ஆசியக் கோப்பை 2025 கிரிக்கெட் தொடரில் இறுதிப்போட்டியில் பாகிஸ்தானை 5 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா தோற்கடித்தது. செப்டம்பர் 28ஆம் தேதி துபாயில் நடைபெற்ற அந்தப் போட்டியில் முதலில் விளையாடிய பாகிஸ்தான் 146 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக ஃபர்கான் 57, ஃபக்கார் ஜமான் 46 ரன்கள் எடுத்த நிலையில் இந்தியாவுக்கு அதிகபட்சமாக குல்தீப் யாதவ் 4 விக்கெட்டுகள் எடுத்து அசத்தினார்.
அடுத்து விளையாடிய இந்தியா 19.4 ஓவரில் 150/5 ரன்கள் குவித்து 3வது முறையாக இத்தொடரில் பாகிஸ்தானை தோற்கடித்தது. அதிகபட்சமாக திலக் வர்மா 69*, சஞ்சு சாம்சன் 24, சிவம் துபே 33 ரன்கள் அடித்து வெற்றி பெற வைத்தனர். அதனால் 9வது முறையாக ஆசியக் கோப்பையை வென்ற இந்தியா நாங்கள் தங்களை நம்பர் ஒன் என்பதை நிரூபித்தது.
அவமானப்பட்ட நக்வி:
அப்போட்டியின் முடிவில் ஆசிய கவுன்சில் தலைவர், பாகிஸ்தான் வாரிய தலைவர், பாகிஸ்தானின் உள்துறை அமைச்சர் ஆகிய பதவிகளில் உள்ள மோசின் நக்வி தலைமையில் பரிசளிப்பு விழா நடைபெற்றது. ஆனால் பாகிஸ்தானை சேர்ந்த அவரது கையில் இந்திய அணி கோப்பையை மறுத்து விட்டது. அதனால் அவமானப்பட்ட நக்வி அங்கிருந்து ஆசியக் கோப்பையை கையோடு எடுத்துச் சென்று விட்டார்.
மறுபுறம் வேறு யாருடைய கையிலாவது ஆசியக் கோப்பை பரிசளிக்கப்படும் என்று இந்திய அணியினர் 45 நிமிடங்கள் காத்திருந்தனர். அப்போது இந்தியா வாங்க மறுத்து மறுத்து விட்டதால் கோப்பை வழங்கப்படவில்லை என்று ஆசிய கவுன்சில் சார்பில் அறிவிக்கப்பட்டது. அதற்காக அசராத இந்திய அணி கோப்பை இருப்பது போல் கொண்டாடி நக்வி’க்கு பதிலடி கொடுத்தனர்.
ரசிகர்கள் விளாசல்:
இதற்கிடையே ஆசியக் கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிரான வெற்றி பற்றி இந்திய பிரதமர் நரேந்திர மோடி ட்விட்டரில் பதிவிட்டது பின்வருமாறு. “களத்தில் ஆபரேஷன் சிந்தூர் நடந்துள்ளது. அங்கேயும் இந்தியா வெற்றி என்ற அதே விளைவு வந்துள்ளது. நம்முடைய கிரிகெட்டர்களுக்கு வாழ்த்துக்கள்” என்று பதிவிட்டுள்ளார். அதற்கு போரில் பாகிஸ்தான் கைகளால் இந்தியா அவமான அடிகளை வாங்கியதை மறக்காதீர்கள் என்று மோடி அவர்களுக்கு மோசின் நக்வி பதிலடி கொடுத்துள்ளார்.
இதையும் படிங்க: இந்த ஆசிய கோப்பை தொடருக்கான என்னுடைய முழு சம்பளத்தையும் நான் அவங்களுக்கு தரேன் – கேப்டன் அறிவிப்பு
இது பற்றி அவர் “ஒருவேளை உங்களுடைய பெருமையின் அளவுகோலாக போர் இருக்கும் பட்சத்தில், பாகிஸ்தான் கைகளில் அவமானத் தோல்விகளை சந்தித்த வரலாறு ஏற்கனவே பதிவாகியுள்ளது. அந்த உண்மையை எந்த கிரிக்கெட் போட்டியும் மாற்றி எழுத முடியாது. போரை விளையாட்டுக்குள் இழுப்பது விளையாட்டுத் தன்மைக்கு எதிரான உங்களுடைய கலங்கம் மற்றும் விரக்தியை மட்டுமே அம்பலப்படுத்துகிறது” என்று பதிவிட்டுள்ளார். அதைப் பார்க்கும் இந்திய ரசிகர்கள் கார்கில் போர் முதல் ஆப்ரேஷன் சிந்தூர் வரை இந்தியாவிடம் தோற்ற உங்களால் எப்படி இவ்வளவு பொய் பேச முடிகிறது? என்று பதிலடி கொடுக்கின்றனர்.



