
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் வீரேந்திர சேவாக் அதிரடி பேட்ஸ்மேன்களில் ஒருவராக அறியப்படுகிறார். 1999 – 2013 வரையிலான காலகட்டங்களில் இந்தியாவுக்காக 3 விதமான கிரிக்கெட்டிலும் விளையாடிய அவர் ஓப்பனிங் பேட்ஸ்மேனாக அதிரடியான துவக்கத்தைக் கொடுத்து பல வெற்றிகளில் பங்காற்றினார். எதிர்கொள்ளும் முதல் பந்திலேயே பவுண்டரி பறக்க விடுவதில் அவர் வல்லவராக அறியப்பட்டார்.
அந்த காலங்களிலேயே மெதுவாக விளையாட வேண்டிய டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய சேவாக் பல சாதனைகள் படைத்து இந்தியாவின் வெற்றிகளில் பங்காற்றினர். மேலும் தம்முடைய அதிரடியான ஆட்டத்தால் அவர் அழுப்புத்தட்டி போன டெஸ்ட் கிரிக்கெட்டை பார்க்க பல ரசிகர்களை மைதானத்திற்கு வர வைத்தார் என்றே சொல்லலாம். அதற்கு சான்றாக டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக சிக்ஸர்கள் அடித்த இந்திய வீரராக அவர் இப்போதும் சாதனை படைத்துள்ளார்.
அத்துடன் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிகபட்ச ஸ்கோர் அடித்து 2 முச்சதங்கள் அடித்த ஒரே இந்திய வீரராகவும் சேவாக் சாதனை படைத்துள்ளார். பெரும்பாலான பேட்ஸ்மேன்கள் 90, 190 ரன்களில் இருக்கும் போது சிங்கிள், டபுள் எடுத்து தங்களுடைய சதத்தை நெருங்குவார்கள். ஆனால் பெரும்பாலான சமயங்களில் சேவாக் தன்னுடைய சொந்த சாதனையைப் பற்றி கவலைப்படாமல் சிக்சர் அல்லது பௌண்டரியுடன் சதத்தை தொடும் ஸ்டைலைக் கொண்டிருந்தார்.
அதனாலேயே சேவாக்கிற்கு இப்போதும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். அப்படிப்பட்ட சேவாக்கை “டெஸ்ட் கிரிக்கெட்டை காப்பாற்றியவர்” என்று வெஸ்ட் இண்டீஸ் அதிரடி ஜாம்பவான் சர் விவ் ரிச்சர்ட்ஸ் சமீபத்தில் பாராட்டியிருந்தார். இது பற்றி இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் தொடரின் போது அவர் பேசியது பின்வருமாறு. “சேவாக் பேட்டிங்கை பார்த்த போது என்னுடைய ஆட்டத்தின் பிரதிபலிப்பைப் பார்த்தேன்”
“ஆடம் கில்கிறிஸ்ட், ஷாஹித் அப்ரிடியை ஆகியோரைக் காட்டிலும் அவரை மிகவும் ஆபத்தான பேட்ஸ்மனாக நான் கண்டறிந்தேன். டெஸ்ட் கிரிக்கெட் மறைந்து கொண்டிருந்தது போது சேவாக் அந்த ஃபார்மட்டை புத்துயிர் பெறச் செய்தார். டெஸ்ட் போட்டிகளுக்கு அவர் கொண்டு வந்த உற்சாகமே இன்று பலவீனமான வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக கூட 15000 – 20000 ரசிகர்கள் மைதானத்திற்கு வருவதற்கான காரணமாகும். அதுவே சேவாக்கின் மரபு” என்று கூறியிருந்தார்.
இதையும் படிங்க: குஜராத் டைட்டன்ஸ் வேணாம்.. சி.எஸ்.கே வுக்கு வாங்க.. சாய் சுதர்சனுக்கு ரசிகர்கள் வேண்டுகோள் – விவரம் இதோ
இந்நிலையில் தமக்கு இப்படிப்பட்ட மிகப்பெரிய பாராட்டை வழங்கிய ரிச்சர்ட்ஸ்க்கு ட்விட்டரில் சேவாக் கொடுத்துள்ள பதில் பின்வருமாறு. “தாழ்மையான (நன்றிகள்) ரிச்சர்ட்ஸ் சார். நீங்கள் பவுலர்கள் பேட்ஸ்மேன்களை பார்த்து பயப்பட வைத்தவர். நான் அடுத்த தலைமுறைக்கு பாரம்பரியத்தை உயர்பித்தேன். டெஸ்ட் கிரிக்கெட்டை அட்டாக் செய்து மகிழ்ச்சியாக விளையாடும் வரை அது அழியாது” என்று கூறினார்.