IPL 2023 : உங்களுக்கு அக்கறைன்னா நீங்க தான் அட்வைஸ் கேட்கணும், கவாஸ்கர் சொல்ல மாட்டாரு – இளம் இந்திய வீரரை விளாசிய சேவாக்

Sehwag
- Advertisement -

ஐபிஎல் 2023 டி20 தொடர் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில் முதல் கோப்பையை வெல்லும் முனைப்புடன் களமிறங்கிய டெல்லி கேப்பிடல்ஸ் 2013க்குப்பின் முதல் 5 போட்டிகளில் தொடர் தோல்விகளை சந்தித்து பிளே ஆப் சுற்று வாய்ப்பை இழந்து முதல் அணியாக வெளியேறியது. ரிஷப் பண்ட் காயத்தால் வெளியேறிய போதிலும் 2016 கோப்பை வென்ற அனுபவமிக்க டேவிட் வார்னர் தலைமையில் களமிறங்கிய அந்த அணி பந்து வீச்சு துறையில் ஓரளவு அசத்தலாக செயல்பட்டும் பேட்டிங் துறையில் சொதப்பியதே இந்த தோல்விகளுக்கு முக்கிய காரணமானது.

- Advertisement -

அதிலும் குறிப்பாக குட்டி சேவாக் என்று ரசிகர்கள் அழைக்கும் இளம் தொடக்க வீரர் பிரிதிவி ஷா அதிரடியாக செயல்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அப்படியே நேர்மாறாக சொதப்பலாக செயல்பட்டது டெல்லியின் இந்த தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது. 2018 ஐசிசி அண்டர்-19 உலக கோப்பையை இந்தியாவுக்கு கேப்டனாக வென்று கொடுத்து சீனியர் கிரிக்கெட்டில் அறிமுகமாகி சச்சின், லாரா, சேவாக் ஆகியோர் கலந்த கலவை என்று அப்போதைய பயிற்சியாளர் ரவி சாஸ்திரி பாராட்டும் அளவுக்கு அசத்திய அவர் நாளடைவில் சுமாராக செயல்பட்டதால் கழற்றி விடப்பட்டார்.

நீங்க தான் கேட்கணும்:
இருப்பினும் உள்ளூர் கிரிக்கெட்டில் கடுமையாக போராடிய அவர் கடந்த பிப்ரவரியில் நடந்த நியூசிலாந்து டி20 தொடரில் தேர்வாகியும் விளையாடும் 11 பேர் அணியில் வாய்ப்பு பெறவில்லை. அதனால் இந்திய அணியில் நிலையான வாய்ப்பை பெறுவதற்கு இத்தொடரில் அதிரடியாக செயல்பட வேண்டிய கட்டாயத்தில் களமிறங்கிய அவர் முதல் 6 இன்னிங்ஸில் வெறும் 47 ரன்களை எடுத்து டேவிட் வார்னர் உள்ளிட்ட இதர வீரர்களுக்கு பின்னடைவை கொடுத்தார். ஆனால் காலம் கடந்த பின் பஞ்சாப்புக்கு எதிரான கடந்த போட்டியில் 54 (38) ரன்கள் எடுத்த அவர் இனியாவது சிறப்பாக செயல்படுவாரா என்ற எதிர்பார்ப்பு காணப்படுகிறது.

இந்நிலையில் தடுமாறும் பிரிதிவி ஷா போன்ற ஜூனியர்கள் ஏதாவது ஜாம்பவான் வீரர்களிடம் ஆலோசனை கேட்க வேண்டும் என்று தெரிவிக்கும் சேவாக் ஒருமுறை விளம்பர படப்பிடிப்பின் போது தம்முடன் 6 மணி நேரம் இருந்தும் கிரிக்கெட்டைப் பற்றி அவர் எந்த சந்தேகமும் கேட்கவில்லை என்று அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். மேலும் இதே போன்ற சூழ்நிலையில் தாம் முன்னேறுவதற்காக 2003இல் ஜாம்பவான் கவாஸ்கரிடம் சென்று ஆலோசனை கேட்டதாகவும் சேவாக் கூறியுள்ளார். அந்த வகையில் எப்போதுமே சேவாக் தான் கவாஸ்கரிடம் சென்று ஆலோசனை கேட்க வேண்டுமே தவிர கவாஸ்கர் சேவாக்கிற்கு தாமாக வந்து ஆலோசனை கொடுக்க மாட்டார் என்று கூறும் அவர் இது பற்றி கிரிக்பஸ் இணையத்தில் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“பிரிதிவி ஒரு முறை விளம்பர படப்பிடிப்பில் என்னுடன் இருந்தார். அந்த சமயத்தில் நாங்கள் 6 மணி நேரம் ஒன்றாக இருந்தோம். சுப்மன் கில்லும் அந்த தருணத்தில் இருந்தார். ஆனால் யாருமே கிரிக்கெட் பற்றி ஒரு வார்த்தை கூட ஆலோசனை கேட்கவில்லை. ஒருவேளை உங்களுக்கு தேவைப்பட்டால் நீங்கள் தான் அக்கறையுடன் பேச வேண்டும். குறிப்பாக இந்திய அணியில் நான் புதியவராக இருந்த போது கவாஸ்கர் அவர்களிடம் ஆலோசனை கேட்க விரும்பினேன். அப்போது பயிற்சியாளர் ஜான் ரைட்டிடம் “நான் புதியவராக இருப்பதால் கவாஸ்கர் என்னிடம் பேசுவாரா என்பது தெரியாது. அதனால் நீங்கள் தான் அதற்கு வழி செய்ய வேண்டும்” என்று கேட்டுக் கொண்டேன்”

Sehwag

“அதனால் 2003ஆம் ஆண்டு ஒரு சமயத்தில் ஜான் ரைட் அவருடன் சந்திக்க ஏற்பாடு செய்தார். அப்போது என்னுடைய பேட்டிங் பார்ட்னர் ஆகாஷ் சோப்ராவும் உடன் வருவார் அப்போது தான் நாங்கள் பேட்டிங்கை பற்றி சந்தேகங்களை கேட்க முடியும் என்று நான் கூறினேன். அதைத்தொடர்ந்து வந்த கவாஸ்கர் எங்களுடன் சாப்பிட்டு நாங்கள் கேட்ட சந்தேகங்களை நீண்ட நேரம் பேசி தெளிவுபடுத்தினார்”

இதையும் படிங்க:நீங்கல்லாம் சும்மா, அவர் தான் கிரிக்கெட்டின் உண்மையான கிங் – சமயம் பாத்து பாபர் அசாமை தாக்கிய முகமது அமீர்

“அதன் பலனையும் அடுத்த சில போட்டிகளில் நாங்கள் பெற்றோம். எனவே நீங்கள் தான் அக்கறையுடன் ஆலோசனைகளை கேட்க வேண்டும். குறிப்பாக சேவாக் மற்றும் ஆகாஷ் சோப்ராவிடம் பேச கவாஸ்கர் நினைக்க மாட்டார். நீங்கள் தான் அவரிடம் வேண்டுகோள் விடுக்க வேண்டும்” என்று கூறினார்.

Advertisement