டீம ஒழுங்கா செலக்ட் பண்ணல நீங்க எப்டி ஜெயிக்க முடியும்? ஹைதராபாத் தவறை அம்பலமாக்கிய ஸ்டைரிஸ்

- Advertisement -

ஐபிஎல் 2023 டி20 கிரிக்கெட் தொடரில் 2016க்குப்பின் 2வது கோப்பையை வெல்லும் லட்சியத்துடன் களமிறங்கிய சன் ரைசர்ஸ் ஹைதராபாத் இதுவரை விளையாடிய 11 போட்டிகளில் 4 வெற்றிகளையும் 7 தோல்விகளையும் பதிவு செய்து புள்ளி பட்டியலில் 9வது இடத்தில் திணறுகிறது. அதனால் எஞ்சிய 3 போட்டிகளில் வென்றாலும் அந்த அணி பிளே ஆப் சுற்றுக்கு செல்வதற்கான வாய்ப்பு 90% இல்லை என்பது ஹைதராபாத் ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்துள்ளது. இத்தனைக்கும் பிரைன் லாரா, முத்தையா முரளிதரன், டேல் ஸ்டைன் என 3 வகையான பிரிவுக்கும் 3 ஜாம்பவான்களை பயிற்சியாக கொண்டிருந்தும் அந்த அணியால் எதுவும் சாதிக்க முடியவில்லை.

மேலும் டேவிட் வார்னர், கேன் வில்லியம்சன் ஆகிய கேப்டன்களை கழற்றி விட்டு 2023 தென் ஆப்பிரிக்கா டி20 தொடரில் கோப்பையை வென்ற ஐடன் மார்க்கரம் தலைமையில் இந்த சீசனில் களமிறங்கிய அந்த அணிக்கு பேட்டிங் துறையில் மயங் அகர்வால், 13 கோடிக்கு வாங்கப்பட்ட ஹரி ப்ரூக், ராகுல் திரிபாதி ஆகியோர் சொதப்பலாக செயல்பட்டு பின்னடைவை கொடுத்தனர். அதே போல பந்து வீச்சு துறையில் உம்ரான் மாலிக்கை சரியாக பயன்படுத்தாதது ஹைதராபாத் அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்ததாக விமர்சனங்கள் காணப்படுகின்றன.

- Advertisement -

நேரலையில் குளருபடி:
அந்த நிலையில் லக்னோவுக்கு எதிரான கடந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த அந்த அணி ஹென்றிச் க்ளாஸென் 47 ரன்களும் அப்துல் சமத் 37* ரன்களும் எடுத்த உதவியுடன் 183 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. அதை துரத்திய லக்னோவுக்கு பிரேரக் மன்கட் 64*, ஸ்டோனிஸ் 40, நிக்கோலஸ் பூரான் 44* என முக்கிய பேட்ஸ்மேன்கள் அதிரடியான ரன்கள் குவித்து எளிதான வெற்றியை பெற்றுக் கொடுத்தனர்.

ஆனால் அந்த போட்டியில் சரியான அணியை தேர்வு செய்யும் அடிப்படை வேலையிலேயே ஹைதராபாத் சொதப்பியதை முன்னாள் நியூசிலாந்து வீரர் ஸ்காட் ஸ்டைரிஸ் ஜியோ சினிமா சேனலின் நேரலையில் அம்பலமாக்கினார். அதாவது இந்த ஐபிஎல் தொடரில் டாஸ் வீசிய பின் அதற்கேற்றார் போல் தங்களுடைய 11 பேர் அணியை தேர்வு செய்து கொள்ளலாம் என்ற விதிமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதன் படி போட்டி துவங்குவதற்கு முன்பாக ஒவ்வொரு கேப்டனும் டாஸ் வென்றால் இந்த அணி தோற்றால் அந்த அணி என்ற வகையில் 2 அணிகளை முன்கூட்டியே தேர்வு செய்து அந்த காகிதத்தை கையிலெடுத்துக் கொள்வார்கள்.

- Advertisement -

அதை தொடர்ந்து டாஸ் வீசியதும் அதற்கேற்றார் போல் தாங்கள் விரும்பும் ஒரு அணியை நடுவரிடம் கேப்டன் சமர்ப்பிப்பார். அந்த வகையில் அந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் முதலில் பேட்டிங் செய்வதற்கேற்றார் போல் தேர்வு செய்யப்பட்ட அணி வீரர்கள் பட்டியலை நடுவர்களிடம் சமர்ப்பித்தது. மேலும் டாஸ் வென்ற ஹைதராபாத் கேப்டன் ஐடன் மார்க்ரம் அந்த போட்டியில் இளம் ஆல் ரவுண்டர் சன்விர் சிங் அறிமுகமாக களமிறங்க உள்ளதாக அறிவித்தார். ஆனால் நடுவரிடம் ஒப்படைக்கப்பட்ட வீரர்கள் பட்டியலில் அவருடைய பெயர் அடிக்கப்பட்டு அருகில் நடராஜன் பெயர் எழுதப்பட்டிருந்தது.

அத்துடன் இம்பேக்ட் வீரர்கள் பட்டியலில் சன்விர் சிங் இடம் பிடித்திருந்தார். இங்கு விஷயம் என்னவெனில் முதலில் பந்து வீசுவதற்காக தேர்வு செய்யப்பட்ட அணி என்று நினைத்துக் கொண்டு முதலில் பேட்டிங் செய்வதற்காக தேர்வு செய்யப்பட்ட அணியில் ஹைதெராபாத் நிர்வாகம் கடைசி நேரத்தில் மாற்றம் செய்துள்ளனர். அந்த தவறால் முதலில் பேட்டிங் செய்த ஹைதராபாத் அணி ஒரு எக்ஸ்ட்ரா பேட்ஸ்மேன் (சன்விர்) விளையாடுவதற்கு பதில் எக்ஸ்ட்ரா பவுலருடன் (நடராஜன்) களமிறங்கியது.

இதையும் படிங்க:CSK vs KKR : ரிங்கு அதிரடியால் 11 வருடம் கழித்து பழி தீர்த்த கொல்கத்தா – சிஎஸ்கே தோற்றது எப்படி? பிளே ஆஃப் போக செய்ய வேண்டியது இதோ

அதன் காரணமாக சன்விர் சிங் அறிமுக போட்டியில் களமிறங்கும் வாய்ப்பு பறி போனதாக தெரிவித்த ஸ்டைரிஸ் ஏற்கனவே ஒரு பேட்ஸ்மேன் குறைவாக இருக்கும் நிலையில் அதிலிருந்து மற்றுமொரு பேட்ஸ்மனை வெளியேற்றாமல் இம்பேக்ட் வீரராக 2வது இன்னிங்ஸில் எக்ஸ்ட்ரா பவுலரை பயன்படுத்த முடியாது என்று ஹைதராபாத் அணியின் தவறை தெரிவித்தார். அந்த வகையில் அவர் சுட்டிக்காட்டிய தவறை பார்க்கும் ரசிகர்கள் இதில் கூட மிகவும் கவனமாக இல்லாமல் இருக்கும் நீங்கள் எப்படி வெற்றி காண முடியும் என்று ஹைதராபாத் அணி நிர்வாகத்தை கலாய்த்து வருகின்றனர்.

Advertisement