ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடர் கடந்த மார்ச் 22ஆம் கொல்கத்தாவில் கோலாகலமாக துவங்கியது. அந்தத் தொடரில் கோப்பையை வெல்வதற்காக 10 அணிகள் விளையாடி வருகின்றன. அதில் இதுவரை மொத்தம் 12 போட்டிகள் நிறைவு பெற்றுள்ளன. அந்த 12 போட்டிகளில் முடிவில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 2 போட்டிகளில் 2 வெற்றிகளை பெற்று புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் ஜொலிக்கிறது.
குறிப்பாக முதல் போட்டியிலேயே கொல்கத்தாவை அதனுடைய சொந்த மண்ணில் பெங்களூரு தோற்கடித்து அசத்தியது. அதே வேகத்தில் சென்னையை அதன் கோட்டையாகக் கருதப்படும் சேப்பாக்கத்தில் 17 வருடங்கள் கழித்து பெங்களூரு தோற்கடித்தது. அத்துடன் 5 ரன்கள் வித்தியாசத்தில் பெரிய வெற்றியைப் பெற்றதால் மற்ற அணிகளைக் காட்டிலும் பெங்களூரு கூடுதல் ரன்ரேட் பெற்று புள்ளிப்பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளது.
கொண்டாடட்டும் விடுங்க:
அதனால் ஐபிஎல் 2025 புள்ளிப்பட்டியலை ஸ்க்ரீன் ஷாட் எடுத்து ஆர்சிபி ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பரவ விட்டு கொண்டாட்டத்தினால் உள்ளனர். ஏனெனில் வரலாற்றில் ஒரு ஐபிஎல் கோப்பையை கூட வெல்லாத பெங்களூரு அணி பெரும்பாலான வருடங்களில் பிளே ஆஃப் சுற்றுக்கு செல்வதற்கே போராடுவது வாடிக்கையாகும். அதனால் கடைசி கட்டப் போட்டிகளில் ஆர்சிபி ரசிகர்கள் கையில் கால்குலேட்டருடன் அலைவது வழக்கமாகும்.
அப்படிப்பட்ட பெங்களூரு அணி இப்போது முதலிடத்தில் இருப்பது கனவு நிஜமான தருணத்தைப் போல இருப்பதால் ஆர்சிபி ரசிகர்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர். இந்நிலையில் லீக் சுற்று முடியும் போது புள்ளிப்பட்டியலில் மாற்றம் ஏற்படக்கூடும் என்று வீரேந்திர சேவாக் தெரிவித்துள்ளார். எனவே அதற்கு முன் ஆர்சிபி ரசிகர்கள் இப்படி போட்டோ எடுத்துக் கொண்டாடட்டும் என்று சேவாக் கலாய்த்துள்ளார்.
கலாய்த்த சேவாக்:
2025 ஐபிஎல் தொடரில் முதல் வாரத்தின் முடிவில் புள்ளிப்பட்டியலில் நிலமைப் பற்றி க்ரிக்பஸ் இணையத்தில் அவர் ஜாலியாக பேசியது பின்வருமாறு. “ஐபிஎல் புள்ளிப்பட்டியலில் ஏழையையும் கொஞ்சம் மேலே இருக்க விடுங்கள். அவர்களையும் போட்டோ எடுத்துக் கொள்ள விடுங்கள். எவ்வளவு நாட்கள் அவர்கள் மேலே இருப்பார்கள் என்பது யாருக்குத் தெரியும்”
இதையும் படிங்க: விட்டா 11இல் டெயில் எண்டராகிடுவாரு போல.. தோனி இதை செய்யாம என்ன நினைச்சுட்டு இருக்காரு.. உத்தப்பா ஏமாற்றம்
“நான் இங்கே பணத்தைப் பற்றி பேசுகிறேனா இல்லை. பொருளாதார அடிப்படையில் பெங்களூரு அணி பணத்தில் புரள்பவர்கள். சொல்லப்போனால் ஒவ்வொரு ஐபிஎல் அணியும் ஒவ்வொரு வருடமும் 400 – 500 கோடிகளை சம்பாதிக்கிறார்கள். அதனால் நான் அதைப் பற்றி பேசவில்லை. நான் இத்தனை வருடங்களாக ஒரு கோப்பையைஜ் கூட வெல்லாதவர்களைப் பற்றி பேசுகிறேன். அதைத்தான் ஏழை என்று இங்கு குறிப்பிடுகிறேன்” எனக் கூறினார்.



