அக்கறையுடன் திட்டுவார், அவருக்கு பரிசு கொடுத்தேன் – மறைந்த அம்பயர் ருடியை பற்றி நெஞ்சை தொடும் பின்னணியை பகிரும் சேவாக்

Virender Sehwag Rudi Koertizen Umpire
- Advertisement -

தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த நட்சத்திரம் முன்னாள் அம்பயர் ருடி கோர்ட்சென் கார் பயணத்தின் போது ஏற்பட்ட விபத்தால் இயற்கை எய்தினார். தனது நண்பர்களுடன் கேப் டவுன் நகரில் கோல்ப் விளையாடி விட்டு வீடு திரும்பும் போது இந்த நிகழ்வு ஏற்பட்டதாக அவரது மகன் இந்த சோகமான செய்தியை அறிவித்துள்ளார். இதனால் கிரிக்கெட் வீரர்களும் ரசிகர்களும் மிகவும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஏனெனில் 90களில் மிகவும் பிரபலமான அம்பயராக செயல்பட்ட அவர் நிறைய போட்டிகளில் நேர்மையுடன் நடந்து கொண்டதால் மிகச்சிறந்த நடுவராக ரசிகர்களால் போற்றப்பட்டார்.

அதிலும் முத்தையா முரளிதரன், கிளன் மெக்ராத் உட்பட உலகின் எப்பேர்ப்பட்ட பவுலர்கள் மிரட்டும் வகையில் அவுட் கேட்டாலும் கொஞ்சமும் அசராமல் தன்னுடைய மனதிற்கு பட்டால் மட்டுமே அவர் அவுட் கொடுப்பார். குறிப்பாக எவ்வளவு பரபரப்பான போட்டியாக இருந்தாலும் பார்த்ததுமே அவுட் என கண்டுபிடித்தாலும் தனது முடிவை வழங்குவதற்கு கையை மெதுவாக உயர்த்தி அவுட் கொடுக்கும் அவரது ஸ்டைல் உலக அளவில் மிகவும் பிரபலமாகும்.

- Advertisement -

கடந்த 1992இல் தென் ஆப்பிரிக்கா மற்றும் இந்திய அணிகள் மோதிய ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் முதல் முறையாக தனது நடுவர் பயணத்தை தொடங்கிய அவர் தனது மிகச்சிறந்த செயல்பாடுகளால் சிறந்த அம்பயராக உருவெடுத்தார். அதனால் கடந்த 2002இல் சர்வதேச கிரிக்கெட் வாரியம் உருவாக்கிய எலைட் அம்பயர்கள் பேனலில் தேர்வு செய்யப்பட்ட முதல் அம்பயர்கள் குழுவில் இவரும் ஒருவராக தேர்வு செய்யப்பட்டார்.

சோகத்தில் ரசிகர்கள்:
அப்படி தனது மிகச்சிறந்த செயல்பாடுகளால் நீண்டகாலம் களத்தில் நேர்மையான தீர்ப்புகளை கொடுத்த அவர் 108 டெஸ்ட் போட்டிகளிலும், 209 ஒருநாள் போட்டிகளிலும் 14 டி20 போட்டிகளிலும் நடுவராக செயல்பட்டுள்ளார். இதன் வாயிலாக சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக போட்டிகளில் நடுவராக செயல்பட்ட 2வது அம்பயர் என்ற சாதனையையும் முதல் தென் ஆப்பிரிக்க அம்யபர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார். அந்த அளவுக்கு பிரபலமான பெருமை மிகுந்த அவர் கடந்த 2010இல் லீட்ஸ் நகரில் நடந்த டெஸ்ட் போட்டியில் விடைபெற்ற போது இரு அணிகளைச் சேர்ந்த வீரர்களும் ஒரு ஜாம்பவான் வீரருக்கு மரியாதை செலுத்துவது போல் இருபுறமும் வரிசையாக நின்று கைதட்டி அவருக்கு பிரியாவிடை கொடுத்தனர்.

- Advertisement -

மேலும் மெதுவாக கையை உயர்த்தும் அவரது ஸ்டைலை கொண்ட சிலையை அவருக்கு ஐசிசி பரிசாக அளித்தது. அத்துடன் நடுவர்களுக்கு வழங்கப்படும் வெண்கலம், வெள்ளி, தங்கம் ஆகிய ஐசிசியின் 3 பதக்கங்களையும் இவர் வென்றுள்ளார். இவ்வளவு புகழும் பெருமையும் வாய்ந்த இவர் இப்படி திடீரென்று இந்த உலகை விட்டுப் பிரிந்துள்ளதால் ரசிகர்களும் முன்னாள் வீரர்களும் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.

அக்கறையுடன் திட்டுவார்:
மேலும் அவரை பிரிந்து வாடும் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் அனைத்து ரசிகர்களும் முன்னாள் வீரர்களும் ஆறுதல் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலைமையில் பொதுவாகவே அதிரடியாக பேட்டிங் செய்ய கூடிய தன்னுடைய பேட்டிங்கை பார்த்து ரசிக்க வேண்டும் என்பதற்காக அவ்வாறு பொறுப்பின்றி பேட்டிங் செய்யாமல் பொறுமையுடன் பேட்டிங் செய்யுமாறு நிறைய போட்டிகளில் தம்மை அம்பயர் ருடி கோர்ட்சின் அக்கறையுடன் திட்டுவார் என்று முன்னாள் இந்தியா அதிரடி வீரர் வீரேந்திர சேவாக் நினைவு கூர்ந்துள்ளார்.

மேலும் அவருடைய மகனுக்கு வாங்குவதற்காக தாம் அணிந்து விளையாடிய கால் பாதுகாப்பு உபகரணத்தின் பிராண்ட் பற்றி விசாரித்ததாக கூறும் சேவாக் அவர் தன் மீது வைத்துள்ள பாசத்துக்கு அடையாளமாய் அதை தாமே பரிசளித்ததாகவும் நெஞ்சைத் தொடும் பின்னணியை குறிப்பிட்டுள்ளார். இது பற்றி தனது ட்விட்டரில் அவர் பதிவிட்டுள்ளது பின்வருமாறு.

“வாலே ருடி கோர்ட்சின் ! ஓம் சாந்தி, அவருடைய நண்பர்களுக்கும் குடும்பத்திற்கும் ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறேன். அவருடன் எப்போதும் நான் நல்ல உறவை வைத்திருந்தேன். அதிரடியாக நான் விளையாடும் போதெல்லாம் “உங்களது பேட்டிங்கை பார்க்க வேண்டும், பொறுமையுடன் நிதானமாக அழகாக பேட்டிங் செய்யுங்கள்” என்று என்னை அக்கறையுடன் திட்டுவார். ஒருமுறை நான் கால்களில் அணிந்து விளையாடிய உபகரண பிராண்டை தனது மகனுக்கு வாங்க விரும்பிய அவர் அதுபற்றி என்னிடம் விசாரித்தார். இறுதியில் நான் அதை அவருக்காக பரிசளித்ததால் அவர் மிகவும் மகிழ்ச்சியடைந்தார். ஒரு ஜென்டில்மேனான அவர் மிகச்சிறந்த மனிதர். உங்களை மிகவும் மிஸ் செய்வேன் ருடி, ஓம் சாந்தி” என்று பதிவிட்டுள்ளார். அவரின் இந்த பதிவு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Advertisement