IPL 2023 : ஜீரோ இம்பேக்ட் தான், இது ஒன்னும் இந்திய அணி இல்ல – டெல்லியின் தொடர் தோல்விகளால் பாண்டிங்கை விமர்சித்த சேவாக்

Virender Sehwag Ricky Ponting
- Advertisement -

கோடைகாலத்தில் இந்திய ரசிகர்களை மகிழ்வித்து வரும் ஐபிஎல் 2023 டி20 கிரிக்கெட் தொடரில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி மட்டும் இதுவரை பங்கேற்ற 5 போட்டிகளிலும் தொடர் தோல்விகளை பதிவு செய்து புள்ளி பட்டியலில் கடைசி இடத்தை பிடித்து திண்டாடி வருகிறது. அந்த அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் காயத்தால் வெளியேறியது ஆரம்பத்திலேயே பெரிய பின்னடைவாக அமைந்தாலும் 2016 ஐபிஎல் கோப்பையை வென்று அதிக ரன்கள் குவித்த வெளிநாட்டு வீரராக சாதனை படைத்த அனுபவம் கொண்ட டேவிட் வார்னர் வழி நடத்துவார் என்று அறிவிக்கப்பட்டது டெல்லி ரசிகர்களை ஓரளவு மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

DC vs RCB

அவருக்கு உறுதுணையாக வரலாற்றின் மிகச் சிறந்த கேப்டன் ரிக்கி பாண்டிங் பயிற்சியாளராகவும் இந்தியாவின் மகத்தான கேப்டன் சௌரவ் கங்குலி இயக்குனராகவும் இருந்ததால் டெல்லி வெற்றி நடை போடும் என்று அந்த அணி ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் பந்து வீச்சுத் துறை ஓரளவு சிறப்பாக இருந்தும் பேட்டிங் துறையில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இளம் இந்திய வீரர் பிரதிவி ஷா, மிட்சேல் மார்ஷ், ரிலீ ரோசவ், ரோவ்மன் போவல் போன்ற முக்கிய வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் அவுட்டாகி ஏமாற்றி வரும் நிலையில் கேப்டன் டேவிட் வார்னரும் மெதுவாக விளையாடி பெரிய பின்னடைவை ஏற்படுத்தி வருகிறார்.

- Advertisement -

சேவாக் விமர்சனம்:
அதனால் அக்சர் படேல் போன்ற ஒரு சில வீரர்களின் அதிரடி ஆட்டமும் இதுவரை டெல்லியின் வெற்றிக்கு கை கொடுக்கவில்லை. அதனால் 2013க்குப்பின் 10 வருடங்கள் கழித்து முதல் முறையாக தங்களுடைய முதல் 5 போட்டிகளில் தோற்றுள்ள அந்த அணியின் பிளே ஆப் சுற்று வாய்ப்பும் ஆரம்பத்திலேயே 50% பறிபோயுள்ளது. அதனால் டேர்டெவில்ஸ் என்ற பெயருடன் ஆரம்ப காலங்களில் சொதப்பியது போல இந்த சீசனில் டெல்லி செயல்பட்டு வருவது அந்த அணி ரசிகர்களை ஏமாற்றமடைய வைத்துள்ளது.

இந்நிலையில் 2020இல் முதல் முறையாக ஃபைனலுக்கு அழைத்துச் சென்ற போது அதற்கான பாராட்டுகளை பெற்ற பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் தற்போது தோல்விக்கான பொறுப்பையும் ஏற்க வேண்டும் என முன்னாள் டெல்லி வீரர் வீரேந்திர சேவாக் விமர்சித்துள்ளார். ஏனெனில் வெற்றிக்கான பாராட்டுகளை மட்டும் பெறுவதற்கு இது ஒன்றும் இந்திய அணி அல்ல என்று தெரிவிக்கும் அவர் பயிற்சியாளராக ரிக்கி பாண்டிங் இம்முறை டெல்லி அணியில் ஜீரோ தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.

- Advertisement -

மேலும் களத்தில் விளையாடும் வீரர்கள் சிறப்பாக செயல்பட தவறினால் எந்த ஜாம்பவான் பயிற்சியாளர்களாலும் ஒன்றும் செய்ய முடியாது என்ற நிதர்சனத்தையும் கூறியுள்ள அவர் இது பற்றி கிரிக்பஸ் இணையத்தில் பேசியது பின்வருமாறு. “தொடர் தோல்விகளைப் பெறும் கோடாரியை பஞ்சாப் அணி டெல்லிக்கு அனுப்பி விட்டது என்று நான் முன்பே சொன்னேன் என்று நினைக்கிறேன். தற்போது அந்தக் கோடாரி டெல்லியை அடைந்துள்ளது. ஒரு அணி வெல்லும் போது பாராட்டுகளை பெறும் பயிற்சியாளர்கள் தோற்கும் போதும் அதற்கான பொறுப்பேற்க வேண்டும்”

virender sehwag

“குறிப்பாக இதற்கு முன் ரிக்கி பாண்டிங் சிறப்பாக செயல்பட்டு டெல்லியை ஃபைனல் வரை அழைத்துச் செல்வதற்கு உதவியதாக நாம் பாராட்டியுள்ளோம். அப்போதிலிருந்து கிட்டத்தட்ட டெல்லி பிளே ஆப் சுற்றுக்கு தொடர்ந்து தகுதி பெறுவதாக சொன்னோம். எனவே அந்த பாராட்டுகளை பெற்ற அவர் தற்போது விமர்சனங்களையும் வாங்கிக் கொள்ள வேண்டும். ஏனெனில் வெற்றிக்கான பாராட்டுகளை மட்டும் பெற்றுக்கொண்டு தோல்விக்கான விமர்சனங்களை மற்றொருவர் தலையில் கட்டுவதற்கு இது ஒன்றும் இந்திய அணி கிடையாது”

இதையும் படிங்க:வீடியோ : தடுத்த சூரியகுமார் – கெட்ட வார்த்தைகளுடன் மோதிய ஒரே ஊரை சேர்ந்த இந்திய வீரர்கள், அம்பயர்கள் அதிரடி தண்டனை

“ஐபிஎல் தொடரில் எப்போதும் பயிற்சியாளர்களின் வேலை ஜீரோ தான். இங்கே வீரர்களை சரியாக நிர்வகித்து அவர்களுக்கு தேவையான தன்னம்பிக்கையை கொடுப்பதே பயிற்சியாளர்களின் வேலையாகும். எனவே ஒரு அணி சிறப்பாக செயல்படும் போது தான் பயிற்சியாளரும் சிறப்பாக தெரிவார். ஆனால் இங்கே டெல்லியில் சிறப்பாக செயல்படவில்லை. தற்போதைக்கு இந்த குழப்பத்திலிருந்து என்ன செய்தால் வெற்றி பாதைக்கு திரும்ப முடியும் என்ற நிலைமைக்கு டெல்லி வந்துள்ளனர் என்று நினைக்கிறேன்” என கூறினார்.

Advertisement