இப்படியே இன்னும் 3 – 4 மேட்ச் ஆடுனா.. 2024 டி20 உ.கோ சான்ஸ் கிடைச்சுரும்.. சிஎஸ்கே வீரருக்கு சேவாக் ஆதரவு

Virender Sehwag CSk
- Advertisement -

ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரில் கோப்பையை வெல்வதற்காக அனைத்து அணிகளும் போட்டியிட்டு வருகின்றன. இந்த தொடர் முடிந்ததுமே வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் 2024 டி20 உலகக் கோப்பை நடைபெற உள்ளது. எனவே தங்களுடைய ஐபிஎல் அணிக்கு வெற்றியை பெற்றுக் கொடுத்து இந்திய அணியிலும் இடம் பிடிப்பதற்காக நிறைய இளம் வீரர்கள் சிறப்பாக செயல்படுவதற்கு முயற்சித்து வருகின்றனர்.

அந்த வகையில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் சிவம் துபே அசத்தலாக விளையாடி வருகிறார். கடந்த 2019இல் இந்திய அணிக்காக அறிமுகமாகி சுமாராக செயல்பட்டதால் கழற்றி விடப்பட்ட அவர் பெங்களூரு போன்ற இதர ஐபிஎல் அணிகளிலும் அசத்தவில்லை. அதைத் தொடர்ந்து சென்னை அணிக்காக வாங்கப்பட்ட அவர் 2023 சீசனில் தன்னுடைய கேரியரிலேயே உச்சமாக 35 சிக்சர்களை பறக்க விட்டு 418 ரன்கள் விளாசி 5வது கோப்பையை வெல்ல முக்கிய பங்காற்றினார்.

- Advertisement -

சேவாக் ஆதரவு:
அதனால் 5 வருடங்கள் கழித்து இந்திய அணியிலும் கம்பேக் கொடுத்த அவர் கடந்த 2023 ஆசிய விளையாட்டுப் போட்டிகள், 2024 ஆப்கானிஸ்தான் தொடர்களில் சிறப்பாக விளையாடி வெற்றிகளில் பங்காற்றினார். அதே வேகத்தில் இந்த வருடமும் அசத்தும் அவர் இதுவரை நடந்த 2 போட்டிகளில் ரன்கள் எடுத்துள்ளார். குறிப்பாக குஜராத்துக்கு எதிராக நடந்த 2வது போட்டியில் 51 (23) ரன்கள் அடித்த அவர் ஆட்டநாயகன் விருதை வென்று அசத்தினார்.

இந்நிலையில் இதே போல அடுத்து வரும் போட்டிகளிலும் அசத்தும் பட்சத்தில் சிவம் துபே 2024 டி20 உலகக் கோப்பையில் இந்தியாவுக்காக தேர்வு செய்யப்படுவதற்கு அதிக வாய்ப்புள்ளதாக வீரேந்திர சேவாக் ஆதரவு தெரிவித்துள்ளார். இது பற்றி கிரிக்பஸ் இணையத்தில் அவர் பேசியது பின்வருமாறு. “துபே தயாராக வந்தார். ஷார்ட் பிட்ச் பந்துகளுக்கு எதிராக தயாராகியுள்ளோம் என்பதை அவர் அறிவார்”

- Advertisement -

“இன்று செய்ததைப் போல நாம் பந்தை தடுக்க வேண்டுமா அல்லது விட வேண்டுமா அல்லது சிக்ஸராக அடிக்க வேண்டுமா என்பதில் அவர் தெளிவாக உள்ளார். அவருடைய ஸ்ட்ரைக் ரேட் அபாரமாக உள்ளது. ஒருவேளை இன்னும் 3 – 4 போட்டிகளில் இதே போல அசத்தும் பட்சத்தில் உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் அவர் தன்னுடைய இடத்தை உறுதி செய்து விடுவார் என்று நினைக்கிறேன்”

இதையும் படிங்க: இதான் சிஎஸ்கே மேஜிக்.. துபே சொல்றது உண்மை தான்.. ஆர்சிபி அணியில் அது இல்லை.. ஏபிடி பேட்டி

“ஒருவேளை தன்னுடைய அணி 0/2 என தடுமாறும் போது எதிரே இடது கை ஸ்பின்னர் இருந்தாலும் கூட அவர் சிக்சர்களை அடிப்பார். ஏனெனில் அது தான் அவருடைய ஸ்டைல். அதை மாற்ற மாட்டார். அது தான் நம்முடைய பலம் என்பதை அவர் அறிவார். எனவே அந்த பவுலரிடம் முதல் பந்து அப்படி கிடைத்தால் அதை சிவம் துபே சிக்ஸராக அடிப்பார். அது அப்படித்தான் இருக்க வேண்டும்” என்று கூறினார்.

Advertisement