என் சப்போர்ட் ஆர்சிபி’க்கே.. ஆனா இந்தியா மாதிரி கப் ஜெய்க்க மாட்டாங்க.. ஜிங்க்ஸ் செய்த சேவாக் பேட்டி

VIrender Sehwag
- Advertisement -

ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரின் மாபெரும் இறுதிப்போட்டி ஜூன் 3ஆம் தேதி அகமதாபாத் நகரில் நடைபெறுகிறது. அந்தப் போட்டியில் லீக் மற்றும் பிளே ஆஃப் சுற்றில் வெற்றி கண்ட ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. அவ்விரு அணிகளுமே வரலாற்றில் ஒருமுறை கூட ஐபிஎல் கோப்பையை வென்றதில்லை.

எனவே இம்முறை முதல் கோப்பையை வென்று முத்தமிடப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு காணப்படுகிறது. அதில் 2008 முதல் போராடி வரும் ஆர்சிபி அணி 2009, 2011, 2016 வருடங்களில் ஃபைனல் வரை சென்றும் கோப்பையை கோட்டை விட்டது. அதனால் கடுமையான கிண்டல்கள் மற்றும் விமர்சனங்களை சந்தித்த அந்த அணி இம்முறை ரஜத் படிதார் தலைமையில் சிறப்பாக விளையாடி வருகிறது.

- Advertisement -

ஆர்சிபி’க்கு சப்போர்ட்:

குறிப்பாக வெளியூரில் விளையாடிய 7 போட்டிகளிலும் வென்ற முதல் அணியாக ஆர்சிபி வரலாறு காணாத சாதனை படைத்தது. அது போக இம்முறை அந்த அணியின் 9 வெவ்வேறு வீரர்கள் ஆட்டநாயகன் விருதை வென்றுள்ளனர். அதனால் இம்முறை ஆர்சிபி கோப்பையை வெல்லும் என்பது பலரது கணிப்பாக இருக்கிறது.

இந்நிலையில் 2025 ஐபிஎல் கோப்பையை ஆர்சிபி வேண்டும் என்று தாமும் கணிப்பதாக ஜாம்பவான் வீரர் சேவாக் தெரிவித்துள்ளார். ஆனால் 2023 உலகக் கோப்பையை இந்தியா வெல்லும் என்று தாம் கணித்தது பொய்யானதாக அவர் கூறியுள்ளார். அதே போல இம்முறையும் ஆர்சிபி அணியின் கோப்பையை வெல்லாது என்று சேவாக் ஜாலியாக தெரிவித்துள்ளார்.

- Advertisement -

ஜிங்க்ஸ் செய்யும் சேவாக்:

இது பற்றி கிரிக்பஸ் இணையத்தில் அவர் பேசியது பின்வருமாறு. “இம்முறை ஆர்சிபி வெற்றி பெறும் என்று நினைக்கிறேன். என்னுடைய பழைய ஃபார்முக்கு மீண்டும் திரும்பியுள்ளேன். ஏனெனில் மும்பைக்கு எதிராக குஜராத் அணியாக இருக்கட்டும் அல்லது குவாலிபயர் 1 போட்டியில் ஆர்சிபி அணிக்கு எதிராக பஞ்சாப் அணியாக இருக்கட்டும். இன்று குவாலிபயர் 2 போட்டியிலும் பஞ்சாப்புக்கு எதிராக மும்பை வெல்லும் என்று கணித்தேன்”

இதையும் படிங்க: ஸ்ரேயாஸ் மாஸ்.. மயங்கிய நீதா அம்பானி.. ஜெயவர்தனே டார்ச்சரை தாங்க முடியாத பும்ரா.. ரோஹித்திடம் அதிருப்தி

“அப்படி நான் ஆதரவு கொடுக்கும் அணிகள் எல்லாம் தோல்வியைச் சந்திப்பதைப் பார்த்து வருகிறேன். அந்த வகையில் இறுதிப் போட்டியில் ஆர்சிபி கோப்பையை வெல்லும் என்று ஆதரவு கொடுக்கிறேன். இந்திய அணிக்கும் இதே நிலை பொருந்தியது. இந்தியா கோப்பையை வெல்லும் என்று நான் வெளிப்படையாக ஆதரவு கொடுத்த போது நாம் தோல்வியை சந்தித்தோம்” என்று கூறினார்.

Advertisement