இப்போவும் சொல்றேன் இங்கிலாந்து அதை சாதிக்கும்.. வாகனுக்கு 1996 – 2023 வரை புள்ளிவிவரத்துடன் சேவாக் பதில்

Micheal Vaughan 2
- Advertisement -

இந்தியாவில் உலக கிரிக்கெட் ரசிகர்களை மகிழ்வித்து வரும் ஐசிசி உலகக் கோப்பை தொடரில் அக்டோபர் 15ஆம் தேதி நடைபெற்ற 13வது போட்டியில் நடப்புச் சாம்பியன் இங்கிலாந்தை 69 ரன்கள் வித்தியாசத்தில் அசால்டாக தோற்கடித்த ஆப்கானிஸ்தான் அனைவருக்கும் ஆச்சரியத்தை கொடுத்தது. தலைநகர் டெல்லியில் நடைபெற்ற அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த அந்த அணி சிறப்பாக செயல்பட்டு 285 ரன்களை இலக்காக நிர்ணயித்தது.

அந்த அணிக்கு அதிகபட்சமாக ரஹ்மத்துல்லா குர்பாஸ் 80 ரன்களும் இக்ரம் கில் 58 ரன்களும் எடுத்து அசத்திய நிலையில் இங்கிலாந்து சார்பில் அதிகபட்சமாக அடில் ரசித் 3 விக்கெட்டுகள் சாய்த்தார். அதை சேசிங் செய்த இங்கிலாந்து ஆரம்பம் முதலே ஆப்கானிஸ்தானின் தரமான பந்து வீச்சில் சீரான இடைவெளிகளில் விக்கெட்டுகளை இழந்து 40.3 ஓவரில் 215 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

- Advertisement -

சேவாக் பதில்:
அந்த அணிக்கு கேப்டன் பட்லர், ஜோ ரூட், ஜானி பேர்ஸ்டோ உள்ளிட்ட முக்கிய பேட்ஸ்மேன்கள் ஏமாற்றத்தை கொடுத்த நிலையில் அதிகபட்சமாக ஹரி ப்ரூக் 66 ரன்கள் எடுத்தார். ஆப்கானிஸ்தான் சார்பில் அதிகபட்சமாக முஜீப் உர் ரஹ்மான், ரஷித் கான் தலா 3 விக்கெட்டுகளும் முகமது நபி 2 விக்கெட்களும் எடுத்தனர். அதனால் 14 தொடர் தோல்விகளுக்கு பின் முதல் முறையாக உலகக்கோப்பை ஆப்கானிஸ்தான் ஒரு வெற்றியை பதிவு செய்து அசத்தியது.

மறுபுறம் தரமான வீரர்கள் இருந்தும் சுமாராக விளையாடிய இங்கிலாந்து டெஸ்ட், ஒருநாள், டி20 ஆகிய அனைத்து வகையான கிரிக்கெட்டின் சேர்த்து முதல் முறையாக ஆப்கானிஸ்தானுக்கு எதிராக ஒரு தோல்வியை பதிவு செய்து தலைகுனிவுக்குள்ளானது. அதை விட ஏற்கனவே நியூசிலாந்துக்கு எதிரான முதல் போட்டியிலும் தோற்ற அந்த அணி இதுவரை பங்கேற்ற 3 போட்டிகளில் 2 தோல்விகளை சந்தித்து புள்ளி பட்டியலில் 9வது இடத்திற்கு சரிந்துள்ளது.

- Advertisement -

அதன் காரணமாக செமி ஃபைனலுக்கு தகுதி பெற்று கோப்பையை தக்க வைக்க எஞ்சிய போட்டியில் வென்றாக வேண்டிய கட்டாயத்திற்கு இங்கிலாந்து தள்ளப்பட்டுள்ளது. இருப்பினும் தரமான வீரர்களைக் கொண்டுள்ள தங்களது அணி அடுத்து வரும் போட்டிகளில் வென்று நிச்சயம் செமி ஃபைனலுக்கு தகுதி பெறும் என்று முன்னாள் இங்கிலாந்து கேப்டன் மைக்கேல் வாகன் உறுதியாக ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

Sehwag Tweet 2

அதை பார்த்த வீரேந்தர் சேவாக் “1996, 1999, 2003, 2007, 2011, 2015 மற்றும் 2023 ஆகிய உலகக் கோப்பைகளில் இல்லை. 8இல் ஒன்றில் மட்டுமே வந்துள்ளீர்கள்” என்று இங்கிலாந்தின் மோசமான வரலாற்றை புள்ளிவிவரத்துடன் சுட்டிக்காட்டியுள்ளார். அதாவது 2023 உட்பட கடைசி 8 உலகக்கோப்பைகளில் 2019இல் மட்டுமே இங்கிலாந்து அரையிறுதிக்கு தகுதி பெற்று கோப்பையும் வென்றது. அந்த வகையில் இம்முறையும் இங்கிலாந்து செமி ஃபைனலுக்கு வராது என்று வெளிப்படையாகவே தெரிவித்துள்ள சேவாக் ஆஸ்திரேலியாவும் வருவது கடினம் என்று கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement