IPL 2023 : 17 – 18 கோடிய வெச்சு அனுபவத்தை வாங்கிட முடியுமா? இங்கிலாந்து வீரரை விமர்சித்த சேவாக் – காரணம் இதோ

Sehwag
- Advertisement -

ஐபிஎல் 2023 டி20 கிரிக்கெட் தொடரில் ஏப்ரல் 20ஆம் தேதி மதியம் 3.30 மணிக்கு நடைபெற்ற 27வது போட்டியில் பஞ்சாப்பை 24 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்த பெங்களூரு தங்களுடைய 3வது வெற்றியை பதிவு செய்தது. மொகாலியில் நடைபெற்ற அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு விராட் கோலி 59 (47) ரன்கள் டு பிளேஸிஸ் 84 (56) ரன்கள் எடுத்த அதிரடியில் 20 ஓவர்களில் 174/4 ரன்கள் சேர்த்தது. அதைத் துரத்திய பஞ்சாப்புக்கு பிரப்சிம்ரன் 46 (30) ரன்கள் எடுத்தது தவிர அதர்வா டைட் 4, மேத்யூ ஷார்ட் 8, லியம் லிவிங்ஸ்டன் 2 என முக்கிய பேட்ஸ்மேன்கள் ஒற்றை இலக்க ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர்.

அப்போது ஹர்ப்ரீத் சிங் 13, கேப்டன் சாம் கரண் 10 என 2 முக்கிய மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் கொஞ்சமும் பொறுப்பில்லாமல் தேவையின்றி ரன் அவுட்டாகி பெரிய பின்னடைவை கொடுத்தனர். போதாக்குறைக்கு தமிழக வீரர் சாருக்கான் 7, ஹர்ப்ரீத் ப்ரார் 13 என லோயர் ஆர்டர் பேட்ஸ்மேன்களும் சொற்ப ரன்களில் அவுட்டானதால் கடைசியில் ஜித்தேஷ் சர்மா தனி ஒருவனாக 41 (27) ரன்கள் எடுத்து போராடியும் 18.2 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த பஞ்சாப் பரிதாபமாக தோற்றது. பெங்களூரு சார்பில் அதிகபட்சமாக சிராஜ் 4 விக்கெட்டுகளை எடுத்து மிரட்டினார்.

- Advertisement -

சேவாக் விளாசல்:
முன்னதாக இத்தொடரில் நட்சத்திர இந்திய அனுபவ வீரர் ஷிகர் தவான் பஞ்சாப்பின் கேப்டனாக அறிவிக்கப்பட்டார். அவரது தலைமையில் முதலிரண்டு போட்டியில் அடுத்தடுத்த வெற்றிகள் பெற்ற அசத்திய பஞ்சாப் புள்ளி பட்டியலில் டாப் இடத்தில் இருந்தது. அதே போல் பேட்டிங்கில் முதல் 3 போட்டிகளில் பெரிய ரன்களை எடுத்து போராடிய ஷிகர் தவான் துரதிஷ்டவசமாக காயத்தை சந்தித்ததால் சாம் கரண் தற்காலிக கேப்டனாக அறிவிக்கப்பட்டது அனைவருக்கும் ஆச்சரியமாக அமைந்தது.

குறிப்பாக 24 வயது மட்டுமே நிரம்பியதுடன் இதற்கு முன் பெரிய அளவில் கேப்டன்ஷிப் செய்து அனுபவமில்லாத போதிலும் 18.50 கோடி என்ற ஐபிஎல் வரலாற்றின் உச்சகட்ட தொகைக்கு வாங்கப்பட்ட ஒரே காரணத்தால் அவர் கேப்டனாக கூடுதல் பொறுப்பை செய்யட்டும் என்ற நோக்கத்தில் பஞ்சாப் நிர்வாகம் இந்த முடிவை எடுத்துள்ளது. அதில் பெரிய அளவில் மேஜிக் கேப்டன்ஷிப் செய்யாத அவர் இந்த போட்டியில் சோம்பேறித்தனமாக ஓடி ரன் அவுட்டானார். இந்நிலையில் 18 கோடிக்கு ஒரு வீரரை வாங்கினாலும் அனுபவத்தை யாராலும் வாங்க முடியாது என்று முன்னாள் வீரர் வீரேந்திர சேவாக் விமர்சித்துள்ளார்.

- Advertisement -

குறிப்பாக இப்போட்டியில் ரன் அவுட்டானது அவருடைய அனுபவமின்மையை காட்டுவதாக தெரிவிக்கும் சேவாக் இது பற்றி கிரிக்பஸ் இணையத்தில் பேசியது பின்வறுமாறு. “அவர் ஒரு சர்வதேச வீரர். ஆனால் அதற்காக 18 கோடிகளை கொடுத்து நீங்கள் அனுபவத்தை வாங்கி விட முடியாது. அனுபவம் என்பது நீங்கள் வெப்பமான சூரியனுக்கு கீழே நீண்ட காலம் விளையாடி உங்களுடைய முடி வெள்ளையாக மாறும் போது தான் கிடைக்கும். ஆனால் 18 கோடிகளை கொடுத்து வாங்கி விட்டோம் என்பதற்காக அவர் நமக்கு போட்டிகளை வென்று கொடுப்பார் என்று நினைக்கிறோம். இருப்பினும் அவரிடம் இன்னும் அந்த அளவுக்கு போதிய அனுபவம் வரவில்லை”

“குறிப்பாக அங்கே தேவையின்றி அவர் ரன் எடுக்க ஓடி அவுட்டானார். மாறாக கேப்டனாக இருக்கும் நீங்கள் முடிந்த அளவுக்கு நங்கூரமாக நின்று போட்டியை கடைசி ஓவர் வரை எடுத்துச் சென்றிருக்க வேண்டும். ஆனால் அதற்கு போதிய அனுபவமின்மையே காரணம்” என்று கூறினார்.

இதையும் படிங்க:IPL 2023 : 25 வருஷத்துக்கு முன்னாடி அடிச்ச முதல் ரன் மாதிரி இருந்துச்சு – டெல்லி அணியை கலாய்த்த கங்குலி, காரணம் இதோ

தற்போது புள்ளி பட்டியலில் 6 புள்ளிகளுடன் 7வது இடத்தில் தடுமாறும் பஞ்சாப் அடுத்ததாக ஏப்ரல் 22ஆம் தேதி வெற்றிகரமான மும்பையை எதிர்கொள்கிறது. அந்த போட்டியில் ஷிகர் தவான் மீண்டும் கேப்டனாக விளையாட வேண்டும் என்பதே பஞ்சாப் ரசிகர்களின் விருப்பமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement