IPL 2023 : பாண்டேவை அவர் அவுட்டாக்கிய பந்து வார்னேவின் பால் ஆஃப் தி செஞ்சூரி மாதிரி இருந்துச்சு – இந்திய வீரரை பாராட்டிய சேவாக்

sehwag
- Advertisement -

பரபரப்பான திருப்பங்களுடன் நடைபெற்று வரும் ஐபிஎல் 2023 டி20 கிரிக்கெட் தொடரில் ஷிகர் தவான் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் 12 போட்டிகளில் 6 வெற்றிகளையும் 6 தோல்விகளையும் பதிவு செய்து பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற போராடி வருகிறது. அந்த வரிசையில் டெல்லிக்கு எதிராக நிச்சயம் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் களமிறங்கிய கடந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் 168 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. அதிகபட்சமாக இதர வீரர்கள் அனைவரும் சொதப்பிய நிலையில் தனி ஒருவனாக தூக்கி நிறுத்திய பிரப்சிம்ரன் சிங் சதமடித்து 103 (65) ரன்கள் குவித்து அனைவரது பாராட்டுகளை அள்ளினார்.

அதை துரத்திய டெல்லிக்கு பில் சால்ட் 21 (17) ரிலீ ரோசவ் 5 (5) என அதிரடி பேட்ஸ்மேன்களை சொற்ப ரன்களில் காலி செய்த இளம் பஞ்சாப் சுழல் பந்து வீச்சாளர் ஹர்ப்ரீத் ப்ரார் மறுபுறம் 10 பவுண்டரி 1 சிக்சருடன் நிச்சயம் வென்றாக வேண்டிய போட்டியில் அதிரடியாக செயல்பட்ட கேப்டன் டேவிட் வார்னரையும் 54 (27) ரன்களில் அவுட்டாக்கி ஆரம்பத்திலேயே மிகப்பெரிய அழுத்தத்தை உண்டாக்கினார். அதோடு நிற்காத அவர் அடுத்ததாக இம்பேக்ட் வீரராக களமிறங்கிய மற்றொரு அனுபவ இந்திய வீரர் மணிஷ் பாண்டேவையும் சுழலில் மாயாஜாலம் நிகழ்த்தி க்ளீன் போல்ட்டாக்கி டக் அவுட்டாக்கி மிரட்டலாக செயல்பட்டார்.

- Advertisement -

பால் ஆஃப் தி செஞ்சூரி:
அவருடன் ராகுல் சஹர் தனது திறமையை வெளிப்படுத்தி மிட்சேல் மார்ஷ் 3 (4) அக்சர் படேல் 1 (2) என இதர முக்கிய வீரர்களையும் ஒற்றை இலக்க ரன்களில் காலி செய்ததால் 20 ஓவர்களில் 136/8 ரன்கள் மட்டுமே எடுத்த டெல்லி பரிதாபமாக தோற்று இத்தொடரிலிருந்து முதல் அணியாக வெளியேறியது. அந்த வெற்றிக்கு சதமடித்த பிரப்சிம்ரன் சிங் ஆட்டநாயகன் விருது வென்றாலும் சுழலில் மாயாஜாலம் நிகழ்த்தி 4 ஓவரில் 4 முக்கிய விக்கெட்டுகளை சாய்த்த ஹர்ப்ரீத் ப்ரார் அறிவிக்கப்படாத ஆட்டநாயகனாக அசத்தினார் என்றே சொல்லலாம்.

இந்நிலையில் அந்தப் போட்டியில் மனிஷ் பாண்டே அவர் அவுட்டாக்கிய பந்து கிட்டத்தட்ட ஜாம்பவான் ஷேன் வார்னே வீசிய நூற்றாண்டின் சிறந்த பந்தை போல் இருந்ததாக முன்னாள் இந்திய வீரர் வீரேந்தர் சேவாக் பாராட்டியுள்ளார். இது பற்றி கிரிக்பஸ் இணையத்தில் அவர் பேசியது பின்வருமாறு. “அப்போட்டியில் ப்ரார் அபாரமாக செயல்பட்டார். குறிப்பாக பவர் பிளே ஓவர்களில் பந்து வீசி ஆரம்பத்திலேயே அடி வாங்கிய அவர் அதற்காக துவளாமல் மீண்டும் அபாரமாக பந்து வீசி ஸ்டைலாக கம்பேக் கொடுத்தார்”

- Advertisement -

“அதிலும் குறிப்பாக மணிஷ் பாண்டேவை அவர் அவுட்டாக்கிய பந்து ஷேன் வார்னே வீசிய நூற்றாண்டின் சிறந்த பந்தை போல் இருந்தது. அதே போல் வார்னரை அவுட்டாக்கிய பந்தும் மிகச் சிறப்பாக இருந்தது. ஆனால் ரிலீ ரோசவ் மோசமான ஷாட் அடித்து அவுட்டானார். மொத்தத்தில் அந்தப் போட்டியில் பிரார் மிகவும் சாதுரியமாக பந்து வீசினார். என்னைப் பொறுத்த வரை வரலாற்றில் பஞ்சாப் அணியை அந்த மாநிலத்தைச் சேர்ந்த 2 வீரர்கள் வெற்றி பெற வைப்பது இதுவே முதல் முறை என்று நினைக்கிறேன்”

“பிரப்சிம்ரன் அல்லது ப்ரார் ஆகிய இருவருமே உள்ளூரில் பஞ்சாப் அணிக்காகவும் ஐபிஎல் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்காகவும் விளையாடி இந்த போட்டியில் மிகச் சிறப்பான வெற்றியை பெற்றுக் கொடுத்துள்ளனர்” என்று கூறினார். அவர் கூறுவது போல இந்த போட்டியில் லியம் லிவிங்ஸ்டன் முதல் ஷிகர் தவான் வரை பெரும்பாலான நட்சத்திர இந்திய மற்றும் வெளிநாட்டு வீரர்கள் சுமாராக செயல்பட்ட நிலையில் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த 2 இளம் வீரர்கள் அசத்தலாக செயல்பட்டு அந்த அணிக்கு வெற்றியை பெற்றுக் கொடுத்தனர்.

இதையும் படிங்க:வீடியோ : டீம ஒழுங்கா செலக்ட் பண்ணல நீங்க எப்டி ஜெயிக்க முடியும்? ஹைதராபாத் தவறை அம்பலமாக்கிய ஸ்டைரிஸ்

அதிலும் சேவாக் பாராட்டுகளைப் பெற்ற ப்ரார் 2019 முதல் பஞ்சாப் அணிக்காக விளையாடிய போதிலும் இந்த சீசனில் தான் முதல் முறையாக 11 போட்டிகளில் பெரிய வாய்ப்புகளைப் பெற்று 9 விக்கெட்டுகளை 7.41 என்ற எக்கனாமியில் எடுத்து அசத்தி வருகிறார்.

Advertisement