வீடியோ : அபார ஃபீல்டிங், 50 லட்சத்துக்கு மீறிய விஸ்வாசத்தை காட்டும் ரகானே – சம்பளத்தை ஏத்தமாறு சிஎஸ்கே ரசிகர்கள் பாராட்டு

Rahane CSk
- Advertisement -

அனல் பறந்து வரும் ஐபிஎல் 2023 டி20 கிரிக்கெட் தொடரில் ஏப்ரல் 17ஆம் தேதி இரவு 7.30 மணிக்கு நடைபெற்ற 24வது லீக் போட்டியில் பெங்களூருவை 8 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்த சென்னை புள்ளி பட்டியலில் டாப் 4 இடத்திற்குள் நுழைந்து அசத்தியது. சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை 20 ஓவர்களில் அதிரடியாக செயல்பட்டு 226/6 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக டேவோன் கான்வே 83 (45) சிவம் துபே 52 (27) ரஹானே 37 (20) என முக்கிய பேட்ஸ்மேன்கள் அதிரடியான ரன்களை எடுத்தனர்.

அதை தொடர்ந்து 227 ரன்களை துரத்திய பெங்களூருவுக்கு முதல் ஓவரிலேயே விராட் கோலி 6 ரன்களில் அவுட்டாக அடுத்து வந்த மஹிபால் லோம்ரர் டக் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தார். இருப்பினும் 3வது விக்கெட்டுக்கு 126 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து மிரட்டிய மேக்ஸ்வெல் 76 (36) ரன்களும் கேப்டன் டு பிளேசிஸ் 62 (33) ரன்களும் எடுத்து முக்கிய நேரத்தில் ஆட்டமிழந்தனர். ஆனால் அடுத்து வந்த தினேஷ் கார்த்திக் 28 (14), அஹமது 12 (10) என லோயர் ஆர்டர் பேட்ஸ்மேன்களை சொற்ப ரன்களில் அவுட்டாக்கி டெத் ஓவர்களில் சிறப்பாக செயல்பட்ட சென்னை போராடி வெற்றி பெற்றது. அதிகபட்சமாக துஷார் தேஷ்பாண்டே 3 விக்கெட்டுகளை எடுத்தார்.

- Advertisement -

சம்பளத்தை ஏத்துங்க:
முன்னதாக இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னைக்கு ருதுராஜ் 3 ரன்னில் அவுட்டானதும் களமிறங்கிய ரகானே கொஞ்சமும் தாமதிக்காமல் 3 பவுண்டரி 2 சிக்சரை பறக்க விட்டு 37 (20) ரன்களை 185.00 என்ற ஸ்ட்ரைக் ரேட்டில் வெளுத்து வாங்கி அதிரடியை துவக்கி தன்னுடைய விக்கெட்டை பற்றி கொஞ்சமும் கவலைப்படாமல் ஆட்டமிழந்தார். அவரது அதிரடியை பார்த்து தான் எஞ்சிய சென்னை பேட்ஸ்மேன்களும் பெங்களூரு பவுலர்களை அதிரடியாக எதிர்கொண்டு விரைவாக ரன்களை சேர்த்தனர்.

பொதுவாகவே சற்று மெதுவாக விளையாடக்கூடிய டெஸ்டிஸ் ஸ்பெசலிஸ்ட் பேட்ஸ்மேனாக அறியப்படும் அவர் சமீப காலங்களில் தடுமாற்றமாக செயல்பட்டதாலேயே இந்திய அணியிலும் ஐபிஎல் தொடரிலும் கழற்றி விடப்பட்டார். ஆனால் இந்த சீசனில் தன்னை நம்பி வெறும் 50 லட்சத்துக்கு வாங்கிய சென்னைக்காக முதல் போட்டியிலேயே பிறந்த மும்பைக்கு எதிராக அதிவேக அரை சதமடித்த வீரராக சாதனை படைத்து 61 (27) ரன்களை விளாசி வெற்றிக்கு முக்கிய பங்காற்றிய அவர் ராஜஸ்தானுக்கு எதிரான போட்டியிலும் அதிரடியாக 31 (19) ரன்கள் எடுத்தார்.

- Advertisement -

அந்த வகையில் இதுவரை 3 போட்டிகளில் 92 ரன்களை தனது கேரியரிலேயே உச்ச கட்டமாக 200.00 என்ற ஸ்ட்ரைக் ரேட்டில் எடுத்துள்ள அவர் உண்மையாகவே சென்னை அணியில் இவ்வளவு சிறப்பாக செயல்படுவார் என்று யாருமே எதிர்பார்க்கவில்லை. அதை விட ரவீந்திர ஜடேஜா வீசிய 9வது ஓவரின் ஒரு பந்தை கிளன் மேக்ஸ்வெல் அதிரடியான சிக்ஸராக பறக்க விட்டார். ஆனால் கவர்ஸ் திசையின் பவுண்டரி எல்லையில் நின்று கொண்டிருந்த ரகானே சரியாகப் பந்து மீது கவனத்தை வைத்து முடிந்தளவுக்கு தாவி பிடித்தார்.

இருப்பினும் காற்றில் பேலன்ஸ் செய்ய முடியாது என்பதை உணர்ந்த அவர் பந்தை உடனடியாக களத்திற்குள் தூக்கிப்போட்டு விழுந்து மீண்டும் எடுத்துப் போட்டார். அந்த வகையில் சிக்ஸர் செல்ல வேண்டிய பந்தை சூப்பர்மேனை போல் தாவி பிடித்து தடுத்த அவர் 5 ரன்களை சேமித்தது வர்ணையாளர்கள் மற்றும் ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தி பாராட்ட வைத்தது.

- Advertisement -

அப்படி பேட்டிங், ஃபீல்டிங் துறைகளில் தீயாக வேலை செய்யும் ரகானேவை பார்க்கும் சென்னை ரசிகர்கள் இவருக்கு 50 லட்சத்தை விட அதிக சம்பளத்தை கொடுக்கலாம் என்று மனதார பாராட்டுகிறார்கள். குறிப்பாக 16 மற்றும் 14 என மொத்தமாக 30 கோடிகளை வாங்கியும் முழுமையாக 3 போட்டிகளில் விளையாடாத பென் ஸ்டோக்ஸ் மற்றும் தீபக் சஹர் ஆகியோரை விட ரகானே கோடிகளுக்கு சமமான செயல்பாடுகளை வெளிப்படுத்துவதால் சம்பளத்தை அதிகரிக்குமாறு சென்னை ரசிகர்கள் மனம் விட்டு பாராட்டுகிறார்கள்.

இதையும் படிங்க:RCB vs CSK : தெறிக்க விட்ட டு பிளேஸிஸ் – மேக்ஸ்வெல், ஆனாலும் ஆர்சிபி’யின் போராட்ட வெற்றியை சென்னை பறித்தது எப்படி

இருப்பினும் இந்த செயல்பாடுகள் அவருக்கு கோடிகளை பெற்றுக் கொடுக்காவிட்டாலும் விரைவில் நடைபெறும் 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் காயமடைந்த ஸ்ரேயாஸ் ஐயருக்கு பதிலாக மீண்டும் இந்திய அணியில் விளையாடும் வாய்ப்பு கிடைப்பதற்கு வழிவகை செய்யும் என்று உறுதியாக நம்பலாம்.

Advertisement