எங்கள் காலத்தில் இப்படி நடக்கவே இல்ல, இதை கேள்வி கேட்கப்போவது யார் – சேவாக் ஆதங்கம், எதற்குனு பாருங்க

Sehwag
- Advertisement -

2022 ஆசிய கோப்பையில் ஆரம்பத்தில் கோப்பையை வெல்லக்கூடிய அணியாகக் கருதப்பட்ட நடப்பு சாம்பியன் இந்தியா பைனலுக்கு கூட தகுதி பெற முடியாமல் வெளியேறியது இந்திய ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது. இத்தனைக்கும் எதிரணிகளை காட்டிலும் உலகத்தரம் வாய்ந்த வீரர்களுடன் உலகின் நம்பர் ஒன் டி20 அணியாக களமிறங்கிய இந்தியா தேர்வு செய்த வீரர்களை சரியாக பயன்படுத்தாதது, சுமாரான கேப்டன்ஷிப் போன்ற குளறுபடியான செயல்பாடுகளால் இந்த தோல்வியை சந்திக்க நேரிட்டது.

Ravindra Jadeja

- Advertisement -

முன்னதாக இந்த தொடரில் லீக் சுற்றில் அடுத்தடுத்த வெற்றிகளை பெற்ற இந்தியா சூப்பர் 4 சுற்றில் அடுத்தடுத்த தோல்விகளை பதிவு செய்வதற்கு நம்பிக்கை நட்சத்திரம் ரவீந்திர ஜடேஜா காயத்தால் வெளியேறியது முக்கிய காரணமாக அமைந்தது. ஏனெனில் அவருக்கு பதில் தீபக் ஹூடாவை மட்டும் சேர்க்கவேண்டிய கேப்டன் ரோகித் சர்மா வெற்றி நடை போட்ட அணியை கலைக்கும் வகையில் தினேஷ் கார்த்திக்கை நம்பாமல் கழற்றி விட்டார். ஆனால் அவருக்கு பதில் தேர்வு செய்யப்பட்ட ரிஷப் பண்ட் வழக்கம்போல சுமாராக செயல்பட்டு தோல்விக்கு காரணமாக அமைந்தார்.

வேடிக்கையான காயம்:
ஆனால் அதைவிட இந்த தொடரிலிருந்து வெளியேறி அறுவை சிகிச்சை மேற்கொள்ளும் அளவுக்கு ஜடேஜா காயமடைந்த விதம் தான் ரசிகர்களை கடுப்பாக வைக்கிறது. ஏனெனில் லீக் சுற்றை முடித்தபின் வீரர்கள் புத்துணர்ச்சி பெறுவதற்காக நீச்சல் குளத்திற்கு இந்திய வீரர்களை அணி நிர்வாகம் அழைத்துச் சென்றது. அதில் அலை சறுக்கு படகில் சவாரி செய்யும் போது பேலன்ஸ் செய்ய முயற்சித்த ஜடேஜா தட்டுத்தடுமாறி காயமடைந்ததாக பின்னர் செய்திகள் வெளியாகியது ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்தது.

Ravindra-Jadeja

ஆனால் அந்த திட்டம் ஆசிய கோப்பைக்காக ஏற்கனவே வரையறுத்து கொடுத்திருந்த கால அட்டவணையில் இடம் பெறவில்லை என்பதால் ஜடேஜாவின் காயத்தை அறிந்த பிசிசிஐ அணி நிர்வாகத்தின் மீது கோபத்தை வெளிப்படுத்தியது. மொத்தத்தில் அணி நிர்வாகத்தின் அலட்சிய போக்கால் களத்தில் விளையாடாமல் காயத்தால் வெளியேறிய ஜடேஜா விரைவில் நடைபெறும் டி20 உலக கோப்பையில் விளையாடுவதும் சந்தேகமாகியுள்ளது. இந்நிலையில் களத்தில் விளையாடாமல் வலைப்பயிற்சியிலும் அல்லாமல் தேவையற்ற காரணங்களால் இப்படி முக்கிய வீரர்கள் வெளியேறுவதை யார் கண்டிப்பது என்று முன்னாள் இந்திய வீரர் வீரேந்திர சேவாக் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.

- Advertisement -

இப்போதெல்லாம் விராட் கோலி போன்ற வீரர்கள் உடற்பயிற்சி கூடத்தில் அதிகப்படியான எடைகளை தூக்குவதும் காயங்களை ஏற்படுத்த கூடியது என்று தெரிவிக்கும் அவர் தங்களுடைய காலத்தில் இதெல்லாம் இல்லை என்று கூறியுள்ளார். இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு. “இந்தியாவின் பிரச்சனைகளாக கருதப்படும் காயங்கள் களத்தில் ஏற்படுவதில்லை. இதை யாரும் கேள்வி கேட்பதுமில்லை. ஹர்திக் பாண்டியா பந்துவீசும் போது காயமடைந்தார். ஆனால் இப்போதெல்லாம் நிறைய வீரர்கள் உடற்பயிற்சி கூடம் போன்ற இடங்களில் காயமடைகிறார்கள்”

Sehwag

“ஜடேஜா களத்தில் காயமடைந்து நாம் பார்க்கவில்லை. போட்டி முடிந்த பின் காயமடைந்தார் என்ற செய்தியை தான் கேட்டோம். அப்படியானால் களத்திற்கு வெளியே அல்லது உடற்பயிற்சி கூடம் போன்ற இடங்களில் ஏற்படும் காயங்களை பற்றி யாராவது கேள்வி கேட்க வேண்டும். முதலில் கிரிக்கெட்டுக்கு நுணுக்கங்கள் தான் அவசியமாகும். ஒருமுறை இந்திய அணியில் நீங்கள் விளையாட துவங்கி விட்டால் உங்களது திறமைகளை விட உடற்பயிற்சிக்கூடம் முக்கியமானது கிடையாது. ஒருவேளை நீங்கள் 2 மாதங்கள் ஓய்வெடுத்தால் பிட்னெஸாக இருப்பது முக்கியமாகும்”

- Advertisement -

“அதையும் நான் ஒருமுறை சச்சின் டெண்டுல்கரிடம் கற்றுக்கொண்டேன். ஏனெனில் ஒவ்வொரு முறையும் அணிக்கு அவர் வரும்போது 6 – 8 கிலோவுக்கு மேல் உடற்பயிற்சி கூடத்தில் எடைகளை தூக்க மாட்டார். அதனால் ஆச்சரியமடைந்த நான் இவ்வளவு குறைவான எடையை தூக்குகிறீர்களே இதில் என்ன பயன் என்று கேட்டேன். அதற்கு இது வெறும் மெயின்டனன்ஸ் மட்டும்தான். போட்டியில் விளையாடும் எனக்கு என்னுடைய ரிதம் வர வேண்டும் என்பதற்காக மட்டுமே இதைச் செய்கிறேன். அப்போதுதான் என்னுடைய பவரை நான் இழக்காமல் இருக்க முடியும் என பதிலளித்தார்”

Kohli 1

இதையும் படிங்க: சௌரவ் கங்குலி வருகை தான் எல்லாத்துக்கும் காரணம், விராட் கோலி கேப்டன்ஷிப் சர்ச்சை பற்றி பாக் வீரர் அதிரடி கருத்து

“ஆனால் இப்போதெல்லாம் உள்ள வீரர்கள் குறிப்பாக விராட் கோலி போன்றவர்கள் ஒரு கிரிக்கெட் தொடர் நடைபெற்று கொண்டிருக்கும் போதே 50, 60, 70 கிலோ எடைகளை தூக்கி அதை வீடியோவாக எடுத்து போடுகிறார்கள். இருப்பினும் அதனால் காயம் ஏற்படுத்துவதற்கு அதிக வாய்ப்புள்ளது” என்று கூறினார்.

Advertisement