தோனி, கோலிக்கு ஒரு நியாயம்.. திக்வேஷ்க்கு வேற நியாயமா? இதை செய்யாம விட்ருக்கலாம்.. பிசிசிஐயை சாடிய சேவாக்

Virender Sehwag
- Advertisement -

ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் லக்னோ அணிக்காக அறிமுகமான திக்வேஷ் ரதி சிறப்பாக பௌலிங் செய்து அசத்தினார். ஆனால் விக்கெட்டுகளை எடுத்த போதெல்லாம் அதை நோட்புக்கில் எழுதுவது போல் அவர் கொண்டாடியது சர்ச்சையை உண்டாக்கியது. முதலில் பஞ்சாப் வீரர் பிரியான்ஸ் ஆர்யா விக்கெட்டை எடுத்தபோது அவரது அருகே சென்ற திக்வேஷ் கையில் எழுதுவது போல கொண்டாடினார்.

அதனால் 25% போட்டி சம்பளத்தை அபராதமாக விதித்த பிசிசிஐ ஒரு கருப்பு புள்ளியை தண்டனையாக கொடுத்தது. அப்போதும் நிற்காத அவர் அதற்கடுத்த போட்டியில் விக்கெட்டை எடுத்த போது தம்முடைய இடத்திலிருந்து மீண்டும் கையில் எழுதிக் கொண்டாடினார். அதனால் மீண்டும் அவருக்கு 50% சம்பளத்தை அபராதமாக விதித்த பிசிசிஐ 2 கருப்பு புள்ளிகளை தண்டனையாக கொடுத்தது.

- Advertisement -

தோனி, கோலிக்கு ஒரு நியாயம்:

இருப்பினும் அதற்கடுத்த போட்டிகளில் திக்வேஷ் கொஞ்சம் அடக்கத்துடன் தொடர்ந்து அதே போல விக்கெட்டை கொண்டாடி வந்தார். அதனால் இதுதான் இவருடைய செலிப்ரேஷன் போல என்று நினைத்த பிசிசிஐ அமைதியாக விட்டது. ஆனால் ஹைதராபாத்துக்கு எதிரான போட்டியில் அபிஷேக் சர்மா விக்கெட்டை எடுத்த அவர் மீண்டும் அப்படியே கொண்டாடியதுடன் சண்டையில் ஈடுபட்டார்.

அதன் காரணமாக அவருக்கு 50% சம்பளம், 2 புள்ளிகளை பிசிசிஐ தண்டனையாக வழங்கியது. அப்படி மொத்தம் 5 கருப்பு புள்ளிகளை தண்டனையாகப் பெற்ற திக்வேஷ் தாமாகவே ஒரு போட்டியில் விளையாடத் தடை பெற்றார். இந்நிலையில் கடந்தக் காலங்களில் தோனி களத்திற்கு சென்று அம்பயர்களுடன் வாதிட்டதாக வீரேந்திர சேவாக் கூறியுள்ளார். அதே போல விராட் கோலி பலமுறை நடுவர்களிடம் ஆக்ரோசமாக பேசியுள்ளதாகவும் சேவாக் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

திக்வேஷ்க்கு வேறு நியாயமா:

அவர்களை தடை செய்யாத பிசிசிஐ இந்த வருடம் அறிமுகமான பச்சைப் பிள்ளை போன்ற திக்வேஷை கொண்டாடியதற்காக தடை செய்தது சரியல்ல என்றும் சேவாக் விமர்சித்துள்ளார். இது பற்றி கிரிக்பஸ் இணையத்தில் அவர் பேசியது பின்வருமாறு. “அந்த தடை கொஞ்சம் கடுமையானது என்று நான் நினைக்கிறேன். இந்தப் பையன் முதல் முறையாக ஐபிஎல் தொடரில் விளையாடுகிறான்”

இதையும் படிங்க: இந்த 2 மாற்றத்தை செய்ஞ்சா கப் ஆர்.சி.பி அணிக்கு தான்.. அதில் மாற்றமே இல்ல – ஹர்பஜன் சிங் கருத்து

“எம்எஸ் தோனி களத்திற்குள் சென்ற போது தடை செய்யப்படவில்லை. விராட் கோலி நடுவர்களிடம் கோபமான பாணியில் பலமுறை பேசியுள்ளார். அவரையும் தடை செய்யவில்லை. எனவே திக்வேஷை விட்டிருக்கலாம். ஏனெனில் மிகவும் இளம் வீரரான அவர் இப்போது தான் விளையாட வந்துள்ளார். இந்த வருடம் அவரை விட்டிருக்கலாம்” என்று கூறினார்.

Advertisement