CWC 2023 : நாம வேணாம்.. ஐசிசியே இந்தியாவ ஃபைனலுக்கு போய் ஜெய்க்க வெச்சுருவாங்க.. சேவாக் அதிரடியான பேட்டி

Virender Sehwag 2
- Advertisement -

ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி தங்களுடைய முதல் போட்டியில் வலுவான ஆஸ்திரேலியாவை தோற்கடித்து வெற்றி பயணத்தை தொடங்கியுள்ளது. அதனால் ஐசிசி தரவரிசையில் உலகின் நம்பர் ஒன் அணியாக திகழும் இந்தியா 2011 போல சொந்த மண்ணில் கோப்பையை வென்று சரித்திரம் படைக்கும் என்ற நம்பிக்கை ரசிகர்களிடம் ஏற்பட்டுள்ளது.

இருப்பினும் முதல் போட்டி மட்டுமே நிறைவு பெற்றுள்ள இத்தொடரில் நாக் அவுட் சுற்றுக்கு தகுதி பெற குறைந்தபட்சம் இந்தியா 6 முதல் 7 வெற்றிகளை பதிவு செய்வது அவசியமாகிறது. அதே சமயம் விராட் கோலி பெரும்பாலான வீரர்கள் நல்ல ஃபார்மில் இருப்பதால் நிச்சயமாக லீக் சுற்றில் சிறப்பாக செயல்பட்டு அரையிறுதி சுற்றுக்கு இந்தியா எளிதாக தகுதி பெறும் என்று உறுதியாக சொல்லலாம்.

- Advertisement -

சேவாக் அதிரடி:
ஏனெனில் கடந்த 10 வருடங்களில் நடைபெற்ற ஐசிசி தொடர்களில் 2021 டி20 உலகக்கோப்பை தவிர்த்து எஞ்சிய அனைத்து தொடர்களிலும் இந்தியா நாக் அவுட் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. ஆனால் லீக் சுற்றில் சிறப்பாக செயல்படும் இந்தியா நாக் அவுட் சுற்றில் முக்கிய நேரத்தில் சொதப்பி வெற்றியையும் கோப்பையையும் எதிரணிக்கு தாரை வார்த்து வருவது தான் இந்திய ரசிகர்களுக்கு புரியாத புதிராகவும் ஆறாத வடுவாகவும் இருந்து வருகிறது.

இந்நிலையில் சொந்த மண்ணில் நடைபெறும் இந்த தொடரில் இந்தியா லீக் சுற்றுடன் வெளியேறினால் அதன் பின் ரசிகர்கள் உலகக்கோப்பையை பார்க்க மாட்டார்கள் என்று வீரேந்திர சேவாக் தெரிவித்துள்ளார். அதனால் ஒளிபரப்பு மற்றும் விளம்பர வருமானத்திற்காக இந்தியா குறைந்தபட்சம் ஃபைனல் அளவுக்கு சாதகமான மைதானங்களை ஐசிசியே மறைமுகமாக அமைத்துக் கொடுக்கும் என்று அதிரடியாக பேசியுள்ள அவர் இது பற்றி கிரிக்பஸ் இணையத்தில் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“ஐசிசியும் இந்தியாவுக்கு உதவும். குறிப்பாக இந்த உலகக் கோப்பை போட்டி நடைபெறும் மைதானங்கள் இந்திய மைதான பராமரிப்பாளர்களால் தயாரிக்கப்படுகிறது. எனவே இந்தியா செமி ஃபைனல் அல்லது ஃபைனலில் விளையாடினால் அதில் இந்திய அசத்துவதற்கு தகுந்த பிட்ச்கள் தயாரிக்கப்படலாம். எனவே இந்த உலகக் கோப்பையை இந்தியா வெல்வதற்கு அதிக வாய்ப்புள்ளதாக நான் கருதுகிறேன்”

இதையும் படிங்க: ENG vs BAN : இதெல்லாம் பத்தாது.. இந்தியாவில் அது தான் பெரிய சவாலா இருக்கு.. வெற்றிக்கு பின் பட்லர் பேட்டி

“மேலும் இத்தொடரின் கடைசி வரை இந்தியா விளையாடினால் அது பார்வையாளர்கள் மற்றும் ஸ்பான்சர்சிப் அடிப்படையில் மிகப்பெரிய லாபத்தை கொடுக்கும் என்பது ஐசிசிக்கு நன்றாக தெரியும்” என்று கூறினார். முன்னதாக 2016 உலகக்கோப்பை சொந்த மண்ணில் நடைபெற்ற போதிலும் இந்தியா நாக் அவுட் சுற்றுடன் வெளியேறியது. மேலும் ஐபிஎல் தொடரில் விளையாடிய பெரும்பாலான வெளிநாட்டு வீரர்கள் இந்திய ஆடுகளங்களை பற்றி தெரிந்து வைத்துள்ளதால் மைதான சாதகம் என்பது இந்தியாவுக்கு மட்டும் இருக்காது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement