இதென்ன புதுசா? பாகிஸ்தான் தங்களை தாங்களே அவுட் ஆக்கிகுவாங்க.. இந்தியா தேவையில்ல.. சேவாக் பேட்டி

Virender Sehwag
- Advertisement -

ஆசியக் கோப்பை 2025 கிரிக்கெட் தொடரின் மாபெரும் இறுதிப்போட்டி செப்டம்பர் 28ஆம் தேதி துபாயில் நடைபெற்றது. அந்தப் போட்டியில் பாகிஸ்தானை 5 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்த இந்தியா 9வது முறையாக கோப்பையை வென்றது. அப்போட்டியில் முதலில் விளையாடிய பாகிஸ்தான் தடுமாற்றமாக பேட்டிங் செய்து 146 ரன்கள் மட்டுமே எடுத்தது.

அதிகபட்சமாக ஃபர்கான் 57, ஃபக்கார் ஜமான் 46 ரன்கள் எடுத்த நிலையில் இந்தியாவுக்கு அதிகபட்சமாக குல்தீப் யாதவ் 4 விக்கெட்டுகள் எடுத்து அசத்தினார். அடுத்து விளையாடிய இந்திய அணி 19.4 ஓவரில் 150/5 ரன்கள் எடுத்து பாகிஸ்தானை ஹாட்ரிக் முறையாக தோற்கடித்தது. அதிகபட்சமாக திலக் வர்மா 69*, சஞ்சு சாம்சன் 24, சிவம் துபே 33 ரன்கள் அடித்து வெற்றி பெற வைத்தனர்.

- Advertisement -

புகழ்பெற்ற பாகிஸ்தான்:

முன்னதாக அப்போட்டியில் இந்தியாவுக்கு எதிராக நன்றாக துவங்கிய பாகிஸ்தான் அணி மோசமாக ஃபினிஷிங் செய்தது தோல்விக்கு காரணமானது. குறிப்பாக பேட்டிங்கில் 113/1 என்ற வலுவான நிலையில் இருந்த பாகிஸ்தான் பின்னர் சீட்டுக்கட்டு போல சரிந்து 146க்கு சுருண்டது. அதே போல பந்து வீச்சில் அபிஷேக், கில், கேப்டன் சூரியகுமார் ஆகியோரை ஆரம்பத்திலேயே பாகிஸ்தான் அவுட்டாக்கியது.

அதனால் 20/3 என சரிந்த இந்தியா பின்னர் பாகிஸ்தானை பந்தாடி வெற்றி பெற்றது. இந்நிலையில் பாகிஸ்தான் தங்களைத் தாங்களே அழித்துக்கொள்வது புதிதல்ல என்று வீரேந்திர சேவாக் தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “பாகிஸ்தான் தங்களை தாங்களே அழித்துக் கொள்வதில் புகழ்பெற்றவர்கள். நீங்கள் நன்றாக பேட்டிங் செய்து கொண்டிருக்கும் போது அவுட்டானால் அடுத்த பேட்ஸ்மேன் மீது அழுத்தத்தை போடுவீர்கள்”

- Advertisement -

சேவாக் கருத்து:

“எனவே உங்களுக்கு நல்ல ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் கிடைத்தால் அதைப் பயன்படுத்த ஒரு பேட்ஸ்மேன் நங்கூரமாக விளையாடுவது அவசியம். ஆனால் பாகிஸ்தானை அவுட்டாக்க எதிரணி பவுலர்கள் தேவையில்லை என்று நான் கருதுகிறேன். ஏனெனில் அவர்களுடைய பேட்ஸ்மேன்கள் தங்களைத் தாங்களே அவுட்டாக்கி கொள்வார்கள். பாகிஸ்தானின் தோல்விக்கு ஷாட் செலக்சன் சரியில்லை என்று நான் சொல்வேன்”

இதையும் படிங்க: பாகிஸ்தான் கைகளால் அங்க அவமான அடி இந்தியா பேசலாமா? மோடிக்கு பாக் தலைவர் பதிலடி.. ரசிகர்கள் விளாசல்

“இந்திய பவுலர்கள் நன்றாக பந்து வீசினார்கள் என்று நாம் சொல்வோம். உண்மையில் பாகிஸ்தானின் ஷாட் செலக்சன் மோசமாக இருந்தது. பகார் ஜமான் ஒய்ட் பந்தில் அவுட்டானார். பவர் பிளேவில் சிறப்பாக 45 – 46 ரன்கள் அடித்த நீங்கள் பின்னர் மோசமான ஷாட்டால் அவுட்டானீர்கள். எனவே அவர் பெரிய ஏமாற்றத்தைச் சந்தித்திருப்பார் என்று நினைக்கிறேன். அவர்களுடைய ஒரு பேட்ஸ்மேன் நிலைத்து விளையாடிருந்தால் பாகிஸ்தான் 180 – 190 ரன்கள் அடித்திருக்கும்” என்று கூறினார்.

Advertisement