- Advertisement -
இந்திய கிரிக்கெட்

டீ போடுற மாதிரி ஈஸியா இதை செய்யும்.. கிங் கோலி சாதனைகளை துரத்தல.. சேவாக் பாராட்டு

ராஞ்சியில் நடைபெற்ற தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியா 17 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. நவம்பர் 30ஆம் தேதியான நேற்று நடைபெற்ற அப்போட்டியில் முதலில் விளையாடிய இந்தியா 350 ரன்களை இலக்காக நிர்ணயம் செய்தது. அதிகபட்சமாக விராட் கோலி சதத்தை அடித்து 135, கேப்டன் ராகுல் 60, ரோஹித் சர்மா 57, ரவீந்திர ஜடேஜா 32 ரன்கள் அடித்தார்கள்.

அடுத்து விளையாடிய தென்னாபிரிக்க அணி இந்தியாவுக்கு பயத்தைக் காட்டும் வகையில் பேட்டிங் செய்து 332 ரன்கள் எடுத்து போராடித் தோல்வியைச் சந்தித்தது. அதிகபட்சமாக கோர்பின் போஸ்க் 67, மார்கோ யான்சென் 70, மேத்தியூ பிரட்ஸ்கே 72 ரன்கள் எடுத்தனர். இந்தியாவுக்கு அதிகபட்சமாக குல்தீப் யாதவ் 4, ஹர்ஷித் ராணா 3, அர்ஷ்தீப் சிங் 2 விக்கெட்டுகளை எடுத்து 1 – 0* (3) என்ற கணக்கில் தொடரில் முன்னிலையைப் பெற்றுக் கொடுத்தனர்.

- Advertisement -

எப்போதும் கிங் கோலி:

அந்த வெற்றிக்கு முக்கிய பங்காற்றிய விராட் கோலி ஆட்டநாயகன் விருது வென்ற நிறைய சாதனைகளையும் படைத்தார். குறிப்பாக ஒருநாள் கிரிக்கெட்டில் தெனாப்பிரிக்காவுக்கு எதிராக அதிக (6) சதங்கள் அடித்த வீரர் என்ற புதிய உலக சாதனையை விராட் கோலி படைத்தார். இதற்கு முன் சச்சின் டெண்டுல்கர், டேவிட் வார்னர் தலா 5 அடித்ததே முந்தைய சாதனை.

அத்துடன் ஒரு குறிப்பிட்ட சர்வதேச (ஒருநாள்) கிரிக்கெட்டில் அதிக சதங்கள் அடித்த வீரர் என்ற உலக சாதனையையும் விராட் கோலி படைத்துள்ளார். அந்த சாதனையை ஒருநாள் கிரிக்கெட்டில் விராட் கோலி 52 சதங்கள் அடித்து அரங்கேற்றியுள்ளார். இதற்கு முன் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் 51 சதங்கள் அடித்ததே முந்தைய சாதனை.

- Advertisement -

சேவாக் பாராட்டு:

இந்நிலையில் தினமும் வீட்டில் டீ போடுவது போல ஒருநாள் கிரிக்கெட்டில் விராட் கோலி எளிதாக ரன்கள் அடிப்பதாக ஜாம்பவான் வீரேந்திர சேவாக் பாராட்டியுள்ளார். அதனால் விராட் கோலி சாதனைகளை துரத்தவில்லை, சாதனைகள் தான் விராட் கோலியை துரத்துவதாகவும் சேவாக் தெரிவித்துள்ளார். இது பற்றி ட்விட்டர் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளது பின்வருமாறு.

இதையும் படிங்க: பாண்டிங்கின் அரிதான பாராட்டை வாங்கிய கிங் கோலி.. அதுல சச்சினை விட சிறந்த வீரர் தான்.. கவாஸ்கர்

“நாம் எளிதாக தேநீர் போடுவதைப் போல, விராட் கோலி தமக்கு ரன்கள் அடிப்பது மிகவும் எளிதானது என்பதை மீண்டும் காண்பித்துள்ளார். அவர் 52வது சதத்தை அடித்துள்ளார். விராட் கோலி சாதனைகளை துரத்தவில்லை. சாதனைகள் தான் விராட் கோலியை துரத்துகிறது. இன்றும் அவரிடம் வெற்றிக்கானப் பசியும் ஆர்வமும் இருக்கிறது. கிங் எப்போதும் கிங்காகவே இருக்கிறார்” என்று கூறியுள்ளார்

- Advertisement -