இந்தியாவில் இந்த ஆண்டு நடைபெற்று வரும் நடப்பு 2025 ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் பிளே ஆப் சுற்று போட்டிகள் இன்று முதல் துவங்கி நடைபெற இருக்கின்றன. அந்த வகையில் இன்று நடைபெற இருக்கும் முதலாவது குவாலிஃபயர் ஆட்டத்தில் ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும், ஜிதேஷ் சர்மா தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோத இருக்கின்றன.
பெங்களூரு அணி இந்த மாற்றத்தை செய்தாக வேண்டும் : ஹர்பஜன் சிங்
ஏற்கனவே புள்ளி பட்டியலில் முதல் இரண்டு இடங்களை இந்த அணிகள் பிடித்துள்ளதால் இந்த போட்டியில் எந்த அணி தோல்வியை சந்தித்தாலும் மீண்டும் இறுதிப் போட்டிக்கு செல்ல ஒரு வாய்ப்பு காத்திருக்கிறது. இதன் காரணமாக இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இந்த போட்டி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் இந்த போட்டியில் வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு செல்ல போகும் அணி எது? இந்த போட்டியில் வெற்றி பெற இரண்டு அணிகளும் என்னென்ன செய்ய வேண்டும்? என்பது குறித்து பல்வேறு முன்னாள் வீரர்களும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் இந்திய அணியின் முன்னாள் வீரரான ஹர்பஜன் சிங் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான இந்த போட்டியில் பெங்களூரு அணி வெற்றி பெற வேண்டுமெனில் என்ன செய்ய வேண்டும்? என்பது குறித்த தனது கருத்தினை தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர் கூறுகையில் : தற்போது பெங்களூரு அணியிடம் பந்துவீச்சில் ஒரு சிறிய குறை உள்ளது. உங்களிடம் புவனேஸ்வர் குமார் இருந்தாலும் ஒரு முக்கிய பந்துவீச்சாளர் அடி வாங்கும் பொழுது கூடுதலாக ஒரு பந்துவீச்சாளர் இருக்க வேண்டும்.
அந்த வகையில் லிவிங்ஸ்டனை நீக்கிவிட்டு துஷாராவையும், ஹேசல்வுட்டையும் அணியில் வைத்திருக்க வேண்டும். மேலும் இரண்டு வெளிநாட்டு வீரர்களாக டிம் டேவிட் மற்றும் பிலிப் சால்ட் ஆகியோரை தேர்வு செய்ய வேண்டும் அப்படி தேர்வு செய்தால் பந்துவீச்சு யூனிட் பலமானதாக மாறும். ஏற்கனவே பெங்களூரு அணியின் பேட்டிங் ஆர்டர் பலமாக இருப்பதால் பந்துவீச்சில் சற்று பலத்தை கூட்டினால் பஞ்சாப் அணியை எளிதில் வீழ்த்த முடியும்.
இதையும் படிங்க : பிளே ஆஃப் என்றாலே திணறும் விராட் கோலி.. ஆர்சிபி ரசிகர்களை கவலையாக்கும் வரலாற்று புள்ளிவிவரம்
அப்படி வீழ்த்தும் பட்சத்தில் பெங்களூரு அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறும். அப்படி இந்த சில மாற்றங்களை பெங்களூரு அணி செய்தால் கோப்பையை கைப்பற்றவும் அதிக வாய்ப்புள்ளது என ஹர்பஜன் சிங் கூறியது குறிப்பிடத்தக்கது.



