CWC 2023 : ரசிகர்கள் இல்லாம மானம் போகுது.. அடுத்து மேட்ச்ல அதையாச்சும் செய்ங்க.. பிசிசிஐ’க்கு சேவாக் கோரிக்கை

Virender Sehwag 8
- Advertisement -

ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடர் அக்டோபர் 5ஆம் தேதி இந்தியாவில் சாதாரணமான முறையில் துவங்கியது என்று தான் சொல்ல வேண்டும். ஏனெனில் உலக கிரிக்கெட்டின் சாம்பியனை தீர்மானிப்பதற்காக ஐசிசி நடத்தும் இந்த உலகக் கோப்பை வரலாற்றிலேயே முதல் முறையாக முழுவதுமாக இந்தியாவில் மட்டுமே நடைபெறுகிறது.

எனவே கோலகாலமாக துவங்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட இந்த உலகக்கோப்பைக்காக நேற்று நடைபெறவிருந்த துவக்க விழா திடீரென முன்னறிவிப்பின்றி ரத்து செய்யப்பட்டது. அந்த நிலையில் அகமதாபாத் நகரில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதிய முதல் போட்டி மதியம் 2.30 மணிக்கு நடைபெற்றது. பொதுவாகவே உலகக்கோப்பையின் முதல் போட்டி என்றால் ஒரு இருக்கை கூட காலியாக இல்லாத அளவுக்கு மொத்த மைதானமும் ரசிகர்கள் கூட்டத்தால் நிரம்பி வழிவது வழக்கமாகும்.

- Advertisement -

சேவாக் கோரிக்கை:
ஆனால் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட ரசிகர்கள் அமரக்கூடிய அகமதாபாத் மைதானத்தில் நடைபெற்ற அந்த முதல் போட்டிக்கு 10000 ரசிகர்கள் கூட வராதது மொத்த இந்திய ரசிகர்களுக்கும் தலை குனிவை ஏற்படுத்தியது. ஏனெனில் இது தான் சமயம் என்று பாகிஸ்தான் ரசிகர்கள் இந்தியாவை சமூக வலைதளங்களில் கிண்டலடித்து வருகிறார்கள். முன்னதாக உலகக் கோப்பைக்கான டிக்கெட் ஆயிரம் முதல் லட்சங்கள் வரை இருந்த போதிலும் அதை வாங்குவதற்கு பல மணி நேரங்கள் காத்திருந்த பெரும்பாலான ரசிகர்கள் ஏமாற்றத்தை சந்தித்தனர்.

அத்துடன் முதல் போட்டிக்கான டிக்கெட் துவங்கிய ஒரு சில மணி நேரங்களை வெற்றி தீர்த்ததாக ஐசிசி மற்றும் பிசிசிஐ தெரிவித்திருந்தன. அப்படியிருந்தும் இந்த போட்டியில் கால்வாசி மைதானத்தை நிரப்பும் அளவுக்கு கூட ரசிகர்கள் வராதது ஏன் என்ற குழப்பம் அனைவரிடமும் காணப்படுகிறது. இருப்பினும் மதிய நேரத்தில் வெயில் காரணமாகவும் கூட்டம் வரவில்லை என்று தெரிவித்த இந்திய ரசிகர்கள் மாலையில் வந்து விடும் என்று பாகிஸ்தான் ரசிகர்களுக்கு பதிலளித்து மானத்தை காப்பாற்றும் முயற்சியில் இறங்கினர்.

- Advertisement -

இந்நிலையில் இந்தியா அல்லாத வெளிநாட்டு அணிகள் பங்கேற்கும் போட்டிகளை பள்ளி குழந்தைகள் மற்றும் கல்லூரி மாணவர்கள் இலவசமாக காண்பதற்கு பிசிசிஐ ஏற்பாடு செய்ய வேண்டுமென சேவாக் கோரிக்கை வைத்துள்ளார். இது பற்றி ட்விட்டரில் அவர் கூறியுள்ளது பின்வருமாறு.

இதையும் படிங்க: CWC23 : காலியான மைதானம். ரசிகர்களுக்காக புதிய இலவசத்தை அறிவித்த ஜெய் ஷா – விவரம் இதோ

“அலுவலக நேரம் முடிந்த பின் ரசிகர்கள் போட்டியை காண வருவார்கள் என்று நம்புகிறேன். ஆனால் இந்தியா பங்கேற்காத போட்டிகளை பார்க்க பள்ளி குழந்தைகள் மற்றும் மாணவர்களுக்கு இலவச டிக்கெட்டுகள் இருக்க வேண்டும். ஏற்கனவே ஒருநாள் போட்டிகளில் ஆர்வம் குறைந்து வரும் நிலையில் அது இளைஞர்கள் உலகக்கோப்பையை பற்றி தெரிந்து கொள்ள உதவும். அத்துடன் வீரர்களும் ரசிகர்கள் நிரம்பி வழியும் மைதானத்தில் விளையாடும் வாய்ப்பு பெறுவார்கள்” என்று கூறினார்.

Advertisement