லலாம். ஏனெனில் வெள்ளை பந்து கிரிக்கெட்டில் பெரிய அளவில் 86 போட்டிகளில் 6 சதங்கள் உட்பட 2338 ரன்களை 30.76 என்ற சராசரியில் எடுத்த அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் தான் 134 போட்டிகளில் 17 சதங்கள் உட்பட 8781 ரன்களை 45.97 என்ற சிறப்பான சராசரியில் எடுத்து இந்தியாவுக்கு சில மறக்க முடியாத வெற்றிகளை பெற்றுக் கொடுத்தார்.

Laxman

- Advertisement -

குறிப்பாக அச்சுறுத்தலை கொடுக்கக் கூடிய அசுரனாக கருதப்படும் ஆஸ்திரேலியாவையே அதிர விடும் அளவுக்கு வரலாற்றில் வெற்றிகரமாக செயல்பட்டுள்ள அவர் கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்ற 2001 டெஸ்ட் போட்டியில் ராகுல் டிராவிட்டுடன் சேர்ந்து 281 ரன்கள் குவித்து பெற்றுக் கொடுத்த சரித்திர வெற்றியை யாராலும் மறக்க முடியாது. அதனால் பெரும்பாலான முன்னாள் வீரர்களும் ரசிகர்களும் வெரி வெரி ஸ்பெஷல் லக்ஷ்மன் என்றழைக்கும் அளவுக்கு திறமையும் தனித்துவமும் கொண்ட அவர் 1999இல் அறிமுகமாகி ஆரம்ப காலங்களில் ரொம்பவே தடுமாறினார்.

சச்சினின் உத்வேகம்:
இருப்பினும் 1999 ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் சச்சின் டெண்டுல்கர் ஜாலியாக கொடுத்த உத்வேகம் தான் முதல் சதமடித்து நாளடைவில் லக்ஷ்மன் பெரிய அளவில் உயர்வதற்கு முன்னேறியதாக முன்னாள் தேர்வுக்குழு தலைவர் எம்எஸ்கே பிரசாத் கூறியுள்ளார். குறிப்பாக அந்த சுற்றுப்பயணத்தில் சிட்னி டெஸ்ட்க்கு முன் ஹோட்டலில் “கடவுள் கொடுத்துள்ள திறமையை சரியாக பயன்படுத்து” என்று அவருக்கு சச்சின் கொடுத்த உத்வேகத்தைப் பற்றி அதே தொடரில் லக்ஷ்மனுடன் தொடக்க வீரராக விளையாடிய எம்எஸ்கே பிரசாத் சமீபத்திய பேட்டியில் பேசியது பின்வருமாறு.

“சச்சினின் வீரர்களை நிர்வகிக்கும் திறனுக்கு எடுத்துக்காட்டாக ஒரு கதையை நான் சொல்ல விரும்புகிறேன். அடிலெய்டில் நடைபெற்ற முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் தோற்ற பின் நான் டிவிஎஸ் லக்ஷ்மன் மற்றும் சச்சின் ஆகியோர் சாப்பிடுவதற்காக சென்றோம். அப்போது எஞ்சிய போட்டிகளில் எப்படி சமாளிக்கலாம் என்பதை பற்றி நாங்கள் பேசினோம். அந்த பேச்சுவார்த்தை அப்படியே தற்போதைய அணியில் யார் மிகவும் பிடித்த வீரர் என்ற பக்கம் திரும்பியது. அப்போது நான் டிராவிட், கங்குலி, லக்ஷ்மன் போன்றவர்கள் எனக்கு பிடிக்கும் என சொன்னேன்”

- Advertisement -

“அதே போல் லக்ஷ்மணும் சில பெயர்களை சொன்னார். பின்னர் சச்சினிடம் உங்களுக்கு மிகவும் பிடித்த வீரர் யார் என்று லக்ஷ்மன் கேட்டார். அதற்கு சச்சின் “நீங்கள் சிரிக்காமல் உங்களுடைய பல்லை காட்டினால் எனக்கு மிகவும் பிடித்த வீரர் லக்ஷ்மன் தான் என்பதை சொல்வேன்” என அவருக்கு பதிலளித்தார். அப்போது சச்சின் அதை விளையாட்டுக்கு தான் சொல்கிறார் என்று லக்ஷ்மண் நன்றாக சிரித்தார்”

sachinspinn

“ஆனால் அப்போது குறிப்பிட்ட சச்சின் “நான் உங்களிடம் ஒன்றை சொல்ல விரும்புகிறேன் லக்ஷ்மண். நீங்கள் என்னை விட பந்து தரையில் பட்டு பிரிந்து வருவதை ஒரு நிமிடம் முன்பாகவே பார்க்கும் திறமையை கொண்டிருக்கிறீர்கள். அந்த கடவுள் கொடுத்த அற்புதமான திறமையை நீங்கள் இன்னும் புரிந்து கொள்ளாமல் இருக்கிறீர்கள். அதே போல எனக்கு கடவுள் கொடுத்த சிறிய திறமையை நான் பெரிதாக்கி செயல்படுகிறேன். அதாவது என்னுடைய பேட்டிங்கில் தடுப்பாட்டம், தள்ளுவது, டிரைவ் மற்றும் தூக்கி அடிப்பது என்ற 4 கியர்களை வைத்துள்ளேன். அதை கால சூழ்நிலைகளுக்கேற்றார் போல் பயன்படுத்தினால் செயல்படுகிறேன்” என்று பதிலளித்தார்”

- Advertisement -

“அத்துடன் “உங்களிடம் சிறப்பான திறமை இருப்பதாலே நேரடியாக நீங்கள் 4வது கியரில் பேட்டிங் செய்கிறீர்கள். குறிப்பாக பந்தை முன்கூட்டியே பார்க்கும் நீங்கள் சூழ்நிலைகளைப் பற்றி கவலைப்படாதீர்கள். அந்த வழியில் சில நேரங்களில் நீங்கள் அசத்தலாம். சில நேரங்களில் தோற்கலாம். எனவே அதற்கேற்றார் போல் புரிந்து 3 இலக்க ரங்களின் அருமை உணரும் போது நீங்கள் இந்த விளையாட்டில் லெஜெண்டாக வருவீர்கள்” என்று பதிலளித்தார்”

Prasad

இதையும் படிங்க:சி.எஸ்.கே ரசிகர்கள் பண்ணது அவருக்கு கஷ்டமாதான் இருந்திருக்கும். ஆனா அவரு.. ஜடேஜா குறித்து – காசி விசுவநாதன் பேட்டி

“அந்த உரையாடலுக்குப் பின் நான் வித்தியாசமான லக்ஷ்மனை பார்த்தேன். மேலும் அந்த சுற்று பயணத்தின் கடைசியில் நாங்கள் தொடக்க வீரர்களாக களமிறங்கும் போது சிட்னி போட்டியில் அவர் 167 ரன்கள் அடித்தார். அப்போதிலிருந்து லக்ஷ்மன் பின்வாங்காமல் பெரிய அளவில் வளர்ந்தார்” என்று கூறினார்.

Advertisement