சி.எஸ்.கே ரசிகர்கள் பண்ணது அவருக்கு கஷ்டமாதான் இருந்திருக்கும். ஆனா அவரு.. ஜடேஜா குறித்து – காசி விசுவநாதன் பேட்டி

Kasi-and-Jadeja
- Advertisement -

தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது இந்தியாவில் நடைபெற்று முடிந்த 16-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இறுதிப்போட்டியில் குஜராத் அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது. இந்த வெற்றியின் மூலம் ஐபிஎல் வரலாற்றில் அதிக முறை கோப்பையை வென்ற மும்பை அணியின் சாதனையை சமன் செய்தது. அதோடு தாங்கள் எவ்வளவு பலமான அணி என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளது. இந்த தொடரை சிஎஸ்கே அணி கைப்பற்ற ஜடேஜாவின் பங்கும் ஒரு காரணம் என்றால் அது மிகையல்ல.

Ravindra-Jadeja

- Advertisement -

ஏனெனில் நடைபெற்ற முடிந்த இந்த தொடர் முழுவதுமே தனக்கு கிடைத்த வாய்ப்புகளை எல்லாம் அற்புதமாக பயன்படுத்திய ஜடேஜா இறுதி போட்டியின் போது கூட கடைசி இரண்டு பந்துகளில் 10 ரன்கள் தேவை என்கிற நிலையில் ஒரு சிக்சர் மற்றும் ஒரு பவுண்டரியுடன் சென்னை அணியை மாபெரும் வெற்றிக்கு அழைத்துச் சென்றார். இந்நிலையில் இந்த ஆண்டு முழுவதும் ஜடேஜா ஒவ்வொரு முறை களமிறங்கும் போதும் ரசிகர்கள் தோனியை பார்க்க வேண்டும் என்பதற்காக அவர் ஆட்டம் இழக்க வேண்டும் என்ற கோஷங்களை எழுப்பி வந்தனர்.

அது குறித்து ஜடேஜாவும் ஒரு போட்டி முடிந்து பரிசளிப்பு விழாவின் போது பேசினார். அதில் “நான் ஆட்டம் இழந்தால் தான் தோனி வருவார் என்பதனால் ரசிகர்கள் அப்படி செய்கிறார்கள்” ஆனால் அணியின் வெற்றி அப்படி நடந்தால் தான் கிடைக்கும் என்றால் அது கூட எனக்கு பரவாயில்லை என்றும் ஜடேஜா கூறியிருந்தார். இந்நிலையில் சென்னை நிர்வாகத்திற்கும் ஜடேஜாவிற்கும் இடையே கருத்து வேறுபாடு என்றெல்லாம் பல செய்திகள் வந்திருந்தன.

Jadeja and Dhoni

அவற்றிற்கெல்லாம் தற்போது முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக சென்னை அணியின் சி.இ.ஓ காசி விஸ்வநாதன் ஒரு தெளிவான விளக்கத்தை அளித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில் : அண்மையில் நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடரில் ஜடேஜா மிக சிறப்பாக பந்து வீசினார். பேட்டிங்கை பொறுத்தவரை நமது அணி மிகவும் பலம் வாய்ந்த அணி என்பதனால் கடைசியில் சில பந்துகள் மட்டுமே ஜடேஜாவிற்கு கிடைக்கும். அந்த நேரங்களில் ஒரு சில போட்டிகளில் அவர் சிறப்பாக விளையாடலாம். ஒரு சில போட்டிகள் அவருக்கு சரியாக அமையாமல் போயிருக்கலாம்.

- Advertisement -

இந்த சீசனில் தோனிக்கு முன்னரே அவர் களமிறங்குவார் என்பது நன்றாக தெரியும். அதனால் எப்போதெல்லாம் ஜடேஜா களமிறங்குகிறாரோ அப்போதெல்லாம் சிஎஸ்கே ரசிகர்கள் தோனி களமிறங்க வேண்டும் என்ற ஆசையில் அவர் ஆட்டமிழக்க வேண்டும் என்ற கோஷங்களை எழுப்பினர். நிச்சயம் ரசிகர்கள் அப்படி செய்வது அவருக்கு வருத்தத்தை ஏற்படுத்தியிருக்கலாம். ஆனால் ஜடேஜா இது குறித்து ஒரு முறை கூட யாரிடமும் புகார் எதுவும் தெரிவிக்கவில்லை. அவர் ரசிகர்களின் மகிழ்ச்சியை மட்டுமே எதிர்பார்த்தார். அதோடு இதை போட்டியின் ஒரு பகுதியாகவே பார்த்தார்.

இதையும் படிங்க : விட்டா உலக கோப்பையையே ஃப்ரீயா கேப்பிங்க போல – இந்தியாவுக்கு ஆதரவாக பாகிஸ்தான் கோரிக்கையை நிராகரித்த ஐசிசி

அதேபோன்று கடைசி போட்டியின் போது கூட நான் ஜடேஜாவிடம் நீண்ட நேரம் மைதானத்தில் பேசிக் கொண்டிருந்தேன். அப்போது ஜடேஜாவை நான் சமாதானம் செய்ததாக எல்லாம் நினைத்துக் கொண்டார்கள். ஆனால் நாங்கள் இருவரும் போட்டியை பற்றி மட்டுமே பேசிக்கொண்டோம். ஜடேஜா மீது அணியில் மிகப்பெரிய மரியாதை இருக்கிறது. ஜடேஜாவும் சிஎஸ்கே அணிக்காக அர்ப்பணிப்புடன் விளையாடி வருகிறார். அதோடு இறுதிப்போட்டி முடிந்து கூட தோனிக்காக அந்த கோப்பையை அர்ப்பணிப்பதாக அவர் கூறியிருந்தது நெகிழ வைத்ததாக காசி விஸ்வநாதன் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement