CSK vs KKR : ரிங்கு அதிரடியால் 11 வருடம் கழித்து பழி தீர்த்த கொல்கத்தா – சிஎஸ்கே தோற்றது எப்படி? பிளே ஆஃப் போக செய்ய வேண்டியது இதோ

Rinku Singh CSK Deepak Chahar
- Advertisement -

ஐபிஎல் 2023 டி20 டி20 கிரிக்கெட் தொடரில் மே 14ஆம் தேதி இரவு 7.30 மணிக்கு தமிழகத்தின் தலைநகர் சென்னையில் இருக்கும் சேப்பாக்கத்தில் நடைபெற்ற 61வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் மோதின. அதில் டாஸ் வென்ற சென்னை முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய அந்த அணிக்கு 2 பவுண்டரியுடன் அதிரடியாக விளையாட முயற்சித்த ருதுராஜை 17 (13) ரன்களில் அவுட்டாக்கிய வருண் சக்கரவர்த்தி அடுத்து வந்த ரகானேவையும் அடுத்த சில ஓவர்களில் 16 (11) ரன்களில் காலி செய்தார்.

அடுத்த சில ஓவர்களில் மறுபுறம் தடுமாறிய மற்றொரு தொடக்க வீரர் டேவோன் கான்வே 30 (28) ரன்களில் அவுட்டாக அடுத்து வந்த அம்பத்தி ராயுடு 4 (7) மொய்ன் அலி 1 (2) என முக்கிய வீரர்களை சுனில் நரேன் ஒற்றை இலக்க ரன்களில் அவுட்டாக்கி பெரிய அழுத்தத்தை உண்டாக்கினார். அதனால் 72/5 என சரிந்த சென்னை 130 ரன்களை தாண்டுமா அந்த அணி ரசிகர்கள் கவலையடைந்த போது 6வது விக்கெட்டுக்கு 68 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தாலும் கடைசி வரை அதிரடியாக விளையாடாமல் சொதப்பிய ரவீந்திர ஜடேஜா 20 (24) ரன்களில் கடைசி ஓவரில் ஆட்டமிழந்து மேலும் பின்னடைவை கொடுத்தார்.

- Advertisement -

பழிக்கு பழி:
இருப்பினும் அவருடன் களமிறங்கிய முதலே முக்கிய நேரத்தில் அதிரடியாக 1 பவுண்டரி 3 சிக்ஸருடன் 48* (34) ரன்களை விளாசி சிவம் துபே காப்பாற்றியதால் ஓரளவு தப்பிய சென்னை 20 ஓவர்களில் 144/6 எடுத்தது. கொல்கத்தா சார்பில் அதிகபட்சமாக வருண் சக்கரவர்த்தி மற்றும் சுனில் நரேன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை எடுத்தனர். அதைத்தொடர்ந்து 145 என்ற சுலபமான இலக்கை துரத்திய கொல்கத்தாவுக்கு முதல் ஓவரிலேயே ரஹ்மத்துல்லா குர்பாஸை 1 (4) ரன்னில் புதிய பந்தை ஸ்விங் செய்து அவுட்டாக்கிய தீபக் சஹர் தன்னுடைய அடுத்த ஓவரில் அடுத்து வந்து 2 பவுண்டரியுடன் அதிரடி காட்டிய வெங்கடேஷ் ஐயரையும் 9 (4) ரன்களில் காலி செய்தார்.

போதாகுறைக்கு ஜேசன் ராயும் 12 (13) ரன்களில் அவரிடம் அவுட்டானதால் 33/3 என ஆரம்பத்திலேயே கொல்கத்தா தடுமாறியது. அதனால் சென்னை ரசிகர்கள் ஓரளவு நம்பிக்கை பெற்றாலும் அடுத்ததாக களமிறங்கிய கேப்டன் நித்திஷ் ராணாவுடன் ஜோடி சேர்ந்த நம்பிக்கை நட்சத்திரம் ரிங்கு சிங் ஆரம்பத்தில் அழுத்தத்தை உடைக்கும் வகையில் நங்கூரமாக பேட்டிங் செய்தார்.

- Advertisement -

அதில் ஒரு புறம் நித்திஷ் ராணா நிதானமான பேட்டிங்கை வெளிப்படுத்திய நிலையில் மறுபுறம் சற்று அதிரடியாக செயல்பட்ட ரிங்கு சிங் 4வது விக்கெட்டுக்கு 99 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து வெற்றியை உறுதி செய்து 4 பவுண்டரி 3 சிக்சருடன் 54 (34) ரன்கள் எடுத்து கடைசி நேரத்தில் ரன் அவுட்டானார். மறுபுறம் அசத்திய கேப்டன் நிதிஷ் ராணா 6 பவுண்டரி 1 சிக்சருடன் 57* (44) ரன்கள் எடுத்ததால் 18.3 ஓவரிலேயே 147/4 ரன்கள் எடுத்த கொல்கத்தா 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.

இந்த போட்டியில் பந்து வீச்சுக்கு சாதகமான மைதானத்தில் முதலில் பேட்டிங் செய்த சென்னைக்கு ராயுடு, மொய்ன் அலி ஆகியோர் ஒற்றை இலக்க ரன்களில் அவுட்டாகி ஏற்படுத்திய பின்னடைவுக்கு நிகராக கடைசியில் ரவீந்திர ஜடேஜா மெதுவாக 20 (24) ரன்கள் எடுத்தது வெற்றிக்கான எக்ஸ்ட்ரா 20 – 30 ரன்களை எடுப்பதற்கு தடையாக அமைந்தது. அதே போல கொல்கத்தா ஸ்பின்னர்கள் மாயாஜாலம் நிகழ்த்திய மிடில் ஓவர்களில் சென்னை ஸ்பின்னர்கள் தாக்கத்தை ஏற்படுத்தும் அளவுக்கு நல்ல லைன், லென்த்தில் பந்து வீசவில்லை.

- Advertisement -

அதனால் தீபக் சஹர் ஆரம்பத்தில் ஏற்படுத்திய அழுத்தத்தை மிடில் ஓவர்களில் உடைத்த ரிங்கு சிங் – நிதிஷ் ராணா ஆகியோர் பிளே ஆப் சுற்று வாய்ப்பு பறிபோனாலும் இந்த சீசனில் கடந்த போட்டியில் தங்களை சொந்த மண்ணில் தோற்கடித்த சென்னையை இம்முறை சேப்பாகத்தில் 11 வருடங்கள் கழித்து தோற்கத்து பழிதீர்த்து கொல்கத்தாவை வெற்றி பெற வைத்தனர்.

இதையும் படிங்க:CSK vs KKR : ரிங்கு அதிரடியால் 11 வருடம் கழித்து பழி தீர்த்த கொல்கத்தா – சிஎஸ்கே தோற்றது எப்படி? பிளே ஆஃப் போக செய்ய வேண்டியது இதோ

கடைசியாக 2012 ஐபிஎல் ஃபைனலில் சென்னையை சேப்பாக்கத்தில் கொல்கத்தா தோற்கடித்திருந்தது. மறுபுறம் 8வது தோல்வியை பதிவு செய்த சென்னை புள்ளி பட்டியலில் 2வது இடத்தில் இருந்தாலும் டெல்லிக்கு எதிரான கடைசி போட்டியில் வென்றால் மட்டுமே பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற முடியும் என்ற இக்கட்டான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.

Advertisement