மேட்ச்ல பாட்டு பாட வந்தியா? ஜாலியாக பேட்டால் அடித்து எச்சரித்த சச்சின் – 2011 உ.கோ பின்னணியை பகிர்ந்த சேவாக்

worldcup2011
- Advertisement -

டெல்லியைச் சேர்ந்த முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவாக் களமிறங்கிய முதல் ஓவரிலிருந்தே ஆக்ரோஷமான அதிரடியான பேட்டிங்கை வெளிப்படுத்தி உலகின் டாப் வந்து வீச்சாளர்களையும் செட்டிலாக விடாமல் விரைவாக ரன்களை சேர்த்து இந்தியாவுக்கு நிறைய வெற்றிகளை பெற்றுக் கொடுத்த பெருமைக்குரியவர். குறிப்பாக பொறுமையாக விளையாட வேண்டிய டெஸ்ட் கிரிக்கெட்டிலும் சரவெடியாக விளையாடி இந்திய கிரிக்கெட்டில் அதிரடி எனும் வார்த்தைக்கு உண்மையான இலக்கணத்தை கற்பித்த அவர் சுனில் கவாஸ்கர், சச்சின் டெண்டுல்கர் ஆகியோரால் கூட தொட முடியாத முச்சதத்தை அசால்டாக 2 முறை தொட்டு வரலாற்று சாதனை படைத்த பெருமைக்குரியவர்.

Sehwag

- Advertisement -

பொதுவாக சேவாக் என்றாலே பெரும்பாலான போட்டிகளில் முதல் பந்திலேயே தெறிக்க விடும் பவுண்டரியை பறக்க விடுவதில் பெயர் போனவர். அதை விட 90களில் இருக்கும் போது எப்படியாவது 100 ரன்களை தொட வேண்டும் என்ற எண்ணத்துடன் சிங்கிள் டபுள், டபுள் எடுத்து சதமடிக்கும் உலகின் பல பேட்ஸ்மேன்களுக்கு மத்தியில் 90, 190, 290 என எந்த வகையான சதமாக இருந்தாலும் அதை பெரும்பாலும் பவுண்டரி அல்லது சிக்சருடன் தொடுவதில் சேவாக் உலகப் புகழ் பெற்றவர்.

சச்சின் அடிச்சாரு:
இவற்றுடன் எந்த வகையான போட்டி நடைபெற்றாலும் அதில் அழுத்தத்தை தவிர்ப்பதற்காக தமக்கு பிடித்த பாடல்களை பாடிக்கொண்டே சேவாக் அதிரடியாக பேட்டிங் செய்வார் என்று அவருடன் இணைந்து விளையாடிய சில வீரர்கள் இதற்கு முன் தெரிவித்தது ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியது. இந்நிலையில் கடந்த 2011ஆம் ஆண்டு சொந்த மண்ணில் 28 வருடங்கள் கழித்து உலக கோப்பையை வென்று சரித்திரம் படைத்த இந்தியாவுக்காக தொடக்க வீரராக ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கருடன் வீரவேந்திரன் சேவாக் விளையாடினார்.

Sehwag

அந்த தொடரில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் அப்படி பாட்டு பாடிக்கொண்டே விளையாடி கொண்டிருக்கும் போது ஒரு ஓவரின் முடிவில் ஜாலியாக தம்மை லேசாக பேட்டால் அடித்த சச்சின் டெண்டுல்கர் “இப்படி பாட்டு பாடி என்னை பைத்தியம் பிடிக்க வைக்காதீர்கள்” என எச்சரித்ததாக ரசிகர்கள் அறியாத பின்னணியை சேவாக் பகிர்ந்துள்ளார். இது பற்றி சமீபத்திய யூடியூப் நிகழ்ச்சியில் அவர் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“2011 உலக கோப்பையில் தென்னாபிரிக்காவுக்கு எதிராக நாங்கள் விளையாடினோம். அந்த போட்டியில் நான் பேட்டிங் செய்யும் போது பாட்டு பாடிக்கொண்டே விளையாடினேன். சச்சினும் நல்ல டச்சில் இருந்தார். பொதுவாக அவர் ஒவ்வொரு ஓவருக்கு இடையே அருகில் வந்து பேசும் பழக்கத்தை கொண்டவர். ஆனால் நான் அதிகம் பேச மாட்டேன். மாறாக பாட்டு பாடுவேன். ஏனெனில் அது போட்டியில் கவனத்துடன் விளையாடுவதற்கு எனக்கு உதவும். அதே போல நான் தொடர்ந்து 3 ஓவர்கள் விளையாடினேன்”

sehwag

“ஆனால் 4வது ஓவர் முடிந்த பின் எனக்கு பின்னாடி வந்த சச்சின் என்னை பேட்டால் அடித்து “இது போல பாடல்களை நீங்கள் தொடர்ந்து பாடினால் எனக்கு பைத்தியம் பிடித்து விடும்” என்று கூறினார். அப்போது எனக்கு “நாம் நன்றாக தானே பேட்டிங் செய்து கொண்டிருக்கிறோம். பின்னர் ஏன் பேச வேண்டும்? பேசாமல் தொடர்ந்து விளையாடலாமே” என தோன்றியது. அதே போல நாங்கள் 20 ஓவர்கள் வரை விளையாடி 140 – 150 ரன்களை எடுத்தோம். அப்படி பொதுவாக ஒவ்வொரு ஓவர் முடிந்த பின்பும் சச்சின் எப்போதும் அருகில் வந்து எதிரணியின் பவுலர்கள் எப்படி வீசுவார்கள் மற்றும் அதை முறியடிப்பதற்கான திட்டத்தை பற்றி பேசுவார். ஆனால் நான் அதைப் பற்றி எல்லாம் கவலைப்படாமல் எனது மனதிற்கேற்றார் போல் விளையாடுவேன்” என்று கூறினார்.

இதையும் படிங்க:வீடியோ : அபார ஃபீல்டிங், 50 லட்சத்துக்கு மீறிய விஸ்வாசத்தை காட்டும் ரகானே – சம்பளத்தை ஏத்தமாறு சிஎஸ்கே ரசிகர்கள் பாராட்டு

அந்த போட்டியில் 142 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து அபார தொடக்கம் கொடுத்த சச்சின் சதமடித்து 11 ரன்களும் சேவாக் 73 ரன்களும் எடுத்தனர். ஆனால் அடுத்து வந்த பேட்ஸ்மேன்கள் சொதப்பியதால் இறுதியில் 296 ரன்களுக்கு அவுட்டான இந்தியா அந்த உலகக் கோப்பையில் சந்தித்த ஒரே தோல்வியை பதிவு செய்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement