தடுத்த சூரியகுமார் – போட்டியின்போது மோதிய ஒரே ஊரை சேர்ந்த இந்திய வீரர்கள், அம்பயர்கள் அதிரடி தண்டனை

Nitish Rana Shokeen.jpeg
- Advertisement -

பரபரப்பான தருணங்களுடன் இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு விருந்து படைத்து வரும் ஐபிஎல் 2023 டி20 தொடரில் ஏப்ரல் 16ஆம் தேதி மதியம் 3.30 மணிக்கு நடைபெற்ற 22வது லீக் போட்டியில் கொல்கத்தாவை 5 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்த மும்பை தங்களுடைய 2வது வெற்றியை பதிவு செய்து நிம்மதியடைந்தது. வான்கடே மைதானத்தில் நடைபெற்ற அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 185 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக ப்ரெண்டன் மெக்கலத்துக்கு பின் (2008இல்) சதமடித்த 2வது கொல்கத்தா வீரராக சாதனை படைத்த வெங்கடேஷ் ஐயர் 6 பவுண்டரி 9 சிக்ஸருடன் 104 (51) ரன்கள் எடுக்க மும்பை சார்பில் அதிகபட்சமாக ரித்திக் சாக்கின் 2 விக்கெட்டுகள் எடுத்தார்.

அதை துரத்திய மும்பைக்கு இசான் கிசான் நீண்ட நாட்கள் கழித்து சரவெடியாக 5 பவுண்டரி 5 சிக்சருடன் 58 (25) ரன்களும் கேப்டனாக செயல்பட்ட சூரியகுமார் யாதவ் 4 பவுண்டரி 3 சிக்சருடன் 43 (25) ரன்களும் குவித்து பார்முக்கு திரும்பினார். அவர்களுடன் ரோகித் சர்மா 20 (13), திலக் வர்மா 30 (25), டிம் டேவிட் டேவிட் 24* (13) என இதர முக்கிய பேட்ஸ்மேன்களும் அதிரடியான ரன்களை எடுத்ததால் 17.4 ஓவரிலேயே இலக்க எட்டிய மும்பை அதிரடியான வெற்றி பெற்றது.

- Advertisement -

ஒரே ஊர் வீரர்களின் மோதல்:
முன்னதாக இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தாவுக்கு கேப்டன் நிதிஷ் ராணா 10 பந்துகளில் 5 ரன்களை எடுத்ததால் ஏற்பட்ட அழுத்தத்தில் அதிரடியாக விளையாட முயற்சித்து இளம் வீரர் ரித்திக் ஷாக்கீன் வீசிய 9வது ஓவரின் முதல் பந்திலேயே கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அப்போது பெவிலியின் நோக்கி நடையை கட்டிய நித்திஷ் ராணாவிடம் சில வார்த்தைகளை ரித்திக் ஷாக்கீன் பேசினார். அதனால் கோபமடைந்த நித்திஷ் ராணா பதிலுக்கு அவரது அருகே சென்று வெளிப்படையாகவே பிரபல இந்தி கெட்ட வார்த்தையில் திட்டியது கேமராவில் தெளிவாகத் தெரிந்தது.

அதனால் களத்தில் இருவருக்கும் இடையே பெரிய மோதல் ஏற்பட தெரிந்தாலும் சூரியகுமார் யாதவ் உள்ளிட்ட இதர மும்பை வீரர்கள் இருவரையும் தடுத்து அமைதி படுத்தியதால் மேற்கொண்டு எந்த பரபரப்பும் ஏற்படவில்லை. ஆனால் தலைநகர் டெல்லியைச் சேர்ந்த இவர்கள் ரஞ்சிக்கோப்பையில் ஒன்றாக ஒரே அணிக்காக விளையாடி வருகிறார்கள். குறிப்பாக நிதிஷ் ராணா தலைமையில் ஜூனியராக விளையாடும் ஷாக்கீன் உள்ளூர் அணியின் கேப்டனுக்கு மரியாதை கொடுக்காமல் இப்படி செயல்பட்டது ரசிகர்களுக்கு ஆச்சரியமாக அமைந்தது.

- Advertisement -

அத்துடன் இதற்கு முன் உள்ளூர் அணியில் விளையாடிய போது ஏற்பட்ட ஏதோ ஒரு பகைமையே இந்த மோதலுக்கு காரணமாகவும் பார்க்கப்படுகிறது. அப்படி ஒரே ஊரில் பிறந்தும் மோசமான கெட்ட வார்த்தைகளால் நேரலையில் மோதிக்கொண்ட அவர்களது நடவடிக்கையால் அதிருப்தியடைந்த அம்பயர் போட்டியின் முடிவில் ஐபிஎல் நிர்வாகத்திடம் இது பற்றி புகார் செய்தார். அதை ஏற்றுக்கொண்ட ஐபிஎல் நிர்வாகம் வெளிப்படையாகவே நேரலையில் தெரியும் அளவுக்கு மோசமான கெட்ட வார்த்தையை பேசிய நித்திஷ் ராணாவுக்கு போட்டியின் சம்பளத்திலிருந்து 25% அபராதமாக விதித்துள்ளது.

அதே போல அவருடன் நேருக்கு நேராக மோதிய ரித்திக் சாக்கினுக்கு 10% போட்டியின் சம்பளத்திலிருந்து அபரதமாக விதிக்கப்படுவதாக ஐபிஎல் நிர்வாகம் தெரிவித்துள்ளது. குறிப்பாக நிதிஷ் ராணா ஐபிஎல் 2.21 விதிமுறையையும் ஷாக்கீன் 2.5 விதிமுறையையும் மீறியுள்ளதால் இந்த தண்டனை கொடுக்கப்பட்டுள்ளதாக ஐபிஎல் நிர்வாகம் தெளிவுபடுத்தியுள்ளது. அதை அவர்கள் ஏற்றுக் கொண்டதால் மேற்படி விசாரணை எதுவுமில்லாமல் ஐபிஎல் நிர்வாகம் இந்த சர்ச்சையை முடித்துள்ளது.

இதையும் படிங்க:MI vs KKR : ரோஹித் சர்மா இம்பேக்ட் பிளேயராக விளையாட காரணம் இதுதான் – சூரியகுமார் யாதவ் விளக்கம்

அது போக இதே போட்டியில் ரோகித் சர்மாவுக்கு பதிலாக தற்காலிக கேப்டனாக செயல்பட்ட சூரியகுமார் யாதவ் தலைமையில் மும்பை இந்தியன்ஸ் அணி குறிப்பிட்ட நேரத்திற்குள் 20 ஓவர்களை வீசி முடிக்கவில்லை. அதனால் அவருக்கும் போட்டி சம்பளத்திலிருந்து 12 லட்சம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளதாக ஐபிஎல் நிர்வாகம் அதிரடியாக அறிவித்துள்ளது.

Advertisement